வரலாற்றுவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வரலாற்றுவரைவியல்''' (Historiography) என்பது, [[வரலாறு|வரலாற்றை]] ஒரு கல்விசார் துறையாக உருவாக்குவதில் வரலாற்றாளர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய ஆய்வுத்துறை ஆகும். அத்துடன் இதன் விரிவாக்கமாக ஒரு குறித்த விடயத்திலான ஏதாவது ஒரு தொகுதி வரலாற்று ஆக்கங்களையும் குறிக்கும். ஒரு குறித்த விடயத்திலான வரலாற்றுவரைவியல் என்பது, குறிப்பிட்ட தகவல் மூலங்கள், நுட்பங்கள், கோட்பாட்டு அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு வரலாற்றாளர்கள் அவ்விடயத்தை ஆய்வு செய்தனர் என்பதை உள்ளடக்கும். "ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றுவரைவியல்", கனடாவின் வரலாற்றுவரைவியல்", "பிரித்தானியப் பேரரசின் வரலாற்றுவரைவியல்", "தொடக்க இசுலாத்தின் வரலாற்றுவரைவியல்", "சீனாவின் வரலாற்றுவரைவியல்" என விடயம் சார்ந்தோ [[அரசியல் வரலாறு]], [[சமூக வரலாறு]] போன்ற வேறுபட்ட அணுகுமுறைகள், வகைகள் சார்ந்தோ வரலாற்றுவரைவியலை அறிஞர் விளக்குவர். கல்விசார் வரலாற்றின் வளர்ச்சியுடன், 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி வரலாற்றுவரைவியல் ஆக்கங்கள் பல உருவாகின. எந்த அளவுக்கு வரலாற்றாளர்கள் தமது சொந்தக் குழு, பற்று ([[நாட்டுப்பற்று]]ப் போல) போன்றவற்றின் செல்வாக்குக்கு உட்படுகிறார்கள் என்பது விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும்.<ref>Marc Ferro, ''The Use and Abuse of History: Or How the Past Is Taught to Children'' (2003)</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:வரலாற்றுவரைவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது