"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,694 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==ஆட்சி அமைப்பு==
உத்தரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றபின் 47 அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்களில் 22 பேர் அமைச்சரவை நிலையுள்ள அமைச்சர்கள். 9 பேர் தனிப்பொறுப்புள்ள மாநில அமைச்சர்கள். அமைச்சர்களில் 5 பெண்களுக்கு இடமளித்துள்ளதோடு ஒரு முஸ்லிம், 3 தலித்துகள் ஆகியோரை நியமனம் செய்துள்ளார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/adityanath-attempts-to-balance-regions-castes-in-his-ministry/articleshow/57719651.cms|title=Adityanath attempts to balance regions, castes in his ministry|language=ஆங்கிலம்|publisher=தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|date=19-03-2017|accessdate=22-03-2017|archiveurl=https://web.archive.org/web/20170320015617/http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/adityanath-attempts-to-balance-regions-castes-in-his-ministry/articleshow/57719651.cms?|archivedate=20-03-2017}}</ref>. கேசவ் பிரசாத் மௌரியா, தினேஸ் சர்மா ஆகியோரை துணை முதலமைச்சர்களாக நியமித்துள்ளார். அமைச்சரவையிலுள்ள 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/other-states/meet-uttar-pradeshs-new-ministers/article17531863.ece|title=Meet Uttar Pradesh's new ministers|language=ஆங்கிலம்|publisher=[[தி இந்து]]|date=19-03-2017|accessdate=22-03-2017|archiveurl=http://archive.is/TJLkc|archivedate=22-03-2017}}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ஆதித்தியநாத் கோராக்பூரிலுள்ள மடத்தின் தலைவராக உள்ளார். அங்குள்ள குடியிருப்பில் எளிமையான முறையில் வாழ்ந்து வருகிறார். அங்கு வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் எதுவுமில்லை. நேரு, மகாத்மா காந்தி, ஆபிரகாம்லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரது புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் படிக்கும் வழக்கம் கொண்டவர். இவர் 400 க்கும் மேற்பட்ட பசுத் தொழுவங்களை (கோசாலா) நடத்தி வருகிறார். அவற்றின் தலைமை ஊழியராக முகமது என்பவர் பணியாற்றி வருகிறார். மடத்திலுள்ள கோவிலின் முதல் பொறியாளராகப் பணியாற்றிய நிசார் அகமது என்பவர் கோயில் அருகேயுள்ள மண்டபம், கடைகள், ஆசிரமம், மருத்துவமனை ஆகியவற்றைத் தான் வடிவமைத்ததாகக் கூறியுள்ளார். ஆதித்தியநாத் இந்துத் தீவிர ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட போதிலும் இவரது மடத்தில் பொறியாளர், காசாளர் உட்பட பல நிலைகளில் முஸ்லிம்கள் பணியாற்றிவருகின்றனர்.<ref>{{cite web |url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1735570|title=உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்|publisher=dinamalar.com|date=22 மார்ச் 2017|accessdate=23 மார்ச் 2017|archiveurl=https://web.archive.org/web/20170322013427/http://www.dinamalar.com/news_detail.asp?id=1735570|archivedate=22 மார்ச் 2017}}</ref>
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2207916" இருந்து மீள்விக்கப்பட்டது