வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
[[படிமம்:Flying_boat.png|வலது|thumb|பிரான்செஸ்கோ லானா தா தெர்சியின் பறக்கும் படகு கருத்தாக்கம் c.1670]]
17ஆம் நூற்றாண்டில் காற்றுக்கும் எடை உண்டு என்று நிரூபித்த [[கலீலியோ கலிலி]]<nowiki/>யின் ஆய்வுகளிலிருந்து நவீனயுக காற்றை-விட-இலேசான பறத்தல் ஆய்வுகள் ஆரம்பித்தது எனலாம். 1650 ஆண்டுவாக்கில் "சைரனொ தெ பெர்கராச்" தனது புதினங்களில் காற்றைவிட இலேசான ஒரு பொருள் மூலம் வளிமண்டலத்தில் உயர்வது போலவும் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் வெளியேற்றத்தின் மூலம் கீழிறங்குவதாகவும் விவரித்தார்.{{sfn|Ege|1973|p=6}} "பிரான்செஸ்கோ லானா தா தெர்சி" கடல்மட்டத்தில் காற்றழுத்தத்தை அளந்ததுடன், 1670-ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவியல்பூர்வமாக செயல்படக்கூடும் பறத்தல் தத்துவத்தை முன்வைத்தார். அவர் உள்ளிருக்கும் காற்று முழுவதும் வெளியேற்றப்பட்ட உலோகக் கோளங்களை தனது கருதுகோளில் பயன்படுத்தினார்; அவரது கருத்தின்படி அத்தகைய, காற்றுவெளியேற்றப்பட்ட, உலோகக் கோளங்கள் வான்கப்பல்களை காற்றில் தக்கவைக்கும் என்பதாகும். அவர் முன்வைத்த கருதுகோள்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. அதாவது, மேலும் உயரே செல்ல எடைப்பாரங்களை வெளியேற்றுவது மற்றும் உயரத்தைக் குறைக்க ஏற்றம் தரும் கொள்கலனிலிருந்து காற்றை வெளியேற்றுவது.{{sfn|Ege|1973|p=7}} ஆனால் நடைமுறையில், தெ தெர்சியின் கோளங்கள் புறக்காற்றின் அழுத்தத்தில் குலைந்திருக்கும். நடைமுறையில் பயன்படுத்தப்படக்கூடிய ஏற்றம் தரும் பறத்தலுக்கான இயந்திரங்களை செயல்படுத்த அறிவியல் / பொறியியல் முன்னேற்றங்கள் நிகழவேண்டியிருந்தது.
[[File:Montgolfier brothers flight.jpg|thumb|மான்ட்கொல்ஃபியர் சகோதரர்களின் ஊதுபை பறப்பு, 1784]]
 
18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஃபிரான்சின் "மான்ட்கொல்ஃபியர் சகோதரர்கள்" ஊதுபை பறத்தல்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களது ஊதுபைகள் காகிதத்தால் செய்யப்பட்டவையாயிருந்தன. நீராவியை ஏற்றம்-தரும்-வாயுவாகப் பயன்படுத்திய அவர்களது ஆரம்பகால ஆய்வுகள் பெரும் தோல்வியில் முடிந்தன. புகையை நீராவியின் ஒரு வகை என்று தவறாகக் கருதிய இவர்கள், சூடான புகையை தமது ஊதுபைககளில் நிரப்பி பறத்தலில் சில வெற்றிகள் கண்டனர். 1783-ஆம் ஆண்டில் "பிரெஞ்சு அறிவியல் கழகத்தில்" செயல்விளக்கம்தர அழைக்கப்பட்டனர்.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது