தூக்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ca:Tucà, zh:鵎鵼科
+ படம்:ஹாண்டுராஸ், கொலம்பியா நாடுகளில் கானப்படும் பழுப்புக் கீழ்த்தாடை டூக்கான் (அல்லது)
வரிசை 3:
 
இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றார்போல தலையின் அலுகுப்புறம் பெரியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் [[நாக்கு]] குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும்.
[[படிமம்:Braunr%C3%BCckentukan.jpg|thumb|left|250px|[[ஹாண்டுராஸ்]], [[கொலம்பியா]] நாடுகளில் கானப்படும் [[பழுப்புக் கீழ்த்தாடை டூக்கான்]] (அல்லது) சுவெயின்சன் டூக்கான்]]
 
டூக்கான் பறவைகள் [[பழந்தின்னி]]ப் பறவைகள் எனினும் சிறு [[பூச்சி]]களையும், சிறு [[பல்லி]] போன்ற [[ஊர்வன]] விலங்குகளையும் உண்ணும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இறைச்சல் எழுப்புகின்றன. உறங்கும் பொழுது தன் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டிற்கு ஒருமுறைதான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. [[முட்டை]]யிடும் பொழுது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் [[தூவி]] ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 [[கிழமை]]கள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்கு கொள்ளுகின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நில்ப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொழுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு [[வலசை]]யாகப் போவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/தூக்கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது