சிமித்சோனிய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
பிரித்தானிய அறிவியலாளர் சேம்சு சிமித்சன் (James Smithson) தனது செல்வத்தில் பெரும்பகுதியைத் தனது மருமகன் என்றி சேம்சு அங்கர்போர்டு (Henry James Hungerford) என்பவருக்கு விட்டுச் சென்றார். 1835ல் அங்கர்போர்டு பிள்ளைகள் இல்லாமல் இறந்தபோது,<ref name=nephewdead>{{cite book|last=Goode|first=George Brown|title=The Smithsonian Institution, 1846–1896, The History of Its First Half Century.|year=1897|publisher=De Vinne Press|location=Washington, D.C.|page=25|url=http://siris-sihistory.si.edu/ipac20/ipac.jsp?session=133GO29212E47.369&profile=sicall&source=~!sichronology&view=subscriptionsummary&uri=full=3100001~!464~!16&ri=1&aspect=power&menu=search&ipp=20&spp=20&staffonly=&term=smithson+james&index=.SW&uindex=&aspect=power&menu=search&ri=1&limitbox_1=LO01+=+sch&ultype=.YW&uloper=%3C&ullimit=1966}}</ref> சிமித்சனின் விருப்புறுதியின்படி "மனிதரிடையே அறிவை வளர்ப்பதற்கும் பரப்புவதற்குமான நிறுவனம் ஒன்றை வாசிங்டனில், சிமித்சோனிய நிறுவனம் என்ற பெயரில் நிறுவுவதற்காக சொத்துக்கள் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துக்குச்" சென்றது.<ref name=will>{{cite web|title=James Smithson – Founder of the Smithsonian, Last Will and Testament|url=http://siarchives.si.edu/history/exhibits/documents/smithsonwill.htm|work=Smithsonian Scrapbook: Letters, Diaries and Photographs from the Smithsonian Archives|publisher=Smithsonian Institution|accessdate=October 4, 2012}}</ref> அமெரிக்கக் காங்கிரசு, 1836 யூலை முதலாம் தேதி, நாட்டுக்கு வழங்கப்பட்ட இந்தக் கொடையை ஏற்றுக்கொண்டதுடன் இந்த அறக்கட்டளையின் நோக்கங்களை அடைவதற்கும் உறுதியளித்தது.<ref name=foundingfactsheet>{{cite web|title=Founding of the Smithsonian Institution|url=http://newsdesk.si.edu/factsheets/founding-smithsonian-institution|work=Fact Sheets, Smithsonian Newsdesk|publisher=Smithsonian Institution|accessdate=October 4, 2012}}</ref> இந்தச் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அமெரிக்க இராசதந்திரியான ரிச்சார்டு ரசு (Richard Rush) என்பவரை அப்போது சனாதிபதியாக இருந்த ஆன்ட்ரூ சாக்சன் (Andrew Jackson) இங்கிலாந்துக்கு அனுப்பினார். 1838 ஆகத்து மாதத்தில் அக்காலத்தில் ஏறத்தாழ $500,000 பெறுமதியான (2016ல் பெறுமதி ஏறத்தாழ $11,245,000) 104,960 தங்க நாணயங்களைக் கொண்ட 105 பைகளுடன் ரசு நாடு திரும்பினார்.<ref name=gardens>{{cite book|last=Ottesen|first=Carole|title=A Guide to Smithsonian Gardens|year=2011|publisher=Smithsonian Books|isbn=978-1-58834-300-0|page=13}}</ref>
 
பணம் கைக்கு வந்த பின்னர் எட்டு ஆண்டுகளாக சிமித்சனின் "அறிவின் வளர்ச்சிக்கும் பரவலுக்குமாக" என்னும் தெளிவற்ற விருப்பத்தைப் புரிந்து கொள்வதில் காங்கிரசில் சர்ச்சை நிலவியது. அதேவேளை கிடைத்த பணம் ஆர்கென்சாசு மாநிலத்தால் வெளியிடப்பட்ட ஐக்கிய அமெரிக்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் இது முறிவு நிலைக்கு வந்துவிட்டது. பலத்த விவாதங்களுக்குப் பின்னர் பின்னாணில் சனாதிபதியான அப்போதைய மசச்சூசெட்சு பிரதிநிதி [[சான் குயின்சி ஆடம்சு]] இழந்த பணம் முழுவதையும் வட்டியுடன் திருப்பித்தர காங்கிரசை ஒப்புக்கொள்ள வைத்ததுடன், இந்தப் பணத்தை அறிவியலுக்கும் கல்விக்குமான நிறுவனம் ஒன்றை உருவாக்க ஒதுக்குவதற்குக் காங்கிரசு உறுப்பினர்களைச் சம்மதிக்கவும் வைத்தார். இறுதியாக 1846 ஆகத்து 10 ஆம் தேதி சனாதிபதி சேம்சு கே. போல்க், ஐக்கிய அமெரிக்காவின் ஒரு அறங்காவலர் மேலாண்மை நிறுவனமாக சிமித்சோனிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான சட்ட விதிகளில் கையெழுத்திட்டார். இந்நிறுவனம் ஒரு ஆட்சிக்குழுவினாலும் ஒரு செயலராலும் நிர்வாகம் செய்யப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிமித்சோனிய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது