சோழர் காலக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில் புதிய பதிவு இணைப்பு தரப்பட்டது
வரிசை 3:
 
==ஆரம்ப காலம்==
சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் அவை அளவிலும் சிறியவையாக உள்ளன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள [[சுந்தரேஸ்வரர்திருக்கட்டளை கோயில்,சுந்தரேசுவரர் திருக்கட்டளைகோயில்|சுந்தரேஸ்வரர் கோயில்]], [[நார்த்தாமலை]]யில் உள்ள [[விஜயாலயன் கோயில், நார்த்தாமலை|விஜயாலயன் கோயில்]], கொடும்பாளூரிலுள்ள [[மூவர்கோயில், கொடும்பாளூர்|மூவர்கோயில்]] என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர [[கடம்பர்மலை]], [[குளத்தூர்]], [[கண்ணனூர்]], [[கலியபட்டி]], [[திருப்பூர்]], [[பனங்குடி]] போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.
 
இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் [[கோயில்|கோயில்கள்]] அனைத்தும் முழுமையாகக் [[கருங்கல்|கருங்கற்களினால்]] ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது [[பல்லவர் காலக் கட்டிடக்கலை|பல்லவர்]] காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_காலக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது