ஜெரோம் தாஸ் வறுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:00, 13 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஜெரோம் தாஸ் வறுவேல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஆவார்.

பிறப்பும் தொடக்க காலக் கல்வியும்

1951 அக்டோபர் 21ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட த்தில் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் வெள்ளியாவிளை ஊரில் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். 1964, மே மாதம் 24ஆம் நாள் இவர் கோட்டாறு மறைமாவட்டத்தின் புனித ஞானப்பிரகாசியார் தொடக்கநிலை குருத்துவ கல்விக்கூடத்தில் சேர்ந்து, நாகர்கோவில் கார்மல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, 1967ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1967 ஜூன் முதல் 1968 மார்ச்சு வரை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பல்கலை முற்படிப்பினை முடித்தார்.

மேல்நிலைக் கல்வி

இரு ஆண்டுகள் புகுநிலைக் கல்விக்குப் பின், 1970, ஜூன் 12ஆம் நாள் பூவிருந்தவல்லி தூய இதயக் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

அக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் மெய்யில் படிப்புக்குப் பின், அவர் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் 1973 ஜூலை முதல் 1976 மார்ச்சு வரை கல்விபயின்று, பொருளியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

சலேசிய சபை உறுப்பினர்

குருவாகப் பணிசெய்ய விரும்பிய அவர் அப்பணியைத் தனிப்பட்ட முறையில் ஆற்றிட இறைவன் தம்மை அழைக்கின்றார் என உணர்ந்து, புனித ஜான் போஸ்கோ நிறுவிய சலேசிய சபையில் சேர்ந்து, 1977இல் புகுமுகப் பயிற்சியைத் தொடங்கினார். 1978ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சலேசிய சபையில் முதல் துறவற வாக்குறுதிகள் அளித்தார். அவருடைய இறுதி வாக்குறுதிச் சடங்கு 1981, மே 24இல் நிகழ்ந் தது.

இறையியல் படிப்பும் குருப்பட்டமும்

பின்னர் ஜெரோம் தாஸ், சலேசிய சபையினர் உரோமை நகரில் நடத்துகின்ற திருத்தந்தை பல்கலைக் கழகத்தில் இறையியல் பயிலுவதற்காக அனுப்பப்பட்டார்.  அதே பல்கலைக் கழகத்தில் அவர் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டமும், கல்விபயிற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1985ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் நாள் ஜெரோம் தாஸ், சலேசிய சபைக் குருவாகத் திருநிலை பெற்றார். அவருக்குக் குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கியவர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்ஆவார்.

இந்தியாவில் பணி

சலேசிய சபைக் குருவாக 1986இல் இந்தியா திரும்பிய ஜெரோம் தாஸ் பல நிலைகளிலும் இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.

1986 – 1990: கோயம்புத்தூர் சார்ந்த வெள்ளக்  கிணறு என்னும் இடத்தில் சலேசியத் துறவறப் புகுமுக இல்லத்தின் துணைத் தலைவர்.

1990 – 1994: அதே நிறுவனத்தின் தலைவர்.

1994 – 1996: திருச்சி நகரில் சலேசிய மாணவர் இல்லத்தின் தலைவர்.

1996 – 2001: சென்னை, அர்மீனியன் தெருவில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் இணைப் பெருங்கோவிலான புனித மரியா ஆலயத்தின் அதிபர் பங்குத் தந்தையாகவும், அதே காலக் கட்டத்தில் சலேசிய சென்னை மறைத்தளத் தலைவருக்கு ஆலோசகராகவும் பணிபுரிதல்.

2003 – 2010: சலேசிய மறைத்தளத்தில், கல்வி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமான “கல்விச் சோலை”யின் இயக்குநர். இந்த ஏழு ஆண்டுகளிலும், உதகை மறைமாவட்டத்தில் ஈரோடு, தலவாடியில் “தொன் போஸ்கோ” நிறுவனம் வழியாக அவர் பழங்குடி மக்கள் நடுவே அயராது பணிபுரிந்தார்.

2010 – 2014: வேலூர் மறைமாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள “இதய தீபம்” சலேசிய துறவறப் புகுமுக இல்லத் தின் அதிபர்-பயிற்சி இயக்குநர்.

குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம்

2014, டிசம்பர் 22: திருத்தந்தை பிரான்சிசு ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்களை குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமித்தார்.

2015, பெப்ருவரி 24: ஜெரோம் தாஸ் வறுவேல், புதிதாக உருவாக்கப்பட் ட குழித்துறை மறைமாவட்ட த்தின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப் பட்டார். ஆயர் பட்ட விழாவிற்குத் தலைமை தாங்கியவர் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ். இணைந்து பட்டம் வழங்கியவர்கள் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி, மற்றும் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரோம்_தாஸ்_வறுவேல்&oldid=2200890" இலிருந்து மீள்விக்கப்பட்டது