"க. செ. நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names = நாவற்குழியூர் நடராசன்
|known_for = கவிஉஞர்கவிஞர், தமிழறிஞர்
|education =[[கலாநிதி]] <small>(கொழும்புப் பல்கலைக்கழகம்]])</small>
|employer =
|website=
|}}
'''நாவற்குழியூர் நடராஜன்''' (இறப்பு: பெப்ரவரி 17, 1994) எனப்படும் கலாநிதி '''க. செ. நடராசா''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.<ref name=TA/> இவர் [[இலங்கை வானொலி]] தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.<ref name=2000>{{cite web|url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000|title=இலங்கை வானொலியின் பவள விழா சிறப்பு மலர் 2000|publisher= [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] |accessdate=5-02-2017}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கனகசபை செல்லப்பா நடராசா [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[நாவற்குழி]] என்ற ஊரில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் [[வையாபாடல்]] என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப் பட்டமும், [[கலாநிதி]] பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் [[தி. ச. வரதராசன்|வரதருடன்]] இணைந்து ''மறுமலர்ச்சி சங்கத்தை'' நிறுவி [[மறுமலர்ச்சி (இதழ்)|மறுமலர்ச்சி]] என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
நடராசன் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் [[சானா (சண்முகநாதன்)|சானா]]வின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் [[இலங்கை வானொலி]]யில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 ''சிலம்பொலி'' என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் [[மெல்லிசை]]ப் பாடல்களாக ஒலிபரப்பாயின.<ref name=2000/>
 
இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் [[கொழும்புத் தமிழ்ச் சங்கம்|கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்]]] தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார்.<ref name=2000/> தனது ஆய்வுக் கட்டுரைகள அடங்கிய ''ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு'' 18ஆம் நூற்றாண்டு வரை என்னும் நூல் 1982 இல் வெளியிடப்பட்டது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தை தனது பிள்ளைகளுடன் [[கனடா]]வில் கழித்து 1994 இல் கனடாவில் காலமானார்.<ref name=2000/> கனடாவில் வசித்த போது இவர் அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். இந்நூல் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.<ref name=TA>{{cite web|url=http://www.tamilauthors.com/01/416.html|title=கனடாவில் மரபுக் கவிதை வளர்ச்சி|author=வி. கந்தவனம்|publisher=TamilAuthors.com|accessdate=5-02-2017}}</ref>
 
==வெளிவந்த நூல்கள்==
1,16,086

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2183174" இருந்து மீள்விக்கப்பட்டது