மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
புகைப்படங்கள்
வரிசை 2:
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
[[படிமம்:மீசாலை.jpg|alt=மீசாலை|இடது|thumb|மீசாலை]]
 
'''மீசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[சரசாலை]], [[மந்துவில்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[அல்லாரை]]யும், தெற்கில் [[சங்கத்தானை]]யும், மேற்கில் [[மட்டுவில்]], [[சரசாலை]], [[கல்வயல்]] ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
வரி 7 ⟶ 9:
 
== வரலாறு ==
[[படிமம்:வீதி.jpg|alt=வீதி|thumb|வீதி]]
 
யாழ்ப்பாண மாவட்டத்தின் கிராமச்சங்கங்கள் 03.02.1928ம் திகதியில் இருந்து அரசினால் அங்கிகரிக்கப்பட்டு 08.06.1928ம் திகதி 7647ம் இலக்க வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இவை '''1928''' ல் [[கிராமச்சங்கமாக]] ஆரம்பிக்கப்பட்டது. இதில் மீசாலையின் தென்பகுதி உள்ளடங்கலாக சாவகச்சேரிப் பகுதி சாவகச்சேரி கிராமசபையாக மாற்றம் பெற்று 22.03.1941ல் கிராமசபையாக அனுமதிக்கப்பட்டு 1941.03.28 ம் திகதி 8730 இலக்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. '''1949.01.01''' ம் திகதி மீசாலைப்பகுதி ஓர் வட்டாரமாக உள்ளடங்கிய பட்டினசபையாக தரம் உயர்த்தப்பட்டு மாற்றம் பெற்றது. பின் '''1964''' ல் மீசாலையின் தெற்குப்பகுதி உள்ளடங்களாக நகரசபையாக தரம் உயர்த்தப்பட்டது. மீசாலையின் மீதிப்பகுதி பட்டினசபைக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.பின் அவை மாற்றம் பெற்று சாவகச்சேரி பிரதேசசபையாக விளங்கி வருகின்றது. அந்தவகையில் மீசாலைக்கிராமமானது தென்பகுதி சாவகச்சேரி நகரசபைக்குட்பட்டதாகவும், வடபகுதி சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்டதாகவும் அமைந்துள்ளது. இவை அனைத்தும் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டதாக அமைந்துள்ள போது தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவின்  நடுப்பகுதியானது [[சாவகச்சேரி]] நகரசபைக்குட்பட்டதாகவும் சுற்றியுள்ள பகுதிகள் சாவகச்சேரிப் பிரதேச சபைக்குட்பட்டதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவானது 232.19 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் சாவகச்சேரி நகரசபையானது 31.29 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் மீசாலையின் கிழக்குப்பகுதி 3.84 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் மீசாலையின் மேற்குப்பகுதி 3.84 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்டதாக் 7.68 சதுரகிலோ மீற்றர் நகரசபைக்குட்பட்டதாகவும் மீசாலையின் மீதிப்பகுதி சாவகச்சேரி பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவும் அமைந்துள்ளது. அதே வேளை தென்மராட்சிப்பகுதியானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட பிரதேச செயலகமாக விளங்குகிறது. இப்பிரதேச செயலகமானது 60 கிராமசேவையாளர் பிரிவையும் 130 கிராமங்களையும் 21788 குடும்பங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
வரி 17 ⟶ 20:
 
== கல்வி வளர்ச்சி ==
[[படிமம்:மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்.jpg|alt=மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்|thumb|மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்]]
கல்வி வளர்ச்சியின் பாதையில் ஆரம்ப காலத்தில் மீசாலைக்கிராமத்தில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம், மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம், மீசாலை அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை என மீசாலை கிராமத்தில் பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் சிறப்புமிக்கதாக அமைந்து வந்தது. அதை திரு.சி.கா.தம்பையா வாத்தியார் அவர்கள் அதிபராக வழிநடத்தி வந்தார். முன்பு மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையாக இருந்தது. தற்போது மாற்றம் பெற்று அந்த இடம் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலய ஆரம்பபாடசாலையாக அமையப்பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் ஆசிரியராக இருந்த திரு.தம்பிப்பிள்ளை அவர்கள் அன்றைய தமிழ் கலாசாரத்திற்கமைய வேட்டி சால்வை மட்டும் அணிந்து பாடசாலை சென்று கடமையாற்றி வந்தார். திரு. நடராசர் ஆசிரியர் அவர்கள் ஆசிரியராக கல்வி கற்பிப்பதோடு நாட்டு வைத்தியராகவும் சேவையாற்றி வந்தார். RCTMS பாடசாலையின் அதிபராக திரு.S.K. செல்லையா அவர்கள் கடமையாற்றி வந்தார். பின் ஐயாக்குட்டி மாணிக்கம் வாத்தியார் அவர்கள் கடமையாற்றினார். இது கேணியடி பாடசாலை எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
 
வரி 22 ⟶ 26:
 
== வணக்கத்தலங்களும் கேந்திர நிலையங்களும் ==
<gallery mode="slideshow">
படிமம்:உப தபால் நிலையம்.jpg|உப தபால் நிலையம்
படிமம்:பொது நூலகம்.jpg|பொது நூலகம்
படிமம்:மாவடி பிள்ளையார் ஆலயம்.jpg|மாவடி பிள்ளையார் ஆலயம்
படிமம்:கமநல சேவைகள் திணைக்களம்.jpg|கமநல சேவைகள் திணைக்களம்
</gallery>
 
எமது கிராமத்தின் வணக்கத்தலங்களாக [[திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில்]], கண்டுவில் அம்மன் கோவில் (சோலை அம்மன் ), காட்டுவளவு கந்தசாமி கோவில்(நெல்லியடி முருகன்), கரும்பி மாவடி கந்தசாமி கோவில்,நடராச வீரகத்திப்பிள்ளையார் கோவில், பூதவராயர் கோவில், கலட்டிப்பிள்ளையார் கோவில், தட்டான்குளம்பிள்ளையார் கோவில் என சிறந்து விளங்குகின்றன. மீசாலைப்பகுதியில் சீயோன் தேவாலயம், இரட்சானிய சேனை இல்லம் என்பன  அமைந்துள்ளது. வள்ளளார் ஆச்சிரமமும் அமையப்பெற்றுள்ளது.
 
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கக் கிளைகள் கிராமம் தோறும் அமைந்துள்ளது. மீசாலையின் மத்தியில் தபால் நிலையம்,புகையிரத நிலையம், மத்திய நூல் நிலையம் , பழ உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை நிலையம், என்பனவும் இலங்கையின் எந்தப்பகுதிக்கும் செல்லக்கூடிய முக்கிய பிரதான வீதியான A9 வீதி எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன்  பிரதான புகையிரத பாதையும் எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன் புகையிரத நிலையமும் அமைந்துள்ளது.    மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் மையவாடி(மயானம்) அமைந்துள்ளது. கிராமங்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு கிராமங்கள் தோறும் மீசாலை வடக்கு , மீசாலை கிழக்கு, மீசாலை மேற்கு என் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மீசாலை வடக்கு சனசமூகநிலையம் சுடர் ஒளி சனசமூகநிலையம் சிறீ முருகன்  சனசமூகநிலையம் மதுவன் வாசிகசாலை, வீனஸ் வாசிகசாலை என சனசமூகநிலையங்களும் மேலும் தாய் சேய் நிலையங்களும் அமைந்துள்ளது. கமநலச்சேவை நிலையமும் , கடந்த காலத்தில் ஓர் சந்தையானது மீசாலை புதுச்சந்தை என்ற பெயருடன் நடைபெற்று வந்தது. தும்புத்தொழிற்சாலையும் அமைந்திருந்தது. தற்போது மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விற்பனை நிலையங்களும், தொழில் சார் நிலையங்களும் கொண்டதாக மீசாலைப் பகுதியானது அமைந்துள்ளது.
 
 
== மண்ணின் மகிமை ==
[[படிமம்:மீசாலை புகையிரத நிலையம்.jpg|alt=மீசாலை புகையிரத நிலையம்|thumb|மீசாலை புகையிரத நிலையம்]]
 
ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும்இ தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது. அந்த வகையில் மீசாலை ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பனை, தென்னை, வேம்பு, தேக்கு, நாவல், மஞ்சலுண்ணா, போன்றவை பயன்தரு மரங்களாக உள்ளது. இதில் மாமரத்தின் இனங்களாக கறுத்தைக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு, பாண்டி, சேலம், கழைகட்டி, பச்சைத்தின்னி, வாழைக்காய்ச்சி, நாட்டான் என பல வகைப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இந்த வகையில் இக்கிராமம் மாசாலை எனவும் அது மருவி பின் மீசாலை என வந்ததாகவும் கூறுகின்றார்கள். மீசாலை மாம்பழமானது தரத்தாலும்இ சுவையாலும் பெயர் பெற்று விளங்குகிறது.அதில் கறுத்தைக்கொழும்பான் மாம்பழமானது மிகச் சுவையானதும் பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. அதே சமயம் மாம்பழங்களானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவையைப் பெற்றதாக அமைந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மாம்பழமானது நன்றாக முற்றியதாகவும் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாகவும் கனிந்து பழுத்த மாம்பழமானது ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காததாகவும் அமைந்துள்ளது. இந்த மாம்பழங்களை நாம் பறிக்கும் போது நிலத்தில் வீழ்ந்து காயம் ஏற்பட்டு பழுதுகள் ஏற்படாது இருக்க அத்தாங்கு என்று அழைக்கப்படும் உபகரணத்தைப் பாவிக்கப்படுகின்றது.இது ஒரு நீளமான தடியின் ஒரு பக்கத்தில் ஓர் கூடை  அல்லது பை இணைக்கப்பட்டு  மாம்பழத்தை மரத்தில் இருந்து பறிக்கும் போது கூடைக்குள் அல்லது பையிற்குள் விழக்கூடியதாகவும் நிலத்தில் விழாததாகவும் அமைந்திருக்கும். இது மாமரத்திற்கும் எல்லோரது பாவணையிலும் இருக்கும். மாம்பழத்தை நாம் தோலைச்சீவி வெட்டிச்சாப்பிடுவது வழக்கம். இருந்தும் இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தை ஒருசிலர் தோல் சீவாது முழுமையாக எடுத்து ஒரு பக்கத்தில் கடித்து சிறுதுவாரத்தை ஏற்படுத்தி சூப்பிச்சாப்பிடுவதுவழக்கம். இது ஓர் தனிச்சுவையாக இருக்கும்.  இதை மாங்கொட்டை சூப்பிகள் என சிறப்பாகவும் செல்லமாகவும் அழைப்பார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது