ஏ. வி. பி. ஆசைத்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சிறை வாழ்க்கை: bad link repair, replaced: இந்தி எதிர்ப்பு போராட்டம் → இந்தித் திணிப்பு எதிர்ப்புப using AWB
வரிசை 72:
 
* [[1948]]ஆம் ஆண்டு மே திங்கள் 8, 9ஆம் நாள்களில் [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] ''திராவிடர் கழக மாநில மாநாடு'' நடைபெற்றது. அதில் திராவிடநாட்டின் படத்தைத் திறந்து வைத்துச் சொற்பொழிவு ஆற்றினார்.
 
* 1948ஆம் ஆண்டு [[அக்டோபர்]] திங்கள் 23, 24ஆம் நாள்களில் [[ஈரோடு|ஈரோட்டில்]] ''திராவிடர் கழகத்தின் 19ஆவது மாநாடு சிறப்பு மாநாடாகக்'' கூடியது. [[1938]]இல் நடந்த முதல் இந்தித் எதிர்ப்புப் போராட்டங்களில் மரணமடைந்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் படத்தை ஆசைத்தம்பி திறந்து வைத்து உரையாற்றினார்.
 
* [[1949]]ஆம் ஆண்டில் விருதுநகரில் [[பாரதிதாசன்]] தலைமையில் [[திருக்குறள்]] மாநாடு நடைபெற்றது. அதில் பெரியார் ஈ. வெ. இரா, கா. ந. அண்ணாதுரை, [[சோமசுந்தர பாரதியார்]] உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அம்மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக ஆசைத்தம்பி பணியாற்றினார்.
 
வரி 82 ⟶ 80:
 
* [[1950]]ஆம் ஆண்டு [[செப்டம்பர்]] திங்கள் 23, 24ஆம் நாள்களில் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] நடைபெற்ற [[செங்கற்பட்டு]] மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாட்டை ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.
 
* [[திண்டுக்கல்|திண்டுக்கல்லில்]] நடைபெற்ற எழுத்துரிமை, பேச்சுரிமை மாநாட்டிற்கு ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.
[[1961]]ஆம் ஆண்டில் [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வெ. கி. சம்பத்து]] தலைமையில் ஓரணியினர் தி. மு. க.விலிருந்து விலகிச் சென்று [[தமிழ் தேசியக் கட்சி|தமிழ் தேசியக் கட்சியைத்]] தொடங்கினர். அப்பொழுது ஆசைத்தம்பி சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
வரி 118 ⟶ 115:
 
*1948ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்]] பொழுது நடந்த இந்தி எதிர்ப்பு அடையாள மறியலில் கலந்துகொண்டதற்காக விருதுநகர் கிளைச் சிறையில் நான்கு நாள்கள் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டார்.<ref name="a12">திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 14</ref>
 
*[[காந்தியடிகள்]] சுட்டுக் கொல்லப் பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் ''ஐயோ வேகுதே நெஞ்சம்'' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். 1950ஆம் ஆண்டில் அக்கட்டுரையை 12 பக்க நூலாக டி. வி. கலியபெருமாள் என்பவர் தன்னுடைய எரிமலை பதிப்பக்த்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து ''காந்தியார் சாந்தி அடைய...'' வெளியிட்டார். அந்நூலை அன்றைய தமிழ்நாடு அரசாங்கம் தடைசெய்தது. அந்நூலை எழுதியதற்காக ஆசைத்தம்பி, அதனை வெளியிட்டதற்காக டி. வி. கலியபெருமாள், து. வி. நாராயணன் என்பவர் எழுதிய ''அழியட்டுமே திராவிடம்'' என்னும் நூலை வெளியிட்டதற்காக தங்கவேலு ஆகிய மூவர் மீதும் [[இந்திய தண்டனைச் சட்டம்|இந்தியத் தண்டனைச் சட்டத்தின்]] சட்டக்கூறு 153 (அ) இன்படி வகுப்பு விரோதத்தைத் தூண்டியதாக வழக்குத் தொடரப்பட்டது. 1950 சூலைத் திங்களில் [[முசிறி]] நீதிமன்றத்தில் அந்நூலை எழுதியதற்காக ஆசைத்தம்பிக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும், அதனைக் கட்டத் தவறினால், மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆசைத்தம்பியும் பிறரும் மேல் முறையீடு செய்ய பிணையில் வெளிவருதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த முதலிரு நாள்கள் முசிறி நகரக் கிளைச் சிறையிலும் மூன்று நாள்கள் [[திருச்சி]] மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டார். திருச்சிச் சிறையில் ஆசைத்தம்பியையும் அவரோடு கைது செய்யப்பட்ட டி. வி. கலியபெருமாள், து. வி. நாராயணன் ஆகியோரையும் பிணையில் விடுதலை செய்வதற்கு முந்தைய நாள், அவர்களுக்கு மொட்டை போடப்பட்டது. அதனைக் கண்டித்து கா. ந. அண்ணாதுரை தன்னுடைய 30. 7. 1950 நாளிட்ட திராவிட நாடு இதழில் ஆசைதம்பியும் பிறரும் மொட்டைத் தலையோடு இருக்கும் படத்தை வெளியிட்டு '''அகிம்சா ஆட்சியின் அழகினைப் பார்''' என்னும் கட்டுரையை எழுதினார். ஆசைத்தம்பியும் பிறரும் செய்த மேல் முறையீட்டை ஏற்றுக்கொண்ட திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆசைத்தம்பிக்கு '''ஒரு மாத வெறுங்காவல் தண்டனையும் 500ரூபாய் அபதாரம்''' எனவும் தீர்ப்பு வழங்கியது. ஆசைத்தம்பியும் பிறரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து [[சென்னை]] [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திற்கு]] மேல்முறையீடு செய்துவிட்டு, 25 நாள்கள் சிறையில் இருந்தனர்; ஆக மொத்தம் ஒரு மாதம் சிறையில் இருந்தார். மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஆசைத்தம்பியையும் பிறரையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது; அபராதம் கட்டியிருந்தால் திருப்பிக் கொடுக்கும்படியும் ஆணையிட்டது.<ref name="a13">திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 11-23</ref>
 
*[[1975]]ஆம் ஆண்டில் இந்தியாவில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]] அறிவிக்கப்பட்டது. அக்காலத்தில் ஆசைத்தம்பி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.<ref name="a14">திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 30</ref>
 
வரி 163 ⟶ 158:
[[பகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._வி._பி._ஆசைத்தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது