பட்டாம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி clean up, replaced: [[வெப்பமண்டலம்| → [[வெப்ப வலயம்|
வரிசை 26:
'''பட்டாம்பூச்சி''' அல்லது '''வண்ணத்துப் பூச்சி''' அல்லது '''வண்ணாத்திப் பூச்சி''' (''butterfly'') என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் [[பூச்சி]] இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து [[தேன்|தேனை]] உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புற்ச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் [[உயிரினம்|உயிரின]] வகைப்பாடுகளில் '''லெப்பிடோப்டரா''' (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த [[அறிவியல் பெயர்|அறிவியல் பெயரில்]] உள்ள'' லெப்பிசு'' (Lepis) என்பது [[செதில்]] என்று பொருள்படும், ''தெரான்'' (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் ''செதிலிறகிகள்'' என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் [[இரவு|இரவில்]] இரை தேடும் [[விட்டில் பூச்சி]]களும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை [[இயோசீன்]] சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது<ref name=halletal2004>{{cite journal | author = Hall J.P.W., Robbins R.K., Harvey D.J. | year = 2004 | title = Extinction and biogeography in the Caribbean: new evidence from a fossil riodinid butterfly in Dominican amber | url = | journal = Proceedings of the Royal Society B | volume = 271 | issue = 1541| pages = 797–801 | doi = 10.1098/rspb.2004.2691 | pmid=15255097 | pmc=1691661}}</ref>.
 
பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது [[பப்புவா நியூகினி]] நாட்டில் காணப்படும் ''குயின் அலெக்ஸாண்டிரா'' என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். [[அமெரிக்கா]]வில் காணப்படும் ''மேற்குக் குட்டிநீலம்'' எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் [[வெப்பமண்டலம்வெப்ப வலயம்|வெப்ப மண்டலக் காடுகளில்]] வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் ([[இமய மலை]]யிலும்), [[கனடா]]வின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் [[வெப்பம்]] நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. இப்பூச்சிகள் [[பல்லுருத்தோற்றம் (உயிரியல்)|பல்லுருத்தோற்றத்தை]] வெளிப்படுத்தினாலும் ஒன்றைப் போல மற்றொன்றின் தோற்றம், பண்புகள், ஒலியெழுப்புதல், இருப்பிடம் முதலியவற்றில் ஒன்றுபட்டு வண்ணத்துப்பூச்சிகளாகவே காணப்படுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ [[மீட்டர்|மீட்டருக்கும்]] அதிகமான தொலைவு) [[வலசை]]யாகப் பறந்து செல்கின்றன (எ.கா: வட அமெரிக்க செவ்வரசு பட்டாம்பூச்சி (monarch butterfly, மானார்க் பட்டாம்பூச்சி) சிலவகைப் பட்டாம்பூச்சிகள் ஒருசெல் உயிரினங்கள், ஈக்கள், எறும்புகள், முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவை போன்றவற்றுடன் [[ஒட்டுண்ணி]]களாகவும் வாழ்கின்றன<ref name = Brewer>{{cite journal |last=Brewer |first=Jo |author2=Gerard M. Thomas |year=1966 |title=Causes of death encountered during rearing of Danaus plexippus (Danaidae) |journal=Journal of the Lepidopterist's Society |volume=20 |issue=4 |pages=235–238 |url=http://research.yale.edu/peabody/jls/pdfs/1960s/1966/1966-20(4)235-Brewer.pdf |format=PDF |accessdate= 2008-04-13 | laysummary =http://research.yale.edu/peabody/jls/htms/1960s/1966-20(4)235-Brewer.htm }}</ref><ref>{{cite journal |last1=Leong |first1=K. L. H. |last2=Yoshimura |first2=M. A. |last3=Kaya |first3=H. K. |last4=Williams |first4=H. |year=1997 |title= Instar Susceptibility of the Monarch Butterfly (''Danaus plexippus'') to the Neogregarine Parasite, ''Ophryocystis elektroscirrha'' |journal=Journal of Invertebrate Pathology |volume=69 |issue=1 |pages=79–83 |doi=10.1006/jipa.1996.4634 |laysummary=http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6WJV-45S96SB-D&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=7d4874a42d109805f3a1e77129046e4f |pmid=9028932}}</ref>.
 
[[படிமம்:Cethosia cyane.jpg|thumb|250px|இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பட்டாம்பூச்சி]]
வரிசை 60:
(வளரும்)
=== வலசை போதல் ===
பட்டாம் பூச்சிகள் இலங்கையிலிருந்து மதுரைக்கு பருவகாலங்களில் வலசை வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.<ref>[http://tamil.thehindu.com/opinion/reporter-page/இலங்கையிலிருந்து-மதுரைக்கு-வலசை-வரும்-வண்ணத்துப்-பூச்சிகள்-சூழலியல்-பேரவையின்-ஆய்வில்-தகவல்/article7607073.ece| இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல்] தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015</ref>
=== வகைகள் ===
இவற்றில் மதுரைப்பகுதியில் மட்டுமே 70 வகையான பட்டம்பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றில் [[பருபலா வெள்ளையன்]][[, வெண்புள்ளி கருப்பன்]], [[மயில் அழகி]], [[நீல வசீகரன்]] என்பன போன்ற பட்டம்பூச்சிகளும் இவற்றில் அடங்கும்.<ref>http://tamil.thehindu.com/opinion/reporter-page/</ref>
== தற்பாதுகாப்பு ==
பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் சாப்பிட்டுவிடும். ஆனால் பட்டாம்பூச்சிகளை பெரும்பாலும் பறவைகள் வேட்டையாடுவதில்லை. காரணம் அதிக வண்ணங்களோடு பளிச்சென்று இருக்கும் உயிரினங்கள் ஆபத்தானவை எனப் பறவைகளின் மூளையில் பதிவாகி இருக்கிறது.
 
பட்டாம்பூச்சிகள் பெரும் பாலும் நச்சுச்செடிகளின் இலைகளில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த முட்டையிலிருந்து வெளிவரும் இளம் கம்பளிப்புழு, அந்த நச்சு இலைகளைத் தின்றே வளர்கிறது. இதனால், அதன் உடலிலேயே நச்சு கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்துவிடுகிறது. பட்டாம்பூச்சியாக உருவெடுத்த பிறகும் இந்த நச்சுத்தன்மை நீடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தெரியாமல் பறவைகள் பட்டாம்பூச்சியைக் கொத்தித் தின்றால் பறவைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுமாம்.
"https://ta.wikipedia.org/wiki/பட்டாம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது