"பொதியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== பொதிகைமலை யாத்திரை ==
[[File:Agasthyamuni.jpg|right|thumb|அகத்திய மலை உச்சியில் உள்ள அகத்தியர் சிலை]]
பொதியமலையில் இருந்துகொண்டு [[அகத்தியர்]] தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன. இந்த மலையின் உச்சியில் அகத்தியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல, வாகனங்கள் செல்ல முடியாத அடர் வனத்தின் வழியே, இரண்டு நாள் இரவு, மூன்று நாள் பகல் என்று கடுமையான நடைபயண யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். 1995 ஆண்டுக்கு முன்வரை [[திருநெல்வேலி மாவட்டம்]] [[பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)|பாபநாசம்]], காரையாறு அணை, [[பாணதீர்த்தம் அருவி]], பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்|களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய]] பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது. இதனால் மலையின் மறுபக்கத்தில் உள்ள [[திருவனந்தபுரம்]] வழியாக பொதிகை யாத்திரை செல்ல, கேரள வனத்துறை அனுமதிக்கிறது. இணையம் மூலம் முன்பதிவு செய்பவர்களிடம், உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி பெற்ற காணிகள் துணையுடன் கேரள வனத்துறை பொதிகைக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிவராத்திரி வேளையிலும், அதன்பின், மே மாதத்தில் மட்டும் இப்பயணத்தை கேரள வனத்துறை அனுமதிக்கிறது. தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்தியரை வேண்டி, பக்தர்கள் அங்கு சிறப்பு பூசைகள் நடத்துவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/article9576737.ece | title=தாமிரபரணி உற்பத்தி கேந்திரத்தில் கடும் வறட்சி: பொதிகை மலை யாத்திரைக்கு கேரள அரசு தடை | publisher=தி இந்து | work=செய்தி | date=2017 மார்ச் 9 | accessdate=9 மார்ச் 2017 | author=அ. அருள்தாசன்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2199130" இருந்து மீள்விக்கப்பட்டது