சிமித்சோனிய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
==வளர்ச்சி==
சிமித்சோனிய நிறுவனத்தின் முதற் செயலர் யோசெப் என்றி அந்நிறுவனம் ஒரு அறிவியல் ஆய்வுக்கான மையமாக இருக்கவேண்டும் என விரும்பினாலும்,<ref>{{Cite book| publisher = University of Alabama Press| isbn = 978-0-8173-1204-6| last = Orosz| first = Joel J.| title = Curators and Culture: The Museum Movement in America, 1740-1870| date = 2002-06-28}}{{rp|155}}</ref> அது வாசிங்டனதும், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தினதும் சேகரிப்புக்களுக்கான ஒரு வைப்பகமாகவும் செயற்பட்டது.<ref>{{Cite book| publisher = University of Alabama Press| isbn = 978-0-8173-1204-6| last = Orosz| first = Joel J.| title = Curators and Culture: The Museum Movement in America, 1740-1870| date = 2002-06-28}}{{rp|157}}</ref> 1838 - 1842 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை உலகைச் சுற்றிய [[ஐக்கிய அமெரிக்க ஆய்வுப் பயணம்|ஐக்கிய அமெரிக்க ஆய்வுப் பயணத்தை]] மேற்கொண்டது.<ref name="University of Washington Press">{{Cite book| publisher = University of Washington Press| isbn = 978-0-295-98239-7| last1 = Benson| first1 = Keith Rodney| last2 = Rehbock| first2 = Philip F.| title = Oceanographic History: The Pacific and Beyond| date = 2002}}{{rp|532}}</ref> இப்பயணத்தின்போது, ஆயிரக் கணக்கான விலங்கு மாதிரிகள், 50,000 பாதுகாக்கப்பட்ட தாவர மாதிரிகள், பல்வேறுபட்ட விலங்கின ஓடுகள் கனிமங்கள், வெப்பமண்டலப் பறவை மாதிரிகள், கடல் நீரைக்கொண்ட சாடிகள், தென் பசுபிக் பகுதியில் கிடைத்த இனவரைவியல் அரும்பொருட்கள் போன்றவை பெருமளவில் திரட்டப்பட்டன. இவை சிமித்சோனிய நிறுவனச் சேகரிப்புக்களின் ஒரு பகுதி ஆயின.<ref>{{Cite journal|last=Adler|first=Antony|date=2011-05-01|title=From the Pacific to the Patent Office: The US Exploring Expedition and the origins of America's first national museum|url=http://jhc.oxfordjournals.org/content/23/1/49|journal=Journal of the History of Collections|language=en|volume=23|issue=1|pages=49–74|doi=10.1093/jhc/fhq002|issn=0954-6650}}</ref> இதைப்போலவே மெக்சிக்க எல்லை மதிப்பாய்வு, பசிபிக் தொடர்வண்டிப்பாதை மதிப்பாய்வு போன்ற மேற்கு அமெரிக்கப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் கிடைத்த சேகரிப்புக்களும் சிமித்சோனிய நிறுவனத்துக்கே வந்து சேர்ந்தன. மேற்படி ஆய்வுகள் மூலம் தாயக அமெரிக்க கலைப் படைப்புக்களும், இயற்கை வரலாற்று மாதிரிகளும் கிடைத்தன.<ref>{{Cite book| publisher = Рипол Классик| isbn = 978-5-88160-802-6| last1 = Baird| first1 = S. F.| last2 = Emory| first2 = W. H.| title = Report on the United States and Mexican boundary survey}}{{rp|13}}</ref>
 
===அருங்காட்சியகமும் கட்டிடங்களும்===
[[சிமித்சோனிய நிறுவனக் கட்டிடம்|சிமித்சோனிய நிறுவனக் கட்டிடத்தின்]] ("த காசில்") கட்டுமான வேலைகள் 1849ல் தொடங்கின. கட்டிடக்கலைஞர் இளைய யேம்சு ரென்விக் என்பவாரால் வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடத்தின் உள்ளக அலங்கார வேலைகள் பொது ஒப்பந்தகாரர் கில்பர்ட் கமெரூனால் நிறைவௌ செய்யப்பட்டு, 1855ல் திறந்துவைக்கப்பட்டது. சிமித்சோனிய நிறுவனத்தின் முதல் விரிவாக்கம், 1881ல் கட்டப்பட்ட [[கலைகள் தொழிற்றுறைகள் கட்டிடம்]] ஆகும். 1876ன் பிலடெல்பியா நூற்றாண்டுக் கண்காட்சி போதிய வருமானம் ஈட்டினால் அருங்காட்சியகத்துக்குப் புதிய கட்டிடம் ஒன்றை அமைத்துத் தருவதாக காங்கிரசு உறுதியளித்திருந்தது. அக்கண்காட்சி இலாபம் ஈட்டியதால், புதிய கட்டிடம், ஐக்கிய அமெரிக்க இராணுவப் பொறியாளர் குழுவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மொன்ட்கொமரி சி. மெயிக்சு என்பவர் முன்னர் தயாரித்த திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு கட்டிடக்கலைஞர்களான அடோல்ப் குளுசு, பால் சுல்சே ஆகியோரால் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இக்கட்டிடம் 1881 இல் திறந்து வைக்கப்பட்டது.
 
சிமித்சோனிய நிறுவனத்தின் வாழும் விலங்குகள் பிரிவுக்காக 1889 இல் தேசிய விலங்கியல் பூங்கா திறந்துவைக்கப்பட்டது. முதலில் "த காசில்" கட்டிடத்திலும், பின்னர் கலைகள் தொழிற்றுறைகள் கட்டிடத்திலும் இருந்த இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்துக்காக 1911ல் புதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிமித்சோனிய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது