சுபாஷிணி கனகசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 11:
1990களின் இறுதிக்காலகட்டத்தில் இணையத்தில் தமிழ் முயற்சிகள் தொடங்கியபோது வலைத்தளங்கள் அமைத்தல், தமிழ் மடலாடற் குழுமங்களில் கருத்து பரிமாற்றம், தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். தமிழ் கணினித்துறை ஆய்வுகளுக்காக உருவான உத்தமம் என்ற அமைப்பில் அதன் தொடக்கம் முதல் பங்களித்து வருகின்றார். உத்தமத்தின் செயற்குழுவில் தொடர்ச்சியாக 2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இருந்துள்ளார். உத்தமம் ஐரோப்பிய கிளையின் செயலாளராகவும் இருந்ததோடு 2001ம் ஆண்டு தொடங்கி தமிழ்க்கணினி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை ஆண்டுக்கருத்தரங்கத்தில் படைத்துள்ளார். கணினி இயந்திரத்துறை தொடர்பான பாடத்திட்டங்களை தமிழில் இளம் மாணவர்களுக்குப்  பயிற்றுவிக்கும் ஒரு கருத்தை உருவாக்கி டிஜிட்டல் கிராமம் என்று பெயரிட்டு அதன் செயல்முறைத் திட்டங்களை கருத்தரங்குகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய  பகுதி தொடர்பாளராக இருந்து வருகின்றார். இதன் வழி ஐரோப்பாவில் வாழும் தமிழர்களில் ஆறு மாணவர்கள் இவர் துணையோடு தமிழில் பட்டம் பெற்றுள்ளனர்.
 
2000ம் ஆண்டு [[தமிழ் மரபு அறக்கட்டளை]] என்னும் அமைப்பை பேராசிரியர்.டாக்டர்.நாகண்ணனுடன் இணைந்து ஏற்படுத்தி இணைய வெளியில் தமிழர் தம் வரலாற்றையும், புராதனச் சின்னங்களையும், அரிய தமிழ்ச்சுவடி ஆவணங்களையும், சிற்பங்களையும் பாதுகாக்கும் முயற்சியைத் தொடங்கினார் இந்த முயற்சியில்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. முனைவர் சுபாஷிணி ஒவ்வொரு ஆண்டும் சில வாரங்கள் தமிழகத்திற்குச் சென்று  அங்கே களப்பணிகளை மேற்கொண்டு வாய்மொழி இலக்கியங்கள், சிற்பங்கள், கோயில் கட்டுமானங்கள், கல்வெட்டுக்கள், பண்டைய வழிபாட்டு முறைகள், தமிழர் பண்டைய வாழ்வியல் கூறுகள் என பலதரப்பட்ட தகவல்களை எண்ணிம வடிவில் சேகரித்து ஆய்வுகள் செய்து தொடர்ந்து மின்வெளியில் வெளியிட்டு வருகின்றார். இந்த முயற்சியின் வழி இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தின் அரிய தமிழ் நூல்கள் சிலவும் மின்னாக்கம் செய்யபப்ட்டன. அண்மையில் இவர் டென்மார்க், [http://www.kb.dk கோப்பன்ஹாகன் அரச நூலகத்தின்] சேகரிப்பில் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகள் பழமையான முப்பதெட்டு [http://www.kb.dk/en/nb/samling/os/Sydost/palmeblade.html தமிழ் கையெழுத்து ஓலைச்சுவடி] நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முனைவர் சுபாஷிணி ஒதுவரை ஏறக்குறை 500க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தனது பயனத்தின் போது  சொற்பொழிவுகளை வழங்கியுள்ளதோடு குறிப்பிடத்தக்க அனைத்துலக கருத்தரங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கின்றார்.
வரிசை 22:
* [http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html தலபுராணங்கள்]
* [https://www.youtube.com/channel/UC9N9w5u2NhnX4OV6CKu5mvA YouTube விழியம் ]
* [https://groups.google.com/forum/#!forum/minTamil மின் தமிழ் - மடலாடற்குழு ]
 
<references group="http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation" />
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷிணி_கனகசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது