கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
}}
 
'''கருநாடகம்''' (கர்நாடகம் , [[கன்னடம்]] : [[:kn:ಕರ್ನಾಟಕ|ಕರ್ನಾಟಕ]]) இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்]] கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கருநாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
கருநாடக மாநிலமானது மேற்கில் அரபிப் பெருங்கடலையும் வட மேற்கில் [[கோவா]]வையும், வடக்கில் [[மகாராஷ்டிரா]]வையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. [[கன்னடம்]] ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது