யுனெஸ்கோ கூரியர் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''யுனெஸ்கோ கூரியர்''' மாத இதழ் [[ஐக்கிய நாடுகள் அவை]]யின், சகோதர நிறுவனமான [[யுனெஸ்கோ]]வின் சார்பில் உலகின் பல முன்னணி மொழிகள் பலவற்றில் வெளியிடப்படும் இதழாகும். இப்பன்னாட்டு மாத இதழ் 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் தமிழில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து 35 ஆண்டுகள் வெளிவந்தது 2001 ஆண்டு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்டது.
 
==இதழ் துவக்கம்==
வரிசை 10:
ஒவ்வொரு இதழிலும் ஒரு மையக்கருவை அலசி ஆராய்து அதை அடிப்படையாக கொண்டே வெளிவந்தது. ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஒளிப்படங்களுடனும், அவற்றுக்கான விளக்கங்களுடன், உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டு மொழிபெயர்த்துத் தரப்பட்டது. பாரீஸ் தலைமையகத்தில் கூரியர் பதிப்புகளின் ஆசிரியர்கள் ஒன்று கூடி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான தலைப்புகளை முடிவு செய்து வருவர்.<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 12</ref> பல்லாயிரக்கணக்கான புதிய புதிய கலைச் சொற்களைக் கூரியர் இதழ் தமிழுக்கு உருவாக்கித் தந்தது.
 
== யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்ஆசிரியர்கள் ==
யுனெஸ்கோ கூரியர் தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], [[நெ. து. சுந்தரவடிவேலு]] ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், [[மணவை முஸ்தபா]] ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு டெக்கான் ஹெராலட் ஆசிரியர் கிருபாநிதியிடமும், காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீ. யிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் பரிந்துரையின் பேரில் [[மணவை முஸ்தபா]] ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
 
==தமிழரின் வாழும் பண்பாட்டுச் சிறப்பிதழ்==
1984 ஆண்டு மார்ச் கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இது தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழ் ஆகும் அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு-தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ ஆவார் இவர் அந்த இதழில், 'சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் [[சுந்தர ராமசாமி]], [[அம்பை]], [[எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா)]] , [[சு. தியடோர் பாஸ்கரன்|சு. தியடோர் பாஸ்கரனின்]] மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு விவரிப்பை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது.
1984 ஆண்டு கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 14</ref>
 
==தமிழ் பதிப்பு நிறுத்தம்==
"https://ta.wikipedia.org/wiki/யுனெஸ்கோ_கூரியர்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது