இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
 
[[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] தமது செய்கைகளை 14 சூன் 1938 அரசாணையில் இவ்வாறு விளக்கியிருந்தார்:
<blockquote> இந்திய தேசிய வாழ்வில் இம்மாநிலம் தனக்கு சரியான இடத்தைப் பெற, நமது கல்விபெற்ற இளைஞர்கள் இந்தியாவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியில் நடைமுறை அறிவு பெற்றிருத்தல் இன்றியமைததாகும். எனவே அரசு நமது மாநில இடைநிலைப்பள்ளி பாடதிட்டத்தில் [[இந்துஸ்தானி]]யைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. எந்தவொரு தொடக்கப்பள்ளியிலும் இந்திப்பாடம் இருக்காது, [[தாய்மொழி]]யில் மட்டுமே கற்பிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த அரசு விரும்புகிறது. [[இந்தி]] இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே அதுவும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிவங்களில், அதாவது பள்ளிவாழ்வின் 6வது, 7வது, 8வது ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். எனவே இடைநிலைப்பள்ளிகளிலும் [[தாய்மொழி]]க் [[கல்வி]]க்கு இது எந்தவிதத்திலும் குறிக்கீடாக இருக்காது. [[இந்தி]] வகுப்புகளில் வருகை கட்டாயம் என்றளவில் மட்டுமே கட்டாயமே தவிர மாணவர்கள் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]] அல்லது [[கன்னடம்|கன்னடத்திற்கு]] மாற்றாக இந்திப் பாடத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றில் ஒன்றுடன் கூடுதலாகவே இந்தியைப் பயிலவேண்டும்.<ref name="ramaswamy421"/></blockquote>
 
அவர் போராட்டக்காரர்களின் குறைகளைக் கேட்க மறுத்தார். அவர்கள் தங்கள் "ஆரிய எதிர்ப்பு சாய்வு"களாலும் "காங்கிரசு வெறுப்பினாலும்" தூண்டப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறினார்.<ref name="ramaswamy421"/> 1,198 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்;அவர்களில் 1,179 பேர் தண்டிக்கப்பட்டனர். சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் மகளிராவர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் (32 குழந்தைகள்) சிறை சென்றனர்.<ref name="sarkar"/>). பெரியாருக்கு ஓராண்டு கடும் உழைப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.<ref name="baliga2">{{cite book | first= B. S. | last=Baliga| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Tamil Nadu district gazetteers, Volume 2|edition= | publisher=Superintendent, Govt. Press| location= | id= | pages=85| url=http://books.google.com/books?id=M2VDAAAAYAAJ}}</ref> போராட்டக்காரர்களின் கூட்டங்களுக்கு எதிராக [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] [[இந்துஸ்தானி]] ஆதரவு கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.<ref name="more"/>
வரிசை 313:
 
[[File:Mozhip por Thiyaagigal mandabam 2.JPG|right|thumb|இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் இறந்தவர்களுக்காக சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம்]]
1937-40ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அந்நாள் வரை இந்திய தேசியக் காங்கிரசுக்கு மாகாணத்தில் முக்கிய அரசியல் மாற்றாக இருந்து வந்த [[நீதிக்கட்சி]], போராட்டத்தின் போது [[பெரியார்|ஈ. வே. ராமசாமியின்]] கட்டுப்பாட்டில் வந்தது. திசம்பர் 29, 1938ல் அவர் நீதிக்கட்சியின் தலைவரானார்.<ref name="vasantha2">{{Harvnb|Kandasamy|Smarandache|2005| p=109}}</ref> 1944ல் [[நீதிக்கட்சி]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகமாக]] மாறியது. [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] போன்ற பல திராவிட இயக்கத் தலைவர்களை இப்போராட்டங்களே பொதுவாழ்வுக்கு அறிமுகப்படுத்தின. இப்போராட்டங்கள் சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாயப் பாடமாவதைத் தடுத்து விட்டன.<ref name="ramaswamy421"/><ref name="ramaswamy530"/>
 
1960களில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், 1967 தேர்தலில் காங்கிரசு தோற்று தமிழ்நாட்டில் [[திமுக]] ஆட்சி உருவாகுவதற்கு வழிவகுத்தன. 1967க்குப் பின் திராவிடக் கட்சிகளே தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் [[திமுக]], [[அதிமுக]], [[மதிமுக]] போன்ற அரசியல் கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் பல தலைவர்கள், இப்போராட்டங்களில் மாணவர் தலைவர்களாகப் பங்கேற்றவர்கள். மேலும் திராவிட இயக்கத்தை பிராமண-ஆரிய எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து அதன் வெகுஜன ஆதரவைப் பெருக்கவும் இப்போராட்டங்கள் உதவின. ”தமிழ் மட்டும்” என்ற திராவிட இயக்கத்தின் கொள்கை இறுக்கத்தை சற்றுத் தளர்த்தி, இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தன. தற்சமயம் தமிழகத்தில் நடப்பில் இருக்கும் இருமொழி கல்விக் கொள்கை இப்போராட்டங்களால் உருவானதே.
வரிசை 393:
[[பகுப்பு:தமிழ்நாட்டு அரசியல் வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு சமூக வரலாறு]]
[[பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times]]