தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
பிப்ரவரி 2006-லிருந்து ''[[விண்வெளி ஆய்வுப் பயணம்|விண்வெளி ஆய்வு]], [[அறிவியல்|அறிவியல் ஆராய்ச்சி]] மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருத்தல்'' என்பது நாசாவின் தாரகமந்திரமாகவுள்ளது. செப்டம்பர் 14, 2011 அன்று, புதிய [[விண்வெளி ஏவுத் தொகுதி]]யின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது; இதன்மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இதுவரை செல்லவியலாத தொலைவுகளுக்கெல்லாம் செல்லவியலும் எனவும், எதிர்காலத்தில் மனிதர் செல்லும் விண்வெளி ஆய்வுகளுக்கு புதுபெரும் தொடக்கமாக இருக்குமெனவும் [[தேசிய விண்பயண அறிவியல் மற்றும் விண்வெளி மேலாண்மை நிறுவனம்|நாசா]] அறிவித்துள்ளது.
 
[[அக்டோபர் 1]] [[1958]] அன்று செயல்படத் தொடங்கிய இவ்வமைப்பு, அன்றிலிருந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளைச் செய்துவருகிறது. குறிப்பாக [[அப்பல்லோ திட்டம்]], [[ஸ்கைலேப்|விண்ணாய்வகம்]] (''Skylab'') எனும் விண்வெளி நிலையம், [[விண்ணோடம்|விண்ணோடத்]] திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தற்போது [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலைய]]த்துக்கு பலவிதங்களில் ஆதரவளித்துவருகிறது, [[ஓரியான் பல்நோக்க குழு வாகனம்]] மற்றும் வணிகரீதியிலான குழு மேம்பாடு போன்ற திட்டங்களை முன்னெடுத்துச் செய்துவருகிறது. மேலும் ஆளற்ற விண்பயண ஏவுதல்கள் அனைத்தையும் இதுவே கண்காணிக்கிறது.
 
[[புவி அவதானிப்புத் தொகுதி]] மூலம் புவியை மேலும் புரிந்துகொள்ளுதல், அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் பரிதியியற்பியல் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் [[பரிதியியற்பியல்]] ஆய்வுகளை மேற்கொள்ளுதல், [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்ப]]த்திலுள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் ஆளற்ற [[விண்ணுளவி]]கள் அனுப்பி ஆராயந்தறிதல், [[பெரு வெடிப்புக் கோட்பாடு]] போன்ற [[வானியற்பியல்]] கோட்பாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை நாசா செய்துவருகிறது. மேலும் இவ்வமைப்பு கண்டறியும் தரவுத்தொகுப்புகளை பலநாடுகளின் அமைப்புகளோடும் பங்கீடும் செய்கிறது. விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.