பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
இவர் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்த இரட்டை விண்மீன்களின் நோக்கிடுகளுக்காகப் பெயர்பெற்றவர். இரட்டை விண்மீன்கள் முன்பே [[வில்லியம் எர்செல்]], [[ஜான் எர்ழ்செல்]], ஜேம்சு சவுத் ஆகியோரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இவை அம்முயற்சிகள் அனைத்தையும் விஞ்சி வென்றார். இவர் மிகப் பேரளவு இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்து 1827 இல் இரட்டை விண்மீன்களுக்கான அட்டவணையை ''Catalogus novus stellarum duplicium'' எனும் பெயரில் வெளியிட்டார்.<ref name=s1/>
 
இவர் புவிப்புற அளக்கையியலிலும் ஆர்வமுடன் இருந்தார். இவர் 1831 இல் published ''Beschreibung der Breitengradmessung in den Ostseeprovinzen Russlands'' எனும் நூலை வெளியிட்டார். இவர் சுத்ரூவ புவிப்புற அளக்கை வில்லைத் தொடங்கி வைத்தார். இது நார்வே சேர்ந்த காம்மர்பெசுட்டில் இருந்து கருங்கடல் வரையிலான பத்து நாடுகள் ஊடாகச் செல்லும் முக்கோணமுறை அளக்கைக்கான 2,820கி.மீ நீளத்தினும் விஞ்சிய தொலைவுள்ள தொடராகும். இது புவியின் துல்லியமான வடிவத்தையும் உருவளவையும் நிறுவும் மேற்கோள் நீள்வட்டகம் ஆகும். இதை யுனெசுகோ ஐரோப்பிய நினைவுச் சின்ன இடமாக 2005 இல் அறிவித்துள்ளது.<ref>[http://whc.unesco.org/archive/advisory_body_evaluation/1187.pdf Struve Geodetic Arc], UNESCO</ref>
 
==குடும்பம்==