மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + உள்ளங்கை--->உள்ளங்கை
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''மிதிவெடி அபாயக் கல்வி''' என்பது கல்விசார் நடவடிக்கைகள் ஊடாக மிதிவெடிகள், யுத்த மீதிகளின் ஆபத்தில் இருந்து குறைக்கும் வண்ணம் அவை பற்றிய ஆபத்தை விளக்குவதுடன் நடத்தைகளின் மாற்றத்தை மேம்படுத்துவதாகும். இந்நடவடிக்கைகளின் போது தரவுகளைத்திரட்டுதல், தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், பயிற்ச்சியுடனான கல்வி, சமுகத்தொடர்பாடல்கள் அங்கம் வகிக்கின்றது. <ref>What is Mine Risk Education, SLNMAS 12.02nd Edition</ref>
 
இவ்வகை நடவடிக்கைகளை [[இலங்கை]]யில் [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]] இன் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் நடைபெறுகிறது. மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் ஆபத்துக்களுக்கு உள்ளாவோர் யார், இது குறித்து எந்த வயதுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும் போன்ற முக்கியமான விடயங்களை அலசி ஆராய்ந்து, அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஊடாக செவ்வனே வழங்கி வருகின்றனர். மிதிவெடிகள் அகற்றுவதற்கு காலம் எடுப்பதாலும், மிதிவெடிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறி இருப்பதால் மிதிவெடி அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டிய மிதிவெடி அபாயக் கல்வி காலத்தின் கட்டாயம் ஆகும்.
 
மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களாற் பாதிக்கபட்ட பொதுமக்களைப் பற்றி ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் திரப்பட்ட தகவல்களின் படி 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் பெரும்பாலும் உழைக்கின்ற ஆண்களே மிதிவெடி அபாயத்திற்கு உள்ளாகின்றனர். வெடிபொருட்களைக் கையாளுதல், இரும்பு சேகரித்தல், வாழ்வாதாரத் தேவைகள், குப்பைகூழங்களை எரித்தல், மாடு மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளின் போது இவர்கள் காயமடைந்துள்ளனர். வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் வெடித்ததில் பெரும்பாலும் பதின்ம வயதில் உள்ள பாடசாலை ஆண் சிறார்களே பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் விந்தையான பொருட்கள் போன்று தோன்றும் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை ஆராய்வதில் ஈடுபடுகையில் அவை வெடிக்க நேர்வதே இதற்குக் காரணமாகும்.
 
ஆசிய வாழ்க்கைமுறையில் வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் ஆண்களே உழைப்பதால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைவிட்டு கூலிவேலை மற்றும் சிறுவேலைகளில் ஈடுபட்டு தமது பாடசாலைப் படிப்பை இடைநிறுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. மிதிவெடியால் பாதிக்கப்பட்டவர் சிறுவர் என்றால் அவர் வளர்ந்து வருவதால் காலத்திற்குக் காலம் செயற்கைக் கால்களை மாற்றும் தேவையும் உள்ளது. வளர்ந்தவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி மாற்றத் தேவையில்லை.
 
இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை குறிப்பிடப்பட்ட ஒளிப்படங்களுடன் பயிற்றுவித்து ஆபத்தான இடங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. இதைச் செவ்வனே செய்வதற்கு இதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் மேற்பார்வையும் செய்துவருகின்றனர். பிராந்திய மிதிவெடி நடவடிக்கைக் காரியாலத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் அவ்வப்போது இந்நிகழ்சிகளைப் பார்வையிட்டு அந்நிகழ்ச்சிகள் குறித்த தமதுகருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். எனினும் மிதிவெடி நடவடிக்கைச் செயற்பாட்டாளருக்கு சான்றிதழ் ஏதும் வழங்கப்படுவதில்லை. மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஒவ்வொரு கிழமையும் நடைபெறும் மிதிவெடி நடவடிக்கைக் கூட்டத்திற் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் பற்றியும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் விபரிப்பர். பெரும்பாலான பிரச்சினைகள் அக்கூட்டத்திலேயே முடிவுசெய்யப்படும். பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மிதிவெடி அபாயக் கல்விபற்றி தொழில்நுடப்பக் கலந்துரையாடல்கள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் இடம்பெறும்.
 
==மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் முறைகள்==
வரிசை 43:
*சிக்கல்கள்: பாடசாலைகளில் மிதிவெடி அபாயக் கல்வியை நடத்துவதற்கு பிராந்தியக் கல்வி அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அனுமதி பெற்றபின்னரே பாடசாலையில் இந்நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
====வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல்====
*நன்மைகள்: மிதிவெடி அபாயத்தில் உள்ள மக்களை தனித்தனியே சந்திப்பதால் அவர்களுடைய பிரச்சினைகளை [[உள்ளங்கை]] நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டு அவர்களின் நடத்தை குணாதியங்களுக்கு ஏற்ப மிதிவெடி அபாயக் கல்வியை வழங்க இயலும்.
*சிக்கல்கள்: பெரும்பாலும் ஆண்கள் உழைக்கபோய்விடுவதால் பெண்களே வீட்டில் உள்ளதால் பெண் மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுவிப்பாளர்களையே இதற்கு அனுப்புவது சிறந்தது. மிதிவெடி வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பெரிதும் ஆண்களே பாதிப்புக்குள்ளாகிறார்கள். மிதிவெடி அபாயக் கல்வியின்போது வீட்டில் உள்ள பெண்களிற்கு துண்டுப்பிரசுரம் போன்றவற்றை வழங்கி உங்கள் வீட்டுக்காரருக்குச் சொல்லுங்கள் என்று கூறினாலும் கூட இது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்பது ஆய்ந்தறியப்படவேண்டும். இம்முறையில் கூடுதலான மக்களைச் சந்திப்பது கடினமானது.
====மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுனருக்கான பயிற்சிகள்====
வரிசை 51:
 
===சமுகத் தொடர்பாடல்கள்===
மிதிவெடி அகற்றும் அமைப்புக்களும் மக்களுக்கு இடையே தொடர்பாடல்களை வலுப்படுத்துவதே சமூகத் தொட்ர்பாடல் ஆகும். மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை மக்கள் இனம் கண்டால் மிதிவெடி அபாயக் கல்வி அமைப்புக்கள் மிதிவெடி அகற்றும் அமைப்புக்களுக்கு அறித்து அவற்றை அகற்றுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இதற்கு உரிய மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய விண்ணபத்தை நிரப்பி உரிய அமைப்புக்களுக்கு அனுப்பி வைப்பர் இதில் தகவல்தந்தவரின் பெயர், முகவரி, தொலைபேசி இருப்பின் தொலைபேசி இலக்கம் ஆகிய தகவலுடன் அண்ணளவான வரைபடம் ஒன்றும் மிதிவெடி அல்லது வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளின் வரைபடம் அல்லது ஒளிப்படமும் இணைக்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் மிதிவெடி அகற்றும் அமைப்பு இல்லாதவிடத்து இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானக் மிதிவெடி அகற்றும் பிரிவிற்கு அறிவிக்கப்படும். மிதிவெடியோ வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளோ அடையாளம் காணப்பட்டால் அது அகற்றப்படும்வரை மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் மக்களை விளிப்புடன் இருக்குமாறு கூறுவதுடன் அது அகற்றும் வரை மிதிவெடி அகற்றும் அமைப்புடன் தொடர்பில் இருப்பர். மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் இடைக்கிடையில் அப்பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் அமைப்புக்களின் அணித்தலைவர்களுடன் கலந்துரையாடு மிதிவெடி அகற்றுவதற்கு வேண்டிய ஒத்தாசைகளைப் புரிவர்.
 
மிதிவெடி அகற்றும் அமைப்பினருக்கு உள்ள பிரச்சினைகளும் மக்களுக்குத் தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மிதிவெடிகளை அடையாளம் காணும் முள்ளுக்கம்பிகளை அகற்றுதல் போன்றவற்றை அகற்றவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவர். மிதிவெடி அகற்றுபவர்களுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்கப்படுவர், எடுத்துக்காட்டக அவை புதைக்கப்பட்ட இடங்கள் தெரிந்தால் மிதிவெடி அகற்றுபவர்களுக்கு அறியத்தருமாறு கோரப்படுவர்.
வரிசை 59:
 
===கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்===
மிதிவெடி அபாயக் கல்வியைப் பெரும்பாலும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடாகக் கண்காணிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் மிதிவெடி திட்டத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அதிகாரிகளும் இப்பணியைச் செய்து அறிக்கை ஒன்றை வழங்குவர்.
 
மிதிவெடி அபாயக் கல்வி பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது.
வரிசை 79:
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் பாழடைந்த வீட்டின் வாசற்படிப் பகுதியில் (கதவுப் பகுதியில் சில சமயங்களில் [[சூழ்ச்சிப் பொறி]] இருக்கலாம்).
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு அரண்கள் (குளக்கட்டுக் அணைகளும் பலசமயம் யுத்ததிற் பாதுகாப்பு அரணாக இருந்ததால் அப்பகுதிகளிலும் அவதானமாக இருக்கவேண்டும்.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள ஆற்றங்கரைப் பகுதிகள்.
 
குறிப்பு: சர்வதேச மிதிவெடி நடவடிக்கையின் தற்போதைய நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடி ஆபத்தான பிரதேசம் என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசம் என குறிக்கப்படும். இவ்வாறு வகைக்குறிப்பதற்கு பார்க்ககூடிய வகையில் மிதிவெடியோ அல்லது மிதிவெடி விபத்து இடம்பெற்றிருந்தாலோ அவை அவ்வாறு வகைப்படுத்தப்படும். இது அக்குறிப்பிட்ட பிரதேசத்தில் மண்டை ஓட்டுக் குறிகொண்டும் மிதிவெடி நடவடிக்கைக்கான தரவு முகாமைத்துவ மென்பொருளிலும் அவ்வாறு குறிக்கப்பட்டு சேமிக்கப்படும்.
வரிசை 102:
===வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களைக் கண்டால் செய்யவேண்டியது===
* மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் அமைப்பினருக்கு அறியத்தரவும் ([[தொலைபேசி]] வசதியிருப்பின் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ளவும்).
* வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், பாடசாலை ஆசிரியர்களுக்கும் அறியத்தரவும்.
 
==மிதிவெடி அல்லது வெடிக்காத வெடிநிலையில் உள்ளவெடிபொருளை ஒருவர் வைத்திருந்தால் எவ்வாறு காப்பாறுவது==
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது