டெளன் நோய்க்கூட்டறிகுறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 24:
ட்ரைஸமி-21 என்பது முதலில் உருவாகும் செல்லில் 21ம் நிறப்புரியின் எண்ணிக்கை இரண்டிற்கு பதில் மூன்றாய் இருப்பதாகும். இந்த முதல் செல்லிலிருந்து, பிரிந்து பெருகும் அனைத்து செல்களிலும் இப்படி ஒரு அதிகமான நிறப்புரி 21 இருக்கின்றது. இந்த அதிகப்படியான நிறப்புரிகளில் உள்ள [[மரபணு]]க்களின் இயக்கத்தினால் சுரக்கும் தேவைக்கதிகமான [[இயக்குநீர்]]கள் உடலுக்கு ஊறு விளைவிக்கின்றன. இது [[தந்தை|தந்தையின்]] விந்திலோ அல்லது [[தாய்|தாயின்]] கரு முட்டையிலோ 21ம் நிறப்புரி தனியாக இல்லாமல் இரு சோடிகளாய் சேர்ந்திருப்பதால் ஏற்படுகிறது.
== நோயின் நிகழ்தகவு ==
[[படிமம்:Trisomy21 graph.jpg|thumb|தாய்மாரின் வயதைப் பொறுத்து டெளன் நோய்க்குறித் தொகுப்பின் நிகழ்தகவைக் காட்டும் வரைபடம்]]
[[படிமம்:Trisomy21 graph.jpg|thumb|Graph showing probability of Down syndrome as a function of maternal age.]]
[[கருத்தரிப்பு|கர்ப்பம் தரித்திருக்கும்]] தாய்மாரில் பல்வேறு நிலைகளைக் கண்டறியச் செய்யப்படும் [[மீயொலி]] சோதனையின்போது, குழந்தையின் [[முதிர்கரு]] நிலையிலேயே டெளன் நோய்க்குறித் தொகுப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். தாயின் வயது அதிகமாக அதிகமாக இக்குறையுடன் [[குழந்தை]] பிறக்கும் வாய்ப்பும் அதிமாகிறது.
இந்த நோயானது 800 பேருக்கு ஒருவர் என்னும் அளவிலிருந்து, 1000 பேருக்கு ஒருவர் என்னும் அளவுவரை வேறுபடுகின்றது<ref name=NIHestimates>Based on estimates by National Institute of Child Health & Human Development {{cite web |title = Down syndrome rates |url=http://www.nichd.nih.gov/publications/pubs/downsyndrome/down.htm#Questions |archiveurl=http://web.archive.org/web/20060901004316/http://www.nichd.nih.gov/publications/pubs/downsyndrome/down.htm#Questions |archivedate=2006-09-01 |accessdate = 2006-06-21}}
</ref>. [[அமெரிக்கா]]வில் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையமானது (Centers for Disease Control and Prevention) செய்த ஆய்வில், 2006 ஆம் ஆண்டில் 733 குழந்தைகளில் ஒரு குழந்தை இவ்வாறான நோய் நிலையுடன் பிறந்ததாகவும் அந்த வருடத்தில் மொத்தமாக 5429 குழந்தைகள் பிறந்ததாகவும் அறியப்படுகின்றது<ref>{{cite journal |author=Center for Disease Control |title=Improved National Prevalence Estimates for 18 Selected Major Birth Defects, United States, 1999–2001 |journal=Morbidity and Mortality Weekly Report |volume=54 |issue=51 & 52 |date=6 January 2006 |url=http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/mm5451a2.htm |pages=1301–5}}</ref>. மேலும் எல்லாவகையான மனித இனங்கள், வேறுபட்ட பொருளாதார சூழல் கொண்டவர்கள் என அனைவரிலும் ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டது.
 
== பிரச்சனைகள் ==
இந்த டெளன் நோய்க்குறித் தொகுப்பைக் கொண்டவர்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இந்த சிக்கல்களில் இதய ஒழுங்கீனங்கள் (Heart malformation) போன்றன பிறக்கும்போதே இருக்கலாம். [[காக்காய் வலிப்பு]] (Epilepsy) என அழைக்கப்படும் ஒரு வகை [[வலிப்பு]] (Convulsion) நோயானது குழந்தை வளர்ச்சியின் பிந்திய நிலைகளில் ஏற்படக்கூடும்.<br />
"https://ta.wikipedia.org/wiki/டெளன்_நோய்க்கூட்டறிகுறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது