"குருநகர் புனித யாகப்பர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
'வாளேந்திய கடவுள்' என மக்களால் புகழ்ந்து அழைக்கப்பட்ட போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ ஒலிவேறா மாதாவின் தீவிர பக்தி கொண்டவன். அத்துடன் போர்த்துக்கேயர் தமது ஆளுமைக்குட்பட்ட இடங்களிலெல்லாம் பெரும்பாலும் மரியாள் (தேவமாதா) பக்தியை முதன்மைப்படுத்தியே ஆலயங்களை உருவாக்க ஊக்குவித்;துள்ளனர். அவ்வாறிருக்கும்போது இம்மக்கள் யாகப்பர் அப்போஸ்தலர் பெயரில் கோவிலை உருவாக்க காரணம் எழவில்லை எனினும் இரண்டு காரணங்கள் முன்வைக்ப்பட்டுள்ளன.
# ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் முதல் கிளம்பிய கத்தோலிக்கிய இலக்கியமான சந்தியோகுமையோர் அம்மானை போர்த்துக்கீசர் காலத்தையதாகும். தெல்லிப்பளை பேதுருப்புலவரால் கிளாலியில் கோவில் கொண்ட தூய சந்தியோகுமையோரைப் பாடுபொருளாகக் கொண்டதாக அம்மானை அமைந்தது. '1647ம் ஆண்டு அம்மானை எழுதப்பட்டது. 1620ல் கிளாலியில் சந்தியோகுமையோர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்தது. இதே காலகட்டத்தில்தான் ஊர்காவற்றுறையிலும் சந்தியோகுமையோர் ஆலயம் உருவாக்கப்பட்டது. ஊர்காவற்றறையும்-கிளாலியும்- அலுப்பாந்தியும் துறைமுக நகரங்களாகையால் இந்நகரங்களுக்கிடையே நிலவிய போக்குவரத்து வர்த்தக தொடர்புகள் காரணமாக புனித சந்தியோகுமையோர் பேரில் ஏற்பட்ட நம்பிக்கை, பக்தியினால் குருநகில் சிற்றாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலைத் தங்கள் சீவியத்துக்கு உயிருட்டும் தொழிலாகக் கைக்கொண்டனர். எனவே இத்தொழிலுக்கும் தமக்குப் பாதுகாவலராக யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவரும், மீன்பிடித் தொழிலைச் செய்தவருமான சந்தியோகுமையோர், யாக்கோ படையாளி என்று அழைக்கப்படும் அர்ச். பெரிய யாகப்பரை தெரிந்து கொண்டனர். எனவே தமது பாதுகாவலராகத் தெரிந்து கொண்ட புனிதரின் பொயரில் சிற்றாலயத்தை உருவாக்கியுள்ளனர்.
 
புனித யாகப்பரின் பாதுகாவலைக் கொண்ட மக்கள் ஆழ் கடலில் மட்டுமன்றித் தரையிலும் இன்னலின்றிக் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். என்றும் அவரது துணை தமக்கு அவசியம் எனக்கருதினார்கள். அந்த நம்பிக்கையில் அடிப்படையிலே யாகப்பரின் பெயரில் சிற்றாலயம் அமைக்கப்பெற்றது.
== புனித யாகப்பர் ஆலயப் பங்கு ==
புனித யாகப்பர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 17.07.1892 தனிப்பங்காக இயங்கத் தொடங்கும் வரை அனைத்துப் பணிகளும் யாழ். புரி கொஞ்சேஞ்சி மாதா கோவிலிலேயே ( மேற்றிராசனக் கோவில்) இடம் பெற்றுள்ளன. புனித யாகப்பர் ஆலயப் பங்கை போன்று யாழ். மாவட்டத்திலிருந்து ஆறு பங்குகள் இணைந்து ஒரு நிர்வாகப் பிரிவாக பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் அப்போது இருந்துள்ளது. இதனால் புனித யாகப்பர் ஆலயப் பங்கில் வாழ்ந்த மக்களின் திருச்சபை சார்ந்த அத்தியவசியப் பதிவுகளான ஞானஸ்தானம், முதன்நன்மை, உறுதிப்பூசுதல், திருமணம், இறப்பு போன்றவை மேற்றிராசனக் கோவிலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவற்றுக்குரிய நிகழ்வுகளும் அங்கேயே நிகழ்ந்துள்ளன. பரி.கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருவிழாவில் 10ஆம், 11ஆம் நோவனைகளையும், பாஸ்கு காலத்தின் புனித வாரத்தில் நடைபெற்ற 'உடக்குப்பாஸ'; காண்பித்தலின் போது 8ம் பிரசங்கம் வாசிப்பதையும் இவர்களே பொறுப்பேற்று செய்துவந்துள்ளார்கள். கோவில் நிர்வாகத்திலும் இணைந்து செயற்பட்டதுடன் பொறுப்பான பதவிகளையும் வகித்துள்ளார்கள்.
'இக் கோவில் தொடங்கிய அக் காலத்திலே இத் தேவாலயத்துக்கு இப்போது சேர்த்திருக்கும் அவ்வளவு விஸ்தாரமான நிலம் இருந்திருக்கவில்லை. இக்கோயில் கட்டுவதற்கான நிலத்தை சிலர் நன்கொடையாகக் கொடுத்தவர்கள் இக் கோவிற் திருநாளாகிய ஆவணித் திருநாளின் 10ம் 11ம் நோவனைகளைத் தற்காலம் நடத்திவருபவர்களின் முன்னோராகிய தொம்மைப்பிள்ளை அந்தோணிப்பிள்ளையும்இ அரசு நிலையிட்ட முதலியார் பெண் மரியைப்பிள்ளையும் சுவாம்பிள்ளை சூசைப்பிள்ளையாரும், பிலிப்பர் நீக்கிலாப்பிள்ளையும் நல்லதம்பி முதலியவர்களுமாம்'. இவை மட்டுமன்று. ஆலயத்தின் தேவைகளுக்கேற்ப பல அன்பளிப்புக்களையும் செய்துள்ளார்கள். '1883 ஆம் ஆண்டு எம். எம். எதிர்மன்னசிங்கம் என்பவர் அடுத்த வருட பாஸ்குத் திருநாள் பாவனைக்காக ஒரு பெரிய சிலுவையைச் செய்வித்துக் கொடுத்தார்' மற்றும் 1908 ஆம் ஆண்டு எம்.பி. எதிர்மன்னசிங்கி என்பவர் ஆசந்தி அன்பளிப்புச் செய்துள்ளார். அதற்கு அடையாளமாக ஆசந்தியில் 'M.P. Edirmanasinche 4.6.1908 எனக் குறிப்புக் காணப்படுகின்றது.
மேற்றிராசனக் கோவிலில் ஒன்றித்த நிர்வாகத்திற்கு மேற்குறித்தவை போன்று பலவகையிலும் உறுதுணை வழங்கிவந்துள்ளார்கள். புனித யாகப்பர் ஆலயம் தனிப்பங்காக பிரிக்கப்பட்ட போது யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தையும்இ குருநகர் புதுமை மாதா ஆலயத்தையும் இணைத்து ஒரே நிர்வாக அலகாக உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டு ஆலயங்களினதும் பணிகள், பதிவுகள், நிகழ்வுகள் யாவும் புனித யாகப்பர் ஆலயத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. Mandate of the Delegate Apostolic, dated 30 Oct 1895 அறிக்கையின்படி 30.10.1895 இல் இம் மூன்று ஆலயங்களிலும் 2045 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள். இந்தத் தொகை அன்றைய மேற்றிராசனக் கோவில் கத்தோலிக்கர் தொகையில் சரிபாதியாகும். 28.07.1909 யாழ். அடைக்கல அன்னை ஆலயம் புனித யாகப்பர் பங்கில் இருந்து பிரிந்து தனிப்பங்கு ஆனது. இதன் பின்னர் 1917 இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பரி. புதுமைமாதா ஆலய மக்களையும் சேர்த்து புனித யாகப்பர் ஆலயப் பங்கில் 1764 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள்.
இன்றுவரை குருநகர் புனித யாகப்பர் பங்கில் உள்ளடக்கப்பட்டுள்ள குருநகர் பரி. புதுமை மாதா ஆலயமானது முன்னர் களிமண்ணால் அமைக்கப்பட்ட சிற்றாலயமாக இருந்தாகப் பாரம்பரியம் உள்ளபோதும், 1850 ஆம் ஆண்டளவில் பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருத்தம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட தூண் மரங்களைக் கொண்டு 28.08.1887 இல் இவ் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதாகும்.
 
== ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் ==
றெபேய்ரோ1624 இல் ஞானஸ்நானம் பெற்ற குருநகர் மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அதே ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படும் அர்ச். சந்தியோகுமையோர் சிற்றாலயத்தில் 01.11.1783 இல் வண. பிதா ஐோய்ஸ்றெபேய்ரோ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்களின் ஆன்மீகத் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப ஆலயத்தில் செய்யப்பட்ட தூர நோக்க சிந்தனையுடனான திருத்தங்களில் ஒன்றாக, மேல்மாடியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் வரலாற்றுப் பெருமைக்கு சான்றாக விளங்கியது. இந்த ஆலயம் 1850 இல் திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களின் பெருக்கத்திற்கேற்ப எதிர்கால இடர்களைக் களையும் முகமாக, வரலாற்றில் இடம்பெற்ற பெரு வளர்ச்சியாக பலராலும் புகழ்ந்து பேசப்படும் அழகிய தூபிமாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய ஆலயம் வரை காணப்பட்ட வியத்தகு வளர்ச்சியை கால அடிப்படையில் பட்டியலிடுவதே சாலச் சிறந்தது என்பதால் அத்திபாரமிடப்பட்ட 25.07.1861 இன்றுவரை தொடராக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின், சில திகதிகள் ஆலயத்தின் திகதிகள் ஆலயத்தின் வெளிப்பக்க கதவு, யன்னல் நிலைகளுக்கு மேலே பொறிக்கப்பட்டுள்ளன.
1624 இல் ஞானஸ்நானம் பெற்ற குருநகர் மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அதே ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படும் அர்ச். சந்தியோகுமையோர் சிற்றாலயத்தில் 01.11.1783 இல் வண. பிதா ஐோய்ஸ்
றெபேய்ரோ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்களின் ஆன்மீகத் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப ஆலயத்தில் செய்யப்பட்ட தூர நோக்க சிந்தனையுடனான திருத்தங்களில் ஒன்றாக, மேல்மாடியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் வரலாற்றுப் பெருமைக்கு சான்றாக விளங்கியது. இந்த ஆலயம் 1850 இல் திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களின் பெருக்கத்திற்கேற்ப எதிர்கால இடர்களைக் களையும் முகமாக, வரலாற்றில் இடம்பெற்ற பெரு வளர்ச்சியாக பலராலும் புகழ்ந்து பேசப்படும் அழகிய தூபிமாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய ஆலயம் வரை காணப்பட்ட வியத்தகு வளர்ச்சியை கால அடிப்படையில் பட்டியலிடுவதே சாலச் சிறந்தது என்பதால் அத்திபாரமிடப்பட்ட 25.07.1861 இன்றுவரை தொடராக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின், சில திகதிகள் ஆலயத்தின் திகதிகள் ஆலயத்தின் வெளிப்பக்க கதவு, யன்னல் நிலைகளுக்கு மேலே பொறிக்கப்பட்டுள்ளன.
* 25.07.1861: பிரமாண்டமான புதிய சந்தியோகுமையோர் ஆலயத்திற்கான அத்திபாரக்கல் வண. லெயோ மொறுவா அடிகளாரில் நாட்டப்பட்டது.
* 1864: கரையூர் குடியிருப்பிலிருந்த மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக ஆலய வளவில் 18 அடி விட்டத்தையும் 35 அடி ஆழத்தையுடைய கிணறு தோண்டி கட்டப்பட்டது.
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2163217" இருந்து மீள்விக்கப்பட்டது