மிசிசிப்பிப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Mississippian Underwater Panther ceramic.JPG|right|300px|thumb|மிசிசிப்பிப் பண்பாட்டைச் சேர்ந்த உள்ளீடற்ற மட்பாண்டக் குவளை, found at Rose Mound in [[குரொஸ் கவுண்டி, ஆர்க்கன்சாஸ்]] பகுதியில் உள்ள ரோஸ் மவுண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1400-1600. உயரம்: 8 அங்குலங்கள் (20 சமீ).]]
'''மிசிசிப்பிப் பண்பாடு''' என்பது, ''மண்மேடு கட்டும்'' (mound-building) தொல்குடி அமெரிக்கப் பண்பாடு ஆகும். இது இன்றைய [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நடுமேற்கு ஐக்கிய அமெரிக்கா|நடுமேற்கு]], [[கிழக்கு ஐக்கிய அமெரிக்கா|கிழக்கு]], [[தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா|தென்கிழக்குப்]] பகுதிகளில் ஏறத்தாழ கி.பி 800 தொடக்கம் 1500 வரை நிலவியது. இக்காலப் பகுதி இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்பட்டது. மிசிசிப்பிப் பண்பாட்டு மக்கள் ஐரோப்பாவின் [[செப்புக் காலம்|செப்புக் கால]] மக்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். இப் பண்பாடு, [[மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கு]]ப் பகுதிகளில் உருவானது. கிளை ஆறான [[தென்னசி ஆறு|தென்னசி ஆற்றுப்]] பள்ளத்தாக்கில் நிலவிய பண்பாடுகளும் இக்கால கட்டத்தில் மிசிசிப்பிப் பண்பாட்டின் இயல்புகளைப் பெறத் தொடங்கின. ஏறத்தாழ காலம் கணிக்கப்பட்ட எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் களங்களுமே 1539 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கே மிகக் குறைவான ஐரோப்பியப் பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது இப்பண்பாடு முழுவதும் [[ஐரோப்பியர்]] வருகைக்கு முன்னரே நிலவியதைக் காட்டுகின்றது.
 
 
==பண்பாட்டு இயல்புகள்==
 
மிசிசிப்பிப் பண்பாட்டுக்கு உரிய இயல்புகளாகப் பல இனம் காணப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள எல்லாமே எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் குழுவினருக்கும் பொதுவானவை என்று சொல்ல முடியாது எனினும், அவர்கள் எல்லோருமே இவற்றில் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ பயன்படுத்துவதில் தங்கள் முன்னோரிலும் வேறுபட்டிருந்தார்கள்.
 
# மேற்பகுதி தட்டையான பிரமிட்டு மேடுகள் அல்லது மேடை வடிவ மேடுகளை அமைத்தனர். இவ்வாறான மேடுகள் பொதுவாகச் [[சதுரம்]], [[நீள்சதுரம்]] அல்லது மிக அரிதாக [[வட்டம்|வட்ட]] வடிவில் இருந்தன. இம்மேடுகளுக்கு மேல், வீடுகள், கோயில்கள், அடக்கக் கட்டிடங்கள் அல்லது வேறு அமைப்புக்கள் அமைக்கப்பட்டன.
# [[சோழம்|சோழப்]] பயிர் சார்ந்த [[வேளாண்மை]]. பல பகுதிகளில் மிசிசிப்பிப் பண்பாட்டுத் தொடக்கம் ஒப்பீட்டளவில் பெரும்படியான, செறிந்த சோழப் பயிர்ச் செய்கைத் தொடக்கத்துடன் ஒத்திசைவாக உள்ளது.
# பரவலான வணிக வலையமைப்பு. இது மேற்கில் றொக்கீஸ், வடக்கில் பேரேரிகள், தெற்கில் [[மெக்சிக்கோக் குடா]], கிழக்கில் [[அத்லாந்திக் பெருங்கடல்]] வரை பரந்து இருந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மிசிசிப்பிப்_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது