கொக்கித் துமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hakenbüchsen_geschmiedet_16._Jh.jpg|thumb|right|300x300px|முற்கால கொக்கித் துமுக்கி வடிவம்; ஒரு கொக்கியுள்ள [[கைபீரங்கி]].]]
[[படிமம்:EdoJapaneseArquebuse.jpg|thumb|right|300x300px|[[ஈடோ காலம்|ஈடோ காலத்து]] ''[[டனேகசிமா (ஜப்பானிய திரி-இயங்குநுட்பம் இயக்கம்)|டனேகசிமா]]'' கொக்கித் துப்பாக்கி.]]
 
'''கொக்கித்துமுக்கி''' அல்லது '''ஆர்க்வெபசு''' ([[ஆங்கிலம்]] ''arquebus,''[[இத்தாலியம்]] ''Archibugio'', [[டச்சு மொழி|தச்சு மொழி]] ''haakbus'', பொருள் "கொக்கி துப்பாக்கி",<ref>[http://www.writersevents.com/Words_Starting_with_A/aromatic_compound_arteries/arquebus_definition.html Etymology of Arquebus.]</ref> அல்லது "கொக்கிக் குழல்") என்பது 15 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த [[சன்னவாய்]] வழியாக குண்டேற்றப்படும் [[சுடுகலன்]] ஆகும். முதன்முதலில், கொக்கித் துமுக்கி என்பது, ஒரு கொக்கியுள்ள [[கைபீரங்கி]] தான்; பின்னர் [[திரி-இயங்குநுட்பம் இயக்கம் (சுடுகலன்)|திரி-இயங்குநுட்ப]]  சுடுகலன் ஆனது. இதற்கு பின்னால் வந்த [[மஸ்கெத்|மஸ்கெத்தை]] போல, இதுவும் [[மரையற்ற குழல்|மரையிடா  குழலை]] கொண்ட சுடுகலன் ஆகும்.<ref>http://www.scotwars.com/equip_smoothbore_musketry.htm Smoothbore Musketry</ref>
 
கொக்கித் துமுக்கியை ஏந்தி போரிடுபவரை '''ஆர்க்வெபசியர் '''என அழைப்பர்.
வரிசை 18:
 
== இயங்குநுட்பம் ==
ஆர்க்வெபசு, அதன் முன்பிருந்த சுடுகலனைவிட பெரிய [[குழல்விட்டம் (சுடுகலன்)|குழல்விட்டத்தை]] கொண்டிருக்கும். மத்திய 16-ஆம் நூற்றாண்டு வரை, [[திரி-இயங்குநுட்பம் இயக்கம் (சுடுகலன்)|திரி-இயங்குநுட்பத்தில்]] சுடப்பட்ட இவைகள், பிறகு புதிய [[சக்கர-இயங்குநுட்பம் இயக்கம் (சுடுகலன்)|சக்கர-இயங்குநுட்பத்தால்]] சுடப்பட்டன. சிலவற்றில் இருந்த விரிந்த சன்னவாய், குண்டேற்றுவதை எளிதாக்கியது. ஆர்க்வெபசின் [[தண்டு (சுடுகலன்)|பிற்பகுதியின்]] வளைத்த வடிவினால், இதற்கு 'கொக்கித் துமுக்கி' என பெயர் வந்தது. அனைத்து ஆர்க்வெபசுகளும், பல [[துமுக்கிக் கொல்லர்|துமுக்கிக் கொல்லர்களால்]] கையால் மட்டுமே செய்யப்பட்டவை, அதனால் இதற்கு பிரத்தியேக மாதிரிகள் இல்லை.
 
முந்தைய ஆர்க்வெபசின் [[விசை (சுடுகலன்)|விசையின்]] இயங்குநுட்பம், [[குறுக்குவில்]] இருந்தது போல இருக்கும். 16-ஆம் நூற்றாண்டின் கடைசியில், பல நாடுகளின் துமுக்கிக் கொல்லர்கள் தண்டிற்கு செங்குத்தான, சிறு விசையை (தற்கால நவீன சுடுநர்கள் அறிந்த) அறிமுகபடுத்தினார். <gallery caption="சுடுதல்" sequence="">
வரிசை 32:
ரஷ்யாவில் பரிணாமித்த ஆர்க்வெபசை ''பிஷ்ஷேல் ''([[உருசிய மொழி|உருசியம்]]: пищаль) என்றழைத்தனர். ரஷ்யர்கள் ஆர்க்வெபசியரை ''பிஷ்ஷேல்னிக்கி'' என்றனர்.
 
[[டனேகசிமா]] தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "[[டனேகசிமா (ஜப்பானிய திரி-இயங்குநுட்பம் இயக்கம்)|டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ]]" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது. அறிமுகமான முதல் பத்தாண்டுகளில், முன்னூறாயிரம் (3 இலட்சம்) ''டனேகசிமா ''தயாரிக்கப்பட்டதாக அறியப்பட்டது.<ref>[http://books.google.com/books?id=zPyswmGDBFkC&pg=PA30&dq=tanto+daisho&hl=en&ei=yE0tTvaULseRgQfMn7SECw&sa=X&oi=book_result&ct=result&resnum=12&ved=0CGkQ6AEwCw#v=onepage&q=tanto%20daisho&f=true ''The connoisseur's book of Japanese swords'', Author Kōkan Nagayama, Publisher Kodansha International, 1998, ISBN 4-7700-2071-6, ISBN 978-4-7700-2071-0 P.30]</ref> இதனால் ''டனேகசிமா, ''ஜப்பானின் மிகமுக்கியமான ஆயுதங்களுள் ஒன்றாக மாறியது. 
 
[[நஸ்ஸோவின் மொரீசு, ஒராஞ் இளவரசர் |நஸ்ஸோவின் மொரீசு]], முதலில் செயல்படுத்திய அதிர்வேட்டுச்சூடு உத்தியின்மூலமாக, கொக்கித் துமுக்கியின் செயலாற்றல் அதிகரித்தார்.
வரிசை 49:
 
=== வில்களுடனான ஒப்பீடு ===
[[File:Japanese classic rifle.ogv|thumb|right|[[ஹிமேஜி கோட்டை|ஹிமேஜி கோட்டையில்]] [[டனேகசிமா (ஜப்பானிய திரி-இயங்குநுட்பம் இயக்கம்) |டனேகசிமாவின்]] செயல்விளக்கம்.]]
[[படிமம்:Bajou_zutsu.jpg|thumb|''பாஜோ-ழுட்சு'', குதிரையேற்ற சாமுராய்களால் உபயோகிக்கப்பட்ட ஜப்பானிய கொக்கித்துமுக்கி.]]
தேர்ந்த வில்லாளியின் கையில் உள்ள வில்லின் துல்லியத்தை, கொக்கித்துமுக்கிகளால் ஈடு செய்ய இயலாது. [[குறுக்குவில்]] மற்றும் [[நீள்வில்|நீள்வில்லை]] விட, இவற்றால் வேகமாகவும், ஆற்றலுடனும் சுடமுடியும். கொக்கித்துமுக்கி, ஏந்தியிருப்பவரின் உடல்வலிமையை சார்ந்து எறியத்தை வெளியேற்றுவதில்லை. இதனால், சோர்வு மற்றும் பிணி போன்றவைகளால் பாதிப்படையும்போது வில்லாளிகளைவிட ஆர்க்வெபசியர்கள் அதிக போர்த்திறன் கொண்டிருப்பர். அதீத காற்று வில்களின் துல்லியத்தை குறைக்கும், ஆனால் கொக்கித் துமுக்கிகளில் அது குறைந்த தாக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். 
"https://ta.wikipedia.org/wiki/கொக்கித்_துமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது