வில்லியம் எர்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் வில்லியம் எர்ழ்சல் என்பதை வில்லியம் எர்செல் என்பதற்கு நகர்த்தினார்
*திருத்தம்*
வரிசை 29:
|children = ஜான் எர்செல் (மகன்)
}}
சேர் '''பிரெடெரிக் வில்லியம் எர்செல்''', '''பிரெடெரிக் வில்லியம் எர்ழ்செல்''' (''Frederick William Herschel'', '''வில்லியம் ஹெர்செல்''')<ref>Hoskin, M. (ed.) (2003) ''Caroline Herschel's autobiographies'', Science History Publications Cambridge, p. 13, ISBN 0905193067.</ref> [[Royal Guelphic Order|KH]], [[Fellow of the Royal Society|FRS]] (<small>German:</small> ''பிரீட்ரிக் வில்கெல்ம் எர்ழ்செல் (Friedrich Wilhelm Herschel)''; நவம்பர் 15, 1738 – ஆகத்து 25, 1822) என்பவர் [[செருமனி]]யில் பிறந்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[வானியல் வல்லுனர்|வானியலாளரும்]], இசைவல்லுனரும் [[கரோலின் எர்ழ்செல்|கரோலின் எர்ழ்செலின்]] அண்ணனும் ஆவார். இவர் கனோவரில் பிறந்தார். இவர் 1757 இல் பிரித்தானிய நாட்டுக்குப் புலம்பெயரும் முன்பு தன் தந்தையைப் போலவே தன் 19 ஆம் அகவையில் கனோவர்ப் படையணியில் சேர்ந்தார்.
 
இவர் 1774 இல் தன் முதல் தொலைநோக்கியைக் கட்டியமைத்தார். பின்னர் ஒன்பது ஆண்டுகள் இரட்டை விண்மீன்களைத் தேடி ஆழ்விண்வெளி ஆய்வில் ஈடுபட்டார். இவரது தொலைநோக்கியின் உயர்பிரிதிறன் மெசியர் வான் அட்டவணையில் உள்ள ஒண்முகில்கள் (ஒளிர்வளிமுகில்கள்) விண்மீன்களின் கொத்துகள் என புலப்படுத்தியது; இவர் 1802 இல் ஒண்முகில்களின் அட்டவணையை வெளியிட்டார் (2,500 வான்பொருள்கள்).மேலும் இவர் 1820 இல் 5,000 வான்பொருள்கள் கொண்ட அட்டவணையை வெளியிட்டார். 1781 மார்ச்சு 13 ஆம் நாள் நோக்கீட்டின்போது ஒரு வான்பொருளை அது விண்மீனல்ல, ஆனால் ஒருகோளெனக் கண்டார். இது யுரேனசு கோளாகும். பண்டைய காலத்துக்குப் பின் முதலில் கண்டறிந்த கோல் இதுவே ஆகும். ஒரே நாளில் இவரது புகழ் ஓங்கியது. இதனால் பிரித்தானிய மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இவரை அரசு வானியலாளராகப் பணியமர்த்தினார். மேலும் அரசு வானியல் கழகத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெருநிதி நல்கி தொலைநோக்கிகளைச் செய்ய ஊக்குவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_எர்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது