தோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழ் சொற்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:தமிழ்ச் சொற்கள் சேர்க்கப்பட்...
தோழர் எனும் சொல் பற்றிய மேலதிக விளக்கம்.
வரிசை 3:
இருப்பினும் [[மார்க்சியம்]] கொள்கைகளைக் கொண்டோர், தம்மை அல்லது தமது சக உறுப்பினர்களை ஒருவருக்கு ஒருவர் தோழமையுடன் அழைப்பதற்காக "தோழர்" என்று கூறிக்கொள்வர்; அல்லது தோழர் என்று அழைத்துக்கொள்வர்.
 
தோழர் என்ற அரசியல் கலைச் உருவான வரலாற்றுக் குறிப்புகள்:
 
இது பிரெஞ்சுப் புரட்சி கொண்டு வந்த சமுதாய மாற்றங்களில் ஒன்று. புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் தோழர் என்று அழைத்துக் கொண்டனர். "ஐயா", "அம்மா" என்றழைக்கும் நிலப்பிரபுத்துவ கால சொற்களுக்கு மாற்றீடாக பயன்பட்டது. இதன் மூலச் சொல் லத்தீனாக இருக்கலாம். "ஒரே அறையில் தங்கியிருப்பவர்" எனும் பொருள் கொண்ட அடிப்படை சொல்லில் இருந்து வந்திருக்கலாம்.
 
காமராட் (camarade) என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் காம்ரேட் (comrade) வந்தது. (அதாவது, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்.) ஜெர்மன் மொழி பேசும் மக்கள் மத்தியில் "காமராட்"(Kamerad) என்று அழைத்துக் கொள்ளும் கலாச்சாரம் இருந்து வந்தது. பள்ளித் தோழர்கள், சக தொழிலாளர்கள் ஒருவரையொருவர் காமராட் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம், இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளது.
 
துருக்கிய மொழிகளில் "யொல்டாஷ்" என்பார்கள். சேர்ந்து பயணிப்பவர் என்று அர்த்தம். ரஷ்ய மொழியில் "தவாரிஷி". அதன் மூலச் சொல் ஏதாவதொரு துருக்கி மொழியாக இருக்கலாம். அதாவது, "சேர்ந்து பயணிப்பவர்" என்ற அர்த்தம் கொண்டது.
 
தமிழில் "தோழர்", அரபியில் "ராபீக்". இது போன்று பல உலக மொழிகளில், நண்பர், தோழர் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொற்களாக பாவனையில் உள்ளன.
 
தோழர் என்று அழைப்பது ஒரு பண்டைய தமிழரின் பாரம்பரியம். சங்க காலம் தொட்டு தமிழ் மக்களிடையே வழங்கி வரும் அருமையான சொல். தமிழர் மரபை ஒட்டி தோழமை, தோழன் என்ற சொற்களைக் கம்பர் கையாண்டுள்ளார்.
 
தமிழர் மரபை ஒட்டி தோழமை தோழன் என்ற சொற்களைக் கம்பர் கையாண்டுள்ளார் கைகேயியின் சூழ்ச்சியினால் முடிசூடாமல் காட்டுக்குப் போன இராமனை மீட்டுக்கொண்டுவந்து அண்ணனுக்கே முடிசூட்ட வேண்டும் என்று பரதமன் இராமனைத் தேடி காட்டுக்குப் போகிறான் இராமனை காட்டை விட்டும் விரட்டுவதற்காகப் பரதன் படையோடு வருகிறான் என்ற தவறாகப் புரிந்து கொண்டான்
 
குகன். பரதனுக்கெதிராக வீரமுழக்க மிட்டான் குகன்.
 
அழநெடுந்திரை ஆறுகடந்திவர் போவாரோ?
 
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
 
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொடு சொல்லன்றோ
 
ஏழமைவேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ
 
என்றான். வேடனாகிய என்னை அரசகுமாரனாகிய இராமன் தன்னுடைய தோழன் என்று கூறி உறவு கொண்டான். அந்த இராமனுக்கு ஆபத்தாக வரும் பரதனை நான் விரட்டியடிக்க வில்லை என்றால்<nowiki>'' "தோழமை''</nowiki> என்பதற்கு என்ன பொருள் இருக்கிறது என்றான் குகன்.
 
பிற்காலத்தில் "உயிர்காப்பான் தோழன்<nowiki>''</nowiki> என்ற பழமொழியும் உருவானது.
==ஈழ இயக்கங்கள்==
[[ஈழ இயக்கங்கள்]] இடையே மாக்கசியக் கொள்கைகளை கொண்டிருந்த இயக்கங்களும் அவ்வாறே தமது சக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தோழர் என்று அழைத்துக்கொண்டனர். குறிப்பாக [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி|ஈ.பி.ஆர்.எல்.எப்]] மற்றும் [[ஈரோஸ்]] போன்ற இயக்க உறுப்பினர்கள் அவ்வாறு அழைத்துக்கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/தோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது