மாமல்லபுரம் இராமானுச மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மாமல்லபுரம் இராமானுச மண்டபம்''' என்பது, தமிழ்நாட்டின் தலைநகரமான [[சென்னை]]க்குத் தெற்கே கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பழங்காலத் துறைமுக நகரமான [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] அமைந்துள்ள பல குடைவரைகளுள் ஒன்று. [[மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்|மகிடாசுரமர்த்தினி குடைவரைக்கும்]], கலங்கரை விளக்கத்துக்கும் இடையில் அமைந்துள்ள மிகப்பெரிய பாறை ஒன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. சிவனுக்குரியதாக அமைக்கப்பட்ட இது முழுமையாக முடிக்கப்பட்ட குடைவரையாக இருப்பினும், பிற்காலத்தில் வைணவரின் கட்டுப்பாட்டுக்குள் இது வந்தபோது இதிலிருந்த சைவச் சிற்பங்கள் செதுக்கி அகற்றப்பட்டுள்ளன.
 
==அமைப்பு==
செவ்வக வடிவான இதன் மண்டபத்தின் முகப்பை ஒட்டி ஒரு தூண் வரிசை உள்ளது. இதில் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களுடன் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதி இருக்கும் சிங்கத்தின் வடிவில் அமைந்தவை. பின்பக்கச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் இருந்த அடையாளம் காணப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_இராமானுச_மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது