ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
==தலவரலாறு==
முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவறுக்காக தந்தை அளித்த சாபத்தின் காரணமாக ’கண்டதேவர்’ என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த வந்த கண்டதேவருக்கு சிவபெருமானுக்கு திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழ, அதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்தார். பெரும்பொருள் செலவிட மன்னர் சம்மதிக்க மாட்டார் எனினும் அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி அழகிய திருக்கோயிலை சிவபெருமானுக்கு எழுப்பினார்.
 
கண்டதேவர் தகவலைத் தெரிவித்தபோது, நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியை பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி. சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரை சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார்.
 
கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்த அமைச்சரைக் கொல்ல ஓங்கிய வாள் மாலையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது. பல கோடி சூரியப்பிரகாசத்தில் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான்.கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.
 
தகவல் அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழைபொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட, அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் உபதேசிக்கப்பெற்றார்.
வரிசை 108:
{{multicol-end}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்| திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்| ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் |97|97}}
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times]]