தென் அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: clean up, replaced: [[வெப்பமண்டலம்| → [[வெப்ப வலயம்|
வரிசை 23:
இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 371,090,000 மக்கள் வசிக்கிறார்கள் (2005 கணக்கெடுப்பின்படி). பரப்பளவில் [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], [[வட அமெரிக்கா]]வை அடுத்து உலகின் நான்காவது பெரிய கண்டமாகவும் மக்கள்தொகைப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, [[ஐரோப்பா]], வட அமெரிக்கா கண்டங்களை அடுத்து உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் விளங்குகிறது.
பெரும்பாலான மக்கள் மேற்கு அல்லது கிழக்கு கடற்கரையோரங்களில் வசிக்கின்றனர்; உட்பகுதிகளிலும் தென்கோடியிலும் மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதியிலும் [[அந்தீசு மலைத்தொடர்]] அமைந்துள்ளது; இதற்கு எதிராக, கிழக்குப் பகுதி மேட்டுப்பகுதிகளுடன் பரந்த ஆற்றுப் படுகைகளையும் கொண்டுள்ளது. இங்கு பாயும் முதன்மையான ஆறுகளாக [[அமேசான் ஆறு|அமேசான்]], [[பரனா ஆறு|பரனா]] மற்றும் [[ஓரினோகோ]] உள்ளன. கண்டத்தின் பெரும்பகுதி [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்|வெப்ப மண்டலத்தில்]] அமைந்துள்ளது.
 
இந்தக் கண்டத்தில் பலதரப்பட்ட பண்பாட்டு, [[இனக் குழு]] மக்கள் வாழ்கின்றனர்; [[அமெரிக்க முதற்குடிமக்கள்|தென்னமெரிக்காவின் முதற்குடிகளைத்]] தவிர ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மக்கள் இங்கு வாழ்கின்றனர். ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்ற அரசுகளின் தாக்கத்தால் பெரும்பாலான தென் அமெரிக்கர்கள் [[இலத்தீன்]] மொழிவழி தோன்றிய [[போர்த்துக்கேய மொழி|போர்த்துகேயம்]] அல்லது [[எசுப்பானியம்]] பேசுகின்றனர். இதனால், தென் அமெரிக்கா, ''[[இலத்தீன் அமெரிக்கா]]'' என்றும் அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்க சமூகங்களும் நாடுகளும் மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை பின்பற்றுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தென்_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது