தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
minor- replace Tamil palm leaf manuscript with higher resolution better image.
→‎வரலாறு: add image mangulam tamil brahmi inscription, explanation
வரிசை 49:
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த [[பிராமி எழுத்து]]களில் எழுதப்பெற்றவைகளாகும்.<ref>[[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.</ref> இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.<ref name="தொல்லியல் ">{{cite news | url=http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | title=Students get glimpse of heritage | work=The Archaeological Survey of India | date=நவம்பர் 22, 2005 | accessdate=மே 29, 2012}}</ref> பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் [[தொல்காப்பியம்]] ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 400 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 600 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.<ref>அகழ்வாராய்ச்சி பற்றி ''இந்து'' நாளிதளின் பெப்ரவரி 02, 2005 செய்திக் குறிப்பு: "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur" [http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm]</ref> பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத் தக்க காப்பியம், கி.மு 200 முதல் கி.பி 200 காலப்பகுதியைச் சேர்ந்த [[சிலப்பதிகாரம்]] ஆகும்.
 
[[File:Mangulam inscription.jpg|thumb|[[மாங்குளம் கல்வெட்டு|மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு]], தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது.]]
[[File:Tamil_Inscriptions.jpg|thumb|[[மாங்குளம் கல்வெட்டு|மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு]], தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது. அதன் விளக்கம். ]]
தமிழறிஞர்களும் [[மொழியியல்|மொழியலாளர்களும்]] [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தினதும்]] தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது