சுபாஷிணி கனகசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ~AntanO4taskஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி links added
வரிசை 3:
முனைவர்.சுபாஷிணி கனகசுந்தரம்
 
மலேசியாவின்  [[பினாங்கு]] மாநிலத்தில் பிறந்தவர். பெற்றோர் திரு.கனகசுந்தரம், மறைந்த திருமதி ஜனகபூஷணி ஆகியோர். திருமதி.ஜனகபூஷணி, "ஜனகாசுந்தரம்" என்ற பெயரில் மலேசிய சூழலில்  தமிழ் எழுத்தாளராக வலம் வந்தவர்.
 
முனைவர்.சுபாஷிணி பினாங்கு மாநிலத்தின் தனது இளமைக்காலக்கல்வியைத் தொடங்கி  பின்னர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள [https://www.usq.edu.au/ சவுதர்ன் குவின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில்] கணிணித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பினாங்கு மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சில ஆண்டுகள் விரிபுரையாளராகப் பணியாற்றினார். இவர் இளம் வயது முதல் சமூக நடவடிக்கைகளில் விரிவான ஆர்வம் கொண்டிருந்தார். மலேசிய இந்து சங்கம், பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியற்றில் சமூக சேவை செய்து வந்ததோடு இளம் சிறார்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வகுப்புக்களை ஏற்படுத்தி தமிழ், தேவாரப் பாடல்கள் பயிற்சி, தமிழ்க்கணினி ஆகியன பயிற்றுவிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
 
முனைவர் சுபாஷிணி தனது முதுகலைப்பட்டத்தை  ஜெர்மனியில் உள்ள [http://www.hs-esslingen.de/en/ எஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில்] கணினி இயந்திரவியல் துறையில் மேற்கொண்டார். பட்டம் பெற்றபின்னர் ஜெர்மனியின் ஹ்யூலட் பக்கார்ட் நிறுவனத்தில் பணியைத் தொடங்கியவர் இன்று இந்த நிறுவனத்தின் ஐரோப்பிய பகுதி தலைமை பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
 
1990களின் இறுதிக்காலகட்டத்தில் இணையத்தில் தமிழ் முயற்சிகள் தொடங்கியபோது வலைத்தளங்கள் அமைத்தல், தமிழ் மடலாடற் குழுமங்களில் கருத்து பரிமாற்றம், தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். தமிழ் கணினித்துறை ஆய்வுகளுக்காக உருவான உத்தமம் என்ற அமைப்பில் அதன் தொடக்கம் முதல் பங்களித்து வருகின்றார். உத்தமத்தின் செயற்குழுவில் தொடர்ச்சியாக 2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இருந்துள்ளார். உத்தமம் ஐரோப்பிய கிளையின் செயலாளராகவும் இருந்ததோடு 2001ம் ஆண்டு தொடங்கி தமிழ்க்கணினி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை ஆண்டுக்கருத்தரங்கத்தில் படைத்துள்ளார். கணினி இயந்திரத்துறை தொடர்பான பாடத்திட்டங்களை தமிழில் இளம் மாணவர்களுக்குப்  பயிற்றுவிக்கும் ஒரு கருத்தை உருவாக்கி டிஜிட்டல் கிராமம் என்று பெயரிட்டு அதன் செயல்முறைத் திட்டங்களை கருத்தரங்குகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய  பகுதி தொடர்பாளராக இருந்து வருகின்றார். இதன் வழி ஐரோப்பாவில் வாழும் தமிழர்களில் ஆறு மாணவர்கள் இவர் துணையோடு தமிழில் பட்டம் பெற்றுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷிணி_கனகசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது