வரலாற்றுவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
== பெயர் ==
[[தொடக்க நவீன காலம்| நவீன காலத் தொடக்கத்தில்]] ''வரலாற்றுவரைவியல்'' என்னும் சொல் "வரலாற்றை எழுதுதல்" என்பதையும் ''வரலாற்றுவரைவாளர்'' என்னும் சொல் "வரலாற்றாளர்" என்பதையும் குறித்தது. அக்காலத்தில் சில நாடுகளில் அதிகாரபூர்வ வரலாற்றாளர்கள், "அரச வரலாற்றுவரைவாளர்" என்ற பதவிப் பெயரைக் கொண்டிருந்தனர். சுவீடனில் 1618 இலிருந்தும், இங்கிலாந்தில் 1660 இலிருந்தும், இசுக்காட்லாந்தில் 1681 இலிருந்தும் இவ்வாறான பதவி இருந்தது. இசுக்கட்லாந்தில் இப்போதும் உள்ளது. "வரலாறு எழுதப்பட்ட, எழுதப்படும் முறை பற்றிய ஆய்வு - வரலாறு எழுதுவதன் வரலாறு .... வரலாற்றுவரைவியலைக் கற்கும்போது நேரடியாகக் கடந்தகால நிகழ்வுகள் குறித்துக் கற்பதில்லை, மாறாக, தனிப்பட்ட வரலாற்றாளர்களின் ஆக்கங்களில் அந்நிகழ்வுகள் பற்றிய விளக்கங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பது பற்றியே கற்கப்படுகிறது." என்னும் வரைவிலக்கணம் அண்மைக் காலத்திலேயே உருவானது. <ref>(''The Methods and Skills of History: A Practical Guide'', 1988, p. 223, ISBN 0-88295-982-4)</ref>
 
== நவீன காலத்துக்கு முற்பட்ட வரலாறு ==
கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது உலகு தழுவிய ஒரு தேவையாகவே தோன்றுவதுடன், வரலாற்றைச் சொல்வது உலகம் முழுவதிலும் உள்ள நாகரிகங்களில் தனித்தனியாகவே உருவாகின. வரலாறு எவ்வெவற்றை உள்ளடக்கியுள்ளது என்பது ஒரு மெய்யியற் பிரச்சினை. மிகப் பழைய வரலாறுகள் [[மெசொப்பொத்தேமியா]], பண்டை எகிப்து ஆகியவற்றின் காலத்துக்கு உரியவை. ஆனால், இந்தத் தொடக்க நாகரிகங்களில் வரலாற்றை எழுதியவர்களின் பெயர்கள் தெரியவரவில்லை. இக்கட்டுரையில் வரலாறு என்பது, எதிர்காலத் தலைமுறையினர் நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் விளக்க முறையில் எழுதப்பட்ட வரலாற்றையே குறிக்கிறது. எழுத்தின் அறிமுகத்துக்கு முன்னர் [[வாய்மொழி வரலாறு]] அல்லது [[வாய்மொழி மரபு]] இருந்துவந்தது.
 
== அணுகுமுறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது