அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
==அஞ்சல் சேவைகள்==
1960 டிசம்பரில், கிழக்காபிரிக்காவுக்கான பிரித்தானிய அஞ்சல் முகவரகத்தின் அஞ்சல்தலைகள் டாசு தீவில் இருந்த கட்டிடத் தொழிலாளருக்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும், இச் சேவை [[பகரெயின்|பகரெயினில்]] இருந்தே நிர்வாகம் செய்யப்பட்டது. கடிதங்களும் பகரெயின் [[அஞ்சல் முத்திரை]]களுடனேயே அனுப்பப்பட்டதனால் கடிதங்கள் டாசு தீவில் இருந்து அனுப்பப்பட்டமைக்கான தெளிவான சான்றுகள் இருக்கவில்லை. 1963 மார்ச் 30ஆம் தேதி, பிரித்தானிய முகவரகம் ஒன்று அபுதாபியில் தொடங்கப்பட்டு, முகவரக அஞ்சல்தலைகள் அங்கிருந்து வழங்கப்பட்டன.<ref>[https://web.archive.org/web/20121010153238/http://www.jl.sl.btinternet.co.uk/stampsite/alpha/micro/abudhabi.html Stampsite: The Encyclopaedia of Postal Authorities, Abu Dhabi ]</ref> டாசுத் தீவிலிருந்து செல்லும் அஞ்சல்கள் இன்னும் பகரெயினில் இருந்தே நிர்வகிக்கப்பட்ட போதும், இப்போது அஞ்சல்களில் அபுதாபி ஒப்பந்த நாடுகள் அஞ்சல் முத்திரை இடப்பட்டது.
 
அபுதாபியின் முதல் அஞ்சல்தலைகளாக 1964 மார்ச் 30 ஆம் தேதி ஒரு "நிலைத்த அஞ்சல்தலைத் தொடர்" (definitive series) வெளியிடப்பட்டது. இது அப்போதைய ஆட்சியாளர் [[சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்|சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியானின்]] படத்தைத் தாங்கி வெளிவந்தது. இத் தொடர் 11 பெறுமதிகளுடன் கூடிய அஞ்சல் தலைகளை உள்ளடக்கியிருந்தது. இவை [[இந்திய ரூபா|ரூபா]], [[நயா பைசா]] ஆகிய இந்திய நாணயப் பெறுமானங்களில் வெளியிடப்பட்டிருந்தன.<ref>[http://www.abu-dhabi-stamps.com/results.php?newsearch=yes&resultsType=image&date1=1%2F1%2F1964&date2=31%2F12%2F1964 Abu Dhabi Stamps and Postal History] அபுதாபியின் முதல் நிலைத்த 11 அஞ்சல் தலைகள்</ref> அபுதாபிக்கான அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டிருந்தும், பிரித்தானிய முகவரகத் தபால்தலைகள் 1966 ஆம் ஆண்டில் அவை திரும்பப் பெறப்படும் வரை அபுதாபியிலும், டாசு தீவிலும் பயன்பாட்டில் இருந்தன. 1966 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி டாசு தீவில் ஒரு அஞ்சல் நிலையம் நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து டாசு தீவின் அஞ்சல் சேவை நிர்வாகம் அபுதாபியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது.