தைப்பொங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Anoyet (பேச்சு | பங்களிப்புகள்)
சி Info-farmerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 15:
 
== தைப்பொங்கல் வரலாறு ==
தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப் பெரும் விழாவான இந்தப் பொங்கல் விழா சமயம் கடந்தது. பிற இந்து சமய விழாக்கள் போல நட்சத்திரத்தின் அடிப்படையிலோ, பஞ்சாங்க அடிப்படையிலோ, இஸ்லாமியப் பண்டிகைகள் போல பிறை பார்த்தோ வருவதல்ல. [[தை]] முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னனியில் எந்தப் புராணக் கதையும் இல்லை. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
[[இந்திர விழா]] என்ற பெயரில் நல்ல [[மழை]] பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆகவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர் . இதனால் கோபமுற்ற [[இந்திரன்]] புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் [[கிருட்டிணன்|ஸ்ரீ கிருஷ்ணர்]] காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை(போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர். தை 1-ம் நாள் [[சூரியன்|சூரியபகவானை]] சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் [[பொங்கல்]] கொண்டாட்டமாக மாறியது. [[பொங்கல்]] பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் [[விவசாயம்]] சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது. [[இந்திர_விழா]] என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் [[இந்திர_விழா]] என்ற பெயரில் [[பொங்கல்]] கொண்டாடப்பட்டது. இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, [[பொங்கல்]], தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில் 28 நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது. முதன்முதலாக [[இந்திர விழா]] நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்புப் பூஜை நடைப்பெற்றது. இவ்விழா நாளில் பகைமை, [[பசி]],[[நோய்]] நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் [[இந்திரன்]], அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து [[பயிர்]] செழிக்கும் என [[மக்கள்]] [[நம்பிக்கை]]. பிற்காலத்தில், [[சூரியன்]] பற்றிய அறிவு [[மக்கள்]] வந்தவுடன் [[சூரியன்|சூரியன்சந்தோஷத்தை]] நிர்ணயிப்பவர் என்ற [[நம்பிக்கை]] வந்து, தங்கள் [[கண்]] முன் காட்சி தரும் அந்த [[கடவுள்]] [[பொங்கல்]] படைத்து வழிபட்டனர். [[பூமி]] இருக்கும் [[நீர்]] ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்குப் பத்தாக [[மழை]] பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புது [[நெல்]] [[தை]] முதல்நாளில் [[சமையல்]] [[இந்திர விழா]] என்ற பெயர் பொங்கல் என மாறியது.<ref>http://www.maalaimalar.com/2014/01/15143913/thai-pongal-history.html</ref>
 
நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். இதற்கும் இந்திர விழாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.<ref>தமிழ் இணையக் கல்விக்கழகம்-செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி- ஆறாம் படலம் - மூன்றாம் பாகம் - பக்கம் -140,141</ref>
 
== உழவர் திருநாள் ==
"https://ta.wikipedia.org/wiki/தைப்பொங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது