அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
அபுதாபியின் முதல் அஞ்சல்தலைகளாக 1964 மார்ச் 30 ஆம் தேதி ஒரு "நிலைத்த அஞ்சல்தலைத் தொடர்" (definitive series) வெளியிடப்பட்டது. இது அப்போதைய ஆட்சியாளர் [[சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்|சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியானின்]] படத்தைத் தாங்கி வெளிவந்தது. இத் தொடர் 11 பெறுமதிகளுடன் கூடிய அஞ்சல் தலைகளை உள்ளடக்கியிருந்தது. இவை [[இந்திய ரூபா|ரூபா]], [[நயா பைசா]] ஆகிய இந்திய நாணயப் பெறுமானங்களில் வெளியிடப்பட்டிருந்தன.<ref>[http://www.abu-dhabi-stamps.com/results.php?newsearch=yes&resultsType=image&date1=1%2F1%2F1964&date2=31%2F12%2F1964 Abu Dhabi Stamps and Postal History] அபுதாபியின் முதல் நிலைத்த 11 அஞ்சல் தலைகள்</ref> அபுதாபிக்கான அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டிருந்தும், பிரித்தானிய முகவரகத் தபால்தலைகள் 1966 ஆம் ஆண்டில் அவை திரும்பப் பெறப்படும் வரை அபுதாபியிலும், டாசு தீவிலும் பயன்பாட்டில் இருந்தன. 1966 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி டாசு தீவில் ஒரு அஞ்சல் நிலையம் நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து டாசு தீவின் அஞ்சல் சேவை நிர்வாகம் அபுதாபியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது.
 
1966ல் பிரித்தானியாவுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபின்னர், அபுதாபி, தினார் = 1000 பில்சு என்னும் நாணயத்தைக் கொண்ட புதிய நாணய முறையை நடைமுறைப்படுத்தி, தனக்குச் சொந்தமாக ஒரு அஞ்சல் சேவையையும் உருவாக்கிக் கொண்டது. தொடக்கத்தில் பழைய அஞ்சல்தலைகளின்மீது புதிய பெறுமானங்களைப் பொறித்துப் பயன்படுத்தினர். பின்னர் அக்காலத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியானின் உருவம், அபுதாபி அமீரகக் கொடி, கழுகு என்பன பொறிக்கப்பட்ட "நிலைத்த அஞ்சல்தலைத் தொடர்" வெளியானது.<ref>Zahedi, Mahbub Jamal., Gulf Post – Story of the Post in the Gulf, Sanaa Publications, Karachi, 1994, p. 74</ref> 1972 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவாகும் வரை இதே அடிப்படையிலேயே அபுதாபி அஞ்சல்தலைகளை வெளியிட்டு வந்தது. 1964 ஆம் ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டுவரை அபுதாபி 95 தபால்தலைகளை வெளியிட்டது.
 
==அபுதாபி அஞ்சல்தலைகள்==