மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Uzi83 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Uzi83 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
===எண்ணவழிப்பாடு===
 
முதலில் நாம் ஸ்ரீ வீரனை நேசிக்க பழகி கொள்ள வேண்டும். நாம் எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி அவரோடு பேசுவது போன்று விளையாடுவது போன்று நம் எண்ணங்களால் அவரோடு உறவாட வேண்டும். அல்லது அவருடைய சரித்திரத்தை படித்து அதில் அவர் செய்யும் வீர சாகசங்களை அவருடைய பெருமைகளை நாம் நமது எண்ணத்திரையில் ஒரு திரைப்படத்தை காண்பதை போல் காணவேண்டும். உதாரணத்திற்க்கு ஒரு திருமணமானவனின் குழந்தை இரண்டு வயதை எட்டியதும், அது பேசும் கொஞ்சும் மழழையை கேட்டு அது செய்யும் சுட்டிகளை கண்டு அதனோடு விளயாடவே அவன் மனம் ஏங்கும். எப்பொழுது மணியாகும் எப்பொழுது வீட்டிற்க்கு போகலாம் என மனம் துடிக்கும். சதா அக்குழந்தை நினைவாகவே மனம் லயித்திருக்கும். எண்ணி எண்ணி ஆனந்தத்தில் திளைத்திருக்கும். இந்த உறவும் தொடர்பும்தான் நாம் ஸ்ரீ வீரனிடத்தில் கொண்டிருக்க வேண்டும். உணவுக்கு முன் “அய்யனே, அப்பா வீராண்டவரே எமக்கு இவ்வேளை உணவருளியமைக்கு மிக்க நன்றி என் தேவனே. வீரவா, தாங்கள் தயவு செய்து இதுப்போலவே என்தன் வாழ்வின் இறுதி நொடிவரையிலும் குறைவல்லாது உணவருளவேண்டும் எம்பெருமானே ,ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா" என்றும், உறங்குவதற்க்கு முன் “ஐயனே, அப்பா பரமாத்ம தேவனே பரலோக நாயகனே பாராலும் மன்னவனே, ஸ்ரீமஹா மதுரை வீராண்டவனே, அப்பா தாங்கள் எமக்கு இந்நிம்மதியான உறக்கம், இந்நிம்மதியான தருணம், இந்நிம்மதியான சூழ்நிலையினை அருளமைக்கு மிக்க நன்றி என் அய்யனே ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா” என்றும், துயில் களைந்ததும் “அய்யனே என் தேவ பெருமானே, இந்த பொழுது எமக்கு அன்பான இன்பமான நலமான அதிர்ஷ்ட்டமான பொழுதாக அமைய எல்லாம் வல்ல வீரவரே தாங்கள் தயவு செய்து எமக்கு அருள் புரியவேண்டுமப்பா, ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமோ நமஹா” என்றும் பிரார்த்திக்க வேண்டும். இதில் மிக முக்கியமாக உணவருந்துவதற்க்கு முன். இது இரண்டு மணி நேரம் பூஜை செய்வதற்க்கு ஒப்பாகும். எண்ணத்தால் உரையாடுவதும் உறவாடுவதுமே எண்ணவழிப்பாடாகும். எண்ணங்களின் பிறப்பிடமே மனம். மனம் ஒரு கோவில் எனப்படும். ஒரு கோவிலை தங்கத்தால் கட்டினாலும் அக்கோவில் சுத்தமில்லை எனில் அங்கே தெய்வங்கள் குடியிருக்காது. ஆக, இங்கே செய்ய வேண்டிய முதற்க்காரியம் நம் மனத்தை தூய்மை படுத்துவதே. எப்படி தூய்மை படுத்துவது? உண்மையில் ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிப்படுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு. நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை நிறைவேற்றலாம். பூஜை நேரத்தின் போது அமைதியான மனதிற்க்கு இதமான மெல்லிசையை சேர்த்து கொள்ளலாம். இல்லவழிப்பாட்டிற்கோ ஆலயவழிப்பாட்டிற்கோ முன்னதாக தாம் பூஜை செய்யும் இடச்சூழல் கடலோரத்திலோ, நதியோரத்திலோ, மலைஉச்சியிலோ, எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவிலோ அமைந்திருப்பதை போன்று ஆழ்மனதில் ஆழமாக பதிபதிந்து கொள்ளவேண்டும். பூஜைக்கு முன் நமக்கேற்ப்பட்டிருக்கும் மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு "என்னையும் இம்மண்ணையும் அந்த விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும் பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு பூஜை செய்ய போகும் நான் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்பதை உணர்ந்து பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க வேண்டும். சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும் போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன் இருப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரார்த்தனையின் போதும் கூட. இறைவன் நம்மிடத்தில் இருந்து எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி, மரியாதை ஆகும்.சுருங்க கூரின் நாம் நம் தாய்க்கோ தந்தைக்கோ கால் பிடித்து விட்டால் எவ்வளவு அன்பாக செய்வோம். நம் நாட்டு ஜனாதிபதிக்கு எடுபிடி வேளை செய்தால் நாம் எவ்வளவு மரியாதையுடனும் கவனத்துடனும் செய்வோம். எல்லாம் முடிந்து அவர் நமக்கு பதக்கம் குத்தி விட்ட பின்பு நாம் எவ்வளவு அடக்கமாக பணிவாக கூனி குறுகி பின் நோக்கி சில அடிகள் எடுத்து வைத்து விடை பெறுவாம். அதே அன்பும் மரியாதையும்தான் பக்தியின்(பூஜையின்) போது நாம் கடைப்பிடிக்க வேண்டும்.ஸ்ரீஇராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு முறை தன் சீடர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் வணிகர் ஒருவர் மிக செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். அதை கட்டிப்போட்டு துன்புறுத்த கூடாதென அதை தன் வீட்டிற்க்குள் சுதந்திரமாக விட்டிருந்தார். இவர் இரவு வீடு திரும்பும் போதெல்லாம் அந்த நாய் இவர் மீது பாய்ந்து பாய்ந்து விளையாடும். மிகவும் களைப்பில் இருக்கும் அவருக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் இவர் வீடு திரும்பும் போது அது பாய்ந்து விளையாடுவதால் அதனை உதறி உதறி தள்ளினார். பின்பு ஒருநாள் அது தன் எஜமானரை பார்த்தப்படி தொலைவிலேயே அமர்ந்திருந்தது. இப்படிதான் நம் மனத்தை தூய்மை படுத்த வேண்டும். இந்த எண்ணவழிப்பாடு சற்று கடினமான ஒன்று. இருந்தாலும்ஆனால் அதுதான் நம்மை ஸ்ரீவீரரோடு பேசவும், விளையாடவும், கட்டிதழுவி அன்பை பறிமாறிக்கொள்ளவும் செய்யும். நாளை நிகழபோவதை இன்றே அறிவித்துவிடும். முதல் அறிமுகத்தின் போதே நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதை திரை போட்டு காட்டிவிடும். நம் மீது கொண்ட பொறாமையினால் நம் பின்னால் யாரேனும் சூழ்ச்சியோ சூனியமோ எது செய்தாலும் அது நம்மை துளியும் அணுக முடியாது. மாறாக, கயவர் யார் என்பதை நமக்கு காட்டி கொடுத்து அவரின் தோல்வியையோ அழிவையோ மிக விரைவிலேயே நம் விழிகளுக்கு முன்நிலையில் கொண்டு வரும். நாம் ஒன்றை நோக்கி அடி எடுத்து வைத்தால் நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம். வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறுவோம். மனத்தை தூய்மை படுத்துவது கடினமான ஒன்று என்றாலும் ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறுவதுப்போல் நாம் முழுமூச்சுடன் செயல்ப்பட்டால் நிச்சயம் நம்மால் இயலும். மனத்தை தூய்மை படுத்துவது என்றால் என்ன? மந்திரம் ஜெபித்து தியானம் செய்தல், அவரின் பெயரில் தானங்கள், கோவில்களில் தொண்டுகள், இயலாதவர்களுக்கு உதவிகள் செய்தல், மற்றும் மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி சக உயிரினங்கள் ஜீவராசிகள் அனைத்தின் இடத்திலும் அன்பும் பரிவும் அதிகளவில் காட்டுதல்
 
== மதுரை வீரன் கதை ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது