பெருஞ்சேரி வாகீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெருஞ்சேரி வாகீசுவரர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:40, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

பெருஞ்சேரி வாகீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி என்னுடமித்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் உள்ளார். கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் காணப்படுகிறார். இங்குள்ள இறைவி சுவாதந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறார். கோயிலின் தல விருட்சம் பன்னீர் மரம் ஆகும். [1]

அமைப்பு

கோயில் வாயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. அடுத்து உள்ள திருச்சுற்றில் முதலில் கொடி மரம், நந்தி, பலி பீடம் ஆகியவை காணப்படுகின்றன. மூன்று நிலை ராஜ கோபுரத்தை அடுத்து மற்றொரு மண்டபம் உள்ளது. மண்டபத்தில் வலது புறம் அம்மன் சன்னதி அமைந்துள்ளது. மகாமண்டபத்தை அடுத்து கருவறையில் மூலவர் உள்ளார். விமானம் இந்திர விமான அமைப்பைச் சார்ந்ததாகும். திருச்சுற்றில் சரசுவதி சிவனை பூசிக்கும் சிற்பம் காணப்படுகிறது. தேவக்கோட்டத்தில் விநாயகர், சரசுவதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மேற்கில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும், கஜலட்சுமியும் உள்ளனர். அருகே வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. வட கிழக்கில் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. கிழக்கு திருச்சுற்றில் நான்கு பைரவர் சிலைகள் காணப்படுகின்றன.சிவராத்திரி இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]

தல வரலாறு

சிவனை அழைக்காமல் தக்கன் யாகம் நடத்தியபோது அதில் தேவர்களும், பிரம்மாவும் கலந்துகொண்டனர். பார்வதிதேவி அழைக்காமல் வந்த நிலையில் அவமானப்பட, அதனை அறிந்த சிவன் கோபமடைந்தார். உக்கிரமடைந்த வீரபத்திரர் கோபமடைந்து யாகத்தை அழித்ததுடன் அதில் பங்கேற்ற அனைவரையும் தண்டித்தார். வீரபத்திரனால் பாதிக்கப்பட்ட சரசுவதி தன் கணவரிடம் இந்நிலை குறித்து வருந்திக் கூறினாள். தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரசுவதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றாள். [1]

மேற்கோள்கள்