"ரந்தெனிவலைச் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,178 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ரந்தெனிவலைச் சண்டை''' என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போர்களின் ஒரு பகுதியாக 25 ஆகத்து 1630 இல் [[பதுளை]] நகருக்கு அண்மையில் அமைந்த வெல்லவாயா என்னும் இடத்துக்கு அருகில் உள்ள ரந்தெனிவலை என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டை ஆகும். இது, கண்டி மன்னன், அவனது இரண்டு மகன்கள் ஆகியோரின் படைகள், போர்த்துக்கேய ஆளுனன் [[கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞா]]வின் தலைமையிலான படைகளுக்கும் இடையில் நிகழ்ந்தது. கான்சுட்டன்டினோ டி சா, பதுளை ஊடாகக் கண்டிக்குள் படையெடுத்தபோது இச்சண்டை ஏற்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இச்சண்டையின்போது போர்த்துக்கேயர் பக்கமிருந்த "[[லாசுக்காரின்]] படை" எனப்பட்ட சிங்களப் படையணிகள் முழுமையாக கண்டியரசன் பக்கத்துக்குச் சென்றுவிட்டன. போர்த்துக்கேயப் படைகள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன், படைகளுக்குத் தலைமையேற்று வந்த கான்சுட்டன்டினோ டி சாவும் கொல்லப்பட்டான்.
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2175808" இருந்து மீள்விக்கப்பட்டது