மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2172655 AntanO (talk) உடையது. (மின்)
சி மண்ணின் மகிமை
வரிசை 26:
 
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கக் கிளைகள் கிராமம் தோறும் அமைந்துள்ளது. மீசாலையின் மத்தியில் தபால் நிலையம்,புகையிரத நிலையம், மத்திய நூல் நிலையம் , பழ உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை நிலையம், என்பனவும் இலங்கையின் எந்தப்பகுதிக்கும் செல்லக்கூடிய முக்கிய பிரதான வீதியான A9 வீதி எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன்  பிரதான புகையிரத பாதையும் எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன் புகையிரத நிலையமும் அமைந்துள்ளது.    மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் மையவாடி(மயானம்) அமைந்துள்ளது. கிராமங்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு கிராமங்கள் தோறும் மீசாலை வடக்கு , மீசாலை கிழக்கு, மீசாலை மேற்கு என் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மீசாலை வடக்கு சனசமூகநிலையம் சுடர் ஒளி சனசமூகநிலையம் சிறீ முருகன்  சனசமூகநிலையம் மதுவன் வாசிகசாலை, வீனஸ் வாசிகசாலை என சனசமூகநிலையங்களும் மேலும் தாய் சேய் நிலையங்களும் அமைந்துள்ளது. கமநலச்சேவை நிலையமும் , கடந்த காலத்தில் ஓர் சந்தையானது மீசாலை புதுச்சந்தை என்ற பெயருடன் நடைபெற்று வந்தது. தும்புத்தொழிற்சாலையும் அமைந்திருந்தது. தற்போது மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விற்பனை நிலையங்களும், தொழில் சார் நிலையங்களும் கொண்டதாக மீசாலைப் பகுதியானது அமைந்துள்ளது.
 
== மண்ணின் மகிமை ==
ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும்இ தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது. அந்த வகையில் மீசாலை ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பனை, தென்னை, வேம்பு, தேக்கு, நாவல், மஞ்சலுண்ணா, போன்றவை பயன்தரு மரங்களாக உள்ளது. இதில் மாமரத்தின் இனங்களாக கறுத்தைக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு, பாண்டி, சேலம், கழைகட்டி, பச்சைத்தின்னி, வாழைக்காய்ச்சி, நாட்டான் என பல வகைப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இந்த வகையில் இக்கிராமம் மாசாலை எனவும் அது மருவி பின் மீசாலை என வந்ததாகவும் கூறுகின்றார்கள். மீசாலை மாம்பழமானது தரத்தாலும்இ சுவையாலும் பெயர் பெற்று விளங்குகிறது.அதில் கறுத்தைக்கொழும்பான் மாம்பழமானது மிகச் சுவையானதும் பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. அதே சமயம் மாம்பழங்களானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவையைப் பெற்றதாக அமைந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மாம்பழமானது நன்றாக முற்றியதாகவும் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாகவும் கனிந்து பழுத்த மாம்பழமானது ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காததாகவும் அமைந்துள்ளது. இந்த மாம்பழங்களை நாம் பறிக்கும் போது நிலத்தில் வீழ்ந்து காயம் ஏற்பட்டு பழுதுகள் ஏற்படாது இருக்க அத்தாங்கு என்று அழைக்கப்படும் உபகரணத்தைப் பாவிக்கப்படுகின்றது.இது ஒரு நீளமான தடியின் ஒரு பக்கத்தில் ஓர் கூடை  அல்லது பை இணைக்கப்பட்டு  மாம்பழத்தை மரத்தில் இருந்து பறிக்கும் போது கூடைக்குள் அல்லது பையிற்குள் விழக்கூடியதாகவும் நிலத்தில் விழாததாகவும் அமைந்திருக்கும். இது மாமரத்திற்கும் எல்லோரது பாவணையிலும் இருக்கும். மாம்பழத்தை நாம் தோலைச்சீவி வெட்டிச்சாப்பிடுவது வழக்கம். இருந்தும் இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தை ஒருசிலர் தோல் சீவாது முழுமையாக எடுத்து ஒரு பக்கத்தில் கடித்து சிறுதுவாரத்தை ஏற்படுத்தி சூப்பிச்சாப்பிடுவதுவழக்கம். இது ஓர் தனிச்சுவையாக இருக்கும்.  இதை மாங்கொட்டை சூப்பிகள் என சிறப்பாகவும் செல்லமாகவும் அழைப்பார்கள்.
 
எமது கிராமமானது மணல் பிரதேசமாக அமைந்துள்ளது. இந்தப்பிரதேசத்தில் உற்பத்திசெய்யப்பட்ட மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் என்பனவற்றின் சுவையானது தனிச்சிறப்பைக்  கொண்ட சிறப்பைப் பெற்றுள்ளது. மீசாலை மாம்பழம் பலாப்பழமானது எந்தப்பகுதியிலும் விட்டுக்கொடுக்காத தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த மண்ணும், மண்ணில் வசிப்பவர்களும் எல்லோருடனும் அன்பு கொண்டவர்களாகவும், வந்தோரை வரவேற்று அரவணைக்கும் பெருந்தன்மை கொண்டதாகவும் உள்ள மகிமையைக் கொண்டுள்ளது.
 
இப்படியான மகிமையைக் கொண்ட மண்ணில் எமது கிராமத்தைச் சிறப்பிக்கும் வகையில் கிராம உடையராக வீரவாகுஉடையார்,கிராமவிதானையாக வேலுப்பிள்ளை விதானையார், சதாசிவம் விதானையார், கல்விசார் கல்வியாளர்கள், சாவகச்சேரி நகரசபைத்தலைவராக மீசாலையைச் சேர்ந்த திரு.சு.கனகரத்தினம் அவர்கள் 1968ல் இருந்து 1979ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது தமிழ்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தமது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க மறுத்த வகையில் இனம் சமுதாயத்தைச் சார்ந்த இளைஞ்ஞர்களின் பெரும்பான்மை இனத்தை தலைமையக கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக சாவகச்சேரி நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு சாவகச்சேரி நகராட்சி மன்றத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராக இரு ஆசனங்களைப் பெற்று திரு.தர்மேந்திரன் அவர்களும் மீசாலையைச் சேர்ந்த திரு. இராசரத்தினம் அவர்களும் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் நகர சபைச் செயலாளராக மீசாலையைச் சேர்ந்த திரு.மு.காங்கேத அவர்களும், திரு.மு.தாமோதரம் பிள்ளை அவர்களும் சேவையாற்றி உள்ளார்கள். பிரதேச சபைச் செயலாளராக திரு. பாலச்சந்திரன் அவர்கள் செயலாற்றியுள்ளார்கள். மீசாலையில் தபாலகம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து முதல் தபாலதிபராக திரு.சா.தில்லையம்பலம் அவர்கள் நீண்ட காலமாக கடைமையாற்றினார். பின் திரு.சா.ரவீந்திரன் அவர்கள் தபாலதிபராக கடைமையாற்றினார். மீசாலை புகையிரத நிலைய  அதிபராக மீசாலையைச் சேர்ந்த திரு.வேலாயுதப்பிள்ளை அவர்கள் நீண்ட காலமாக கடைமையாற்றினார்.<ref>நேர்காணல்15.12.2016</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது