ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Reverted 1 edit by 112.134.113.240 (talk) to last revision by AntanO. (மின்)
வரிசை 1:
= '''ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்''' (''Albert Einstein'', [[மார்ச் 14]], [[1879]] - [[ஏப்ரல் 18]], [[1955]]) =
{{தகவல்சட்டம் அறிஞர்கள்
| name = ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
வரி 18 ⟶ 17:
| prizes = [[படிமம்:Nobel prize medal.svg|20px]] [[நோபல் பரிசு]] (1921)<br />கொப்லி பதக்கம் (1925)<br />மெக்ஸ் பிலாங்க் பதக்கம் (1929)
}}
'''ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்''' (''Albert Einstein'', [[மார்ச் 14]], [[1879]] - [[ஏப்ரல் 18]], [[1955]]) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு [[இயற்பியல்]] அறிஞர் ஆவார். [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற [[சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டை]] முன்வைத்ததுடன், [[குவாண்டம் எந்திரவியல்]], [[புள்ளியியற் எந்திரவியல்]] (''statistical mechanics'') மற்றும் [[அண்டவியல்]] ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். [[ஒளிமின் விளைவு|ஒளி மின் விளைவைக்]] கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலில்]] (''Theoretical physics'') அவர் செய்த சேவைக்காகவும், [[1921]]ல் இவருக்கு இயற்பியலுக்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ''ஐன்ஸ்டைன்'' என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. [[1999]] ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட [[டைம் (இதழ்)]], "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== இளமை, கல்லூரி ===
ஐன்ஸ்டைன் [[ஜெர்மனி]]யில், [[வுர்ட்டெம்பர்க்]] இலுள்ள [[உல்ம்]] என்னுமிடத்தில், [[1879]] ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல் சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் [[வயலின்|வயலினும்]] கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய [[திசையறி கருவி]]யொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் [[மாதிரியுரு]]க்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது அகவையிலேயே [[கணிதம்]] படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் [[அறிவியல்]], கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.
 
இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், [[1894]] ல், அவரது குடும்பம் [[மியூனிக்]]கிலிருந்து, [[இத்தாலி]]யிலுள்ள [[மிலான்]] நகரையடுத்துள்ள [[பேவியா]] என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் [[சுவிட்சர்லாந்து]]க்கு அனுப்பப்பட்டார். [[1896]]ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் [[சூரிச்]] நகரிலுள்ள [[சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்|சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். [[1898]]ல் [[மிலேவா மாரிக்]] என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். [[1900]] இல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். [[1901]] இல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாவை திருமணம் செய்துகொள்ளாமலே, அவர்மூலம், லிசேர்ள் என்னும் ஒரு மகள் [[1902]]ல் பிறந்தார்.
 
=== வேலையும், முனைவர் பட்டமும் ===
 
[[படிமம்:Einstein patentoffice.jpg|right|thumb|1905ல் ஐன்ஸ்டைன் <br />(காப்புரிமை அலுவலகத்தில் பணிபுரிந்த பொழுது)]]
வரி 58 ⟶ 60:
ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|E=mc<sup>2]]</sup> சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் [[வெளிநேரம்|கால-வெளி வரைபடத்தை]] வரைய ஏதுவாகிறது. இது [[காலப் பயணம்]] போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது.
 
=== ஐன்ஸ்டைனின் படைப்புகள் ===
=== Complied by ANANTHALOGESWARAN KURUSIKAN. ===
* ''சிந்தனைகளும் கருத்துக்களும்'' ISBN 0-517-00393-7
* ''உலகம் எனது பார்வையில்'' ISBN 0-8065-0711-X (மெயின் வெல்ட்பில்டின் மொழியாக்கம்)
* ''Relativity: The Special and General Theory'' ISBN 0-517-88441-0 ([http://www.gutenberg.net/browse/BIBREC/BR5001.HTM Project Gutenberg E-text])
* "''[http://www.fourmilab.ch/etexts/einstein/specrel/www/ On the Electrodynamics of Moving Bodies]''" [[Annalen der Physik]]. [[June 30]], [[1905]]
* "''[http://www.fourmilab.ch/etexts/einstein/E_mc2/www/ Does the Inertia of a Body Depend Upon Its Energy Content?]''". [[Annalen der Physik]]. [[September 27]], 1905.
* "''[http://alberteinstein.info/gallery/pdf/CP6Doc3_English_pp16-18.pdf புருசிய அறிவியல் கழகத்தில் ஆற்றிய முகப்புரை]''". 1914. [PDF]
* "''[http://hem.bredband.net/b153434/Works/Einstein.htm The Foundation of the General Theory of Relativity ]''". Annalen der Physik, 49. 1916.
* "''[http://www.monthlyreview.org/598einst.htm ஏன் பொதுவுடைமை,]''" ''[[Monthly Review]]'', May, 1949.
* "''[http://www.alberteinstein.info/db/ViewImage.do?DocumentID=34170&Page=1 ஈர்ப்புவிசையின் பொது கோட்பாட்டு பற்றி]''". April, 1950.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சர்வதேச இயற்பியல் ஆண்டு 2005]]
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
* [[ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை]]
 
== வெளி இணைப்புகள் ==
{{commons|ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்}}
{{wikiquote|ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்}}
{{wikiquote|ஐன்ஸ்டீன்}}
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/02/050207_einstein.shtml அல்பர்ட் ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகள் பற்றிய பி.பி.சி. தரவு] (தமிழில்)
* [http://www.westegg.com/einstein/ ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒன்லைன்]
* ''புகழ்பெற்ற உரைகளின் ஒலிப்பேழைகள்:''
** [http://www.time.com/time/time100/poc/audio/einstein1.ram E=mc<sup>2</sup> மற்றும் தொடர்பியல்]
** [http://www.time.com/time/time100/poc/audio/einstein2.ram Impossibility of atomic energy]
** [http://www.time.com/time/time100/poc/audio/einstein3.ram arms race]
* [http://www.nobel.se/physics/laureates/1921/press.html 1921 நோபல் பரிசு]
* [http://www.muppetlabs.com/~breadbox/txt/al.html தொடர்பியல் கொள்கை]
* [http://www.pbs.org/wgbh/amex/truman/psources/ps_einstein.html ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டைன் எழுதிய கடிதம்]
* [http://web.archive.org/20040810044240/foia.fbi.gov/foiaindex/einstein.htm FBI கோப்புகள்]
* [http://www.bbc.com/tamil/science/2016/02/160212_gravitational_waves ஐன்ஸ்டீன் சொன்ன ஈர்ப்புவிசை அலையை விஞ்ஞானிகள் 'கண்டுபிடித்தனர்']
* [http://www.bbc.com/tamil/science/2016/02/160212_gravitygraphics ஈர்ப்பு சக்தி அலைகள் ஏன் முக்கியமானவை?- ஐந்து காரணங்கள்]
 
{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}
 
[[பகுப்பு:1879 பிறப்புகள்]]
[[பகுப்பு:1955 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது