"பேச்சு:வாழைக் குடும்பம் (தாவரவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12,958 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
+ஐயமுள்ள தரவுகள்
சி (பதிலுரை)
சி (+ஐயமுள்ள தரவுகள்)
:::[[விக்கிப்பீடியா:பதிப்புரிமை]], {{tl|பதிப்புரிமை மீறல்}} --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 05:37, 18 பெப்ரவரி 2016 (UTC)
:இதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. தற்போது உறைவிட விக்கிபீடியர் பணியடர்வு இருப்பதால், பின்னர் கலந்துரையாட விரும்புகிறேன். உரிமை மீறல் இல்லாதவைகளை விட்டுவிட்டு, மற்றவற்றை இப்பக்கத்திற்கு நகர்த்த வேண்டுகிறேன். பின்னர் பலரின் கருத்தினை அறிய உரையாட ஏதுவாக இருக்கும்--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:03, 3 மார்ச் 2016 (UTC)
 
=காப்புரிமை ஐயமுள்ள தரவுகள்==
== தோற்றம் ==
=== வளரியல்பு ===
பெரிய அளவினையுடைய பல்லாண்டு சிறுசெடிகள், தரையடித் தண்டான ரைசோம் மூலம் தொடர்ந்து பல ஆண்டுகள் உயிர் வாழ்பவை (எ.கா. மியூஸா
பாரடிஸியாகா - வாழை), அரிதாக மரங்கள் (எ.கா. ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் - பயணிகளின் பனை) தாவரப் பாகங்கள் நீர் போன்ற
சாறினைக் கொண்டுள்ளன.
 
=== வேர் ===
பொதுவாக வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது.
 
=== தண்டு ===
மியூசா'வில் உண்மையான தண்டு தரையடி 'ரைசோம்' ஆகும். தரைக்கு மேல் காணப்படும் கிளையற்ற, நிமிர்ந்த தண்டு போன்றப் பகுதி பொய்த் தண்டாகும். இது நீண்ட கடினமான மற்றும் அகன்ற உறைபோன்ற பல இலையடிப் பகுதிகள் ஒன்றையொன்று தழுவி உருவான தரைமேல் பொய்த்தண்டாகும். பொய்த்தண்டுக்குள்ளாக அடிப்பகுதியில் மறைந்து காணப்படும் மைய அச்சு - வாழைத்தண்டு- எனப்படும். மலர் உருவாகும் பருவத்தில் இவ்வாழைத் தண்டு நீட்சியடைந்து, பொய்த்தண்டினை துளைத்துக் கொண்டு நுனிப்பகுதியில் மஞ்சரியை உற்பத்தி செய்கிறது. 'மியூஸா' தனது வாழ்காலத்தில் ஒரு முறை மட்டுமே மலர்களை உற்பத்தி செய்து கனிகளைத் தருகிறது. எனவே இது ஒருமுறை மட்டுமே மலர்ந்து கனி கொடுக்கும் 'மானோகார்பிக்' பல்லாண்டு தாவரமாகும். ராவனெலாவில் தரைக்கு மேல் வளரும் கட்டைத் தன்மை உடைய உண்மைத் தண்டு காணப்படுகிறது.
 
=== இலை ===
தனி இலை, நீண்ட உறுதியான இலைக் காம்புடன் பெரிய இலைத்தாளையுடையது. இளைத்தாள் வட்ட நுனி உடையது. இலையடி
உறையுடையது. இலையடி செதிலற்றது. விளிம்பு வரை நீட்சியடைந்துள்ள, சிறகு இணைப்போக்கு, நரம்பமைப்பு உடையது. இலையமைவு 'மியூஸா'வில் சூழல் முறையிலும், 'ராவனெலா'வில் இருவரிசைகளிலும் அமைந்துள்ளன.
 
=== [[மஞ்சரி (செடி உறுப்பு)|பூந்துணர்]] ===
'மியூஸா'வில் கிளைத்த 'ஸ்பாடிக்ஸ்' பூந்துணர்(மஞ்சரி) காணப்படுகிறது. பூந்துணரின் மலர்கள் பெரிய, பகட்டான வண்ணமுடைய, சுழல் முறையில் அமைந்துள்ள. படகு போன்ற பூவடிச்செதில்களால் பாதுகாக்கப்படுகின்றன. இப்பூவடிச் செதில், மடல் என்றும் அழைக்கப்படும். மலர்கள் முதிர்ந்த பின், இம்மடல்கள் பின்நோக்கி சுருண்டு இறுதியாக உதிர்ந்து விடுகின்றன. 'மியூஸா பாலிகேமஸ்' தாவரமாகும். அதாவது ஆண்மலர்கள், பெண்மலர்கள் மற்றும் இருபால் மலர்கள் ஒரே தாவரத்தில் உள்ளன. மஞ்சரியின் மேல் மடல்களுக்குள்ளாக ஆண் மலர்களும், கீழ் மடல்களுக்குள்ளாக பெண் மலர்களும், நடுவ மடல்களுக்குள்ளாக இருபால் மலர்களும் உள்ளன. 'ராவனெலா'வின் பூந்துணர், கூட்டு 'சைம்' ஆகும்.
 
==== மலர்கள் ====
பூவடிச் செதிலுடையவை, பூக்காம்புச் செதிலற்றவை. காம்பற்றவை. மூவங்கமலர்கள். ஒருபால் அல்லது இருபால் தன்மையுடையவை. ஒருபால்
தன்மை காணப்படின், மலர்கள் ஓரில்லம் கொண்டவை ஆகும். இருபச்ச சமச்சீர் உடையவை. சூலக கீழ் மலர்கள் ஆகும்.
 
== வட்டங்கள் ==
=== பூவிதழ் வட்டம் ===
பூவிதழ் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் அமைந்துள்ளன. பூவிதழ்கள் தனித்தவை அல்லது இணைந்தவை. 'மியூஸா'வில் வெளி அடுக்கின்
மூன்று பூவிதழ்களும், உள் அடுக்கின் இரு பக்கவாட்டு பூவிதழ்களும் தொடு இதழ் அமைவில் இணைந்து 5 பற்களை உடைய குழல் போன்ற அமைப்பு
உருவாகிறது. உள் அடுக்கின் மேல் பக்க பூவிதழ் தனித்து காணப்படுகிறது. இது பெரிதாகவும் மற்றும் மென்மையான சவ்வு போன்றும் உள்ளது.
 
=== மகரந்தத்தாள் வட்டம் ===
வழக்கமாக மகரந்தத்தாட்கள் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் பூவிதழ்களுக்கு எதிராக அமைந்துள்ளன. 'மியூஸா'வில் 5 மகரந்தத்தாட்கள்
மட்டுமே வளமானவை. உள் அடுக்கின் மேல் பக்க மகரந்தத்தாள் மலட்டு மகரந்தத்தாளாக காணப்படுகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் இருக்கும்.
'ராவனெலா'வில் 6 மகரந்தத்தாட்களும் வளமானவை. மகரந்தபைகள் ஈரறையுடையவை. நீள்வாக்கில் வெடிப்பவை, மகரந்த கம்பி இழை போன்றது.
சில ஆண் மலர்களில் முதிர்ச்சியடையாத சூலகம் அல்லது மலட்டு சூலகம் காணப்படுகிறது.
 
=== சூலக வட்டம் ===
*'''சூழகம்''' : கீழ் மட்ட சூற்பையுடையவை, மூன்று சூலிலைகளையுடையவை. இணைந்தவை, மூன்று சூலறைகளையுடையவை, பல சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையில் இணைந்துள்ளன. சூல் தண்டு தனித்த இழை போன்றது. சூல், முடி மூன்று மடல்களை உடையது.
 
*'''கனி''' : 'மியூஸா'வில் விதைகளற்ற நீண்ட 'பெர்ரி'யும், 'ராவனெலா'வில் வெடிகனியும் காணப்படுகிறது.
 
*'''விதை''' : கருவூண் அற்றது
 
== ஊடகங்கள் ==
<gallery>
படிமம்:Israel banana trees 3.JPG|''M. paradisiaca''
படிமம்:Musa textilis - Manila Hemp - desc-flower.jpg|''Musa textilis''
படிமம்:Abaca sachsenleinen 03.jpg|''Musa textilis''
படிமம்:Abaca sachsenleinen 01.jpg|''Musa textilis''
படிமம்:Kluay Tani26.JPG|''Musa balbisiana''
</gallery>
 
== பொருளாதாரப் பயன்கள் ==
=== உணவுத் தாவரங்கள் ===
''மியூஸா பாரடிஸியாகா''வின் (வாழை) கனிகள் உண்ணக்கூடியவை. வாழைக்காய், வாழைத்தண்டு, வாழை மலர்கள் ஆகியன சமைத்து உண்ணும்
காய்கறிகளாகும். [[திருவிழா]]க்களில் இதன் இலைகள், [[உணவு]] உண்ணும் தட்டாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலையடி உறையிலிருந்து பெறப்படும் சாறு, [[நல்ல பாம்பு|நல்ல பாம்பின்]] நச்சினை முறிக்கும் திறன் வாய்ந்தாக கருதப்படுகிறது. ''மியூஸா சைனன்சிஸ்'' (குட்டை நேந்திர வாழை)யிலிருந்து பெறப்படும் சிறிய வாழைப்பழம் உண்ணக்கூடிய சுவை மிகுந்த கனியாகும்.
 
=== நார்த் தாவரங்கள் ===
''மியூஸா டெக்ஸ்டைலிஸ்''ய (மணிலா நார்த்தாவரம்) என்ற தாவரத்தின் இலையடி உறையிலிருந்து பெறப்படும் நார்கள், 'அபாகா' துணி நெய்தலுக்கும்,
[[கயிறு]] தயாரிக்கவும் பயன்படுகின்றன. இது ''மணிலா நார்'' என்றும் அழைக்கப்படும். இத்தாவரம் [[பிலிப்பைன்சு]] நாட்டில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
 
=== அலங்கார தாவரம் ===
''ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ்'' (பயணிகளின் பனை), ''ஸடெரிலிட்சியா ரெஜினே'' (பறவைகளின் சொர்க்க மலர்). ''யஹலிகோனியா'ய சிற்றினம்
போன்றவை அலங்கார தாவரங்களாகும்.
 
 
== குறிப்புகள் ==
<references group="கு" />
<!-- <.ref group="கு"> -->
*சிறிது காலத்திற்கு, இவை இங்கு பேணப்பட்டு, பிறகு கட்டுரையாக வளர்க்கப்படும். அதன்பின்பு நீக்கப்படும்--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 14:15, 12 சனவரி 2017 (UTC)
22,322

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2169741" இருந்து மீள்விக்கப்பட்டது