மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
சி removing category per CFD
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி''' (1560 - 1632) கேரள நம்பூதிரி பிராமண குலத்தைச் சேர்ந்தவர். [[வடமொழி]]யில் தொன்றுதொட்டு பழக்கத்திலிருக்கிற [[ஸ்ரீமத் பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்தை ]] 18000 சுலோகங்கள் கொண்டது) அதே வடமொழியில் கவிநயத்துடன் 1036 சுலோகங்களில் சுருக்கிப் புனைந்தவர்.
 
===வாழ்க்கைக் குறிப்புகள்===
வரிசை 8:
===நாராயணீயம்===
{{முதன்மைக் கட்டுரை|நாராயணீயம்}}
நாராயணீயம் இன்றும் ஆயிரக்கணக்கான தென்னிந்திய இந்துக்களின் இல்லங்களில் தினந்தோறும் பக்தியுடன் பாராயணம் செய்யப்படும் வடமொழி சமயநூல்களில் ஒன்று. பட்டத்திரியை பக்திப் பாதையில் இழுக்கக் காரணமாக இருந்தவருக்கே [[பக்கவாத நோய்|பக்கவாத நோயினால்]] அவதிப்படும்படி நேர்ந்தது. பட்டத்திரி அந்த நோயை தானே வாங்கிக்கொண்டு, குருவாயூரப்பன் சன்னிதியில் 100 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு தசகம் (10 சுலோகங்களுக்குக் குறையாமல் கொண்டது) என்ற கணக்கில், 1036 சுலோகங்கள் இயற்றினார். ஒவ்வொரு தசகம் முடியும்போதும் ஆண்டவனிடம் தான் எடுத்துக் கொண்ட நோயினின்றும் தன்னைக் காக்கும்படி வேண்டும் வாக்கியமும் அந்த சுலோகங்களில் இருக்கும்.
 
நாராயணீயத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட பொருள் ஸ்ரீமத் பாகவதமே. மகா[[விஷ்ணு]]வின் எல்லா அவதாரக் கதைகளும், முக்கியமாக கண்ணன் லீலைகளத்தனையும் உயர்ந்த பக்திப்பெருக்குடனும் உணர்ச்சியுடனும் சொல் அலங்காரங்களுடன் சித்தரிக்கப்பட்ட ஒரு நூல். இலக்கியம் முடியும் 100வது நாள் அவருடைய நோயும் விலகி அவருக்கு ஆண்டவனின் திவ்ய தரிசனமும் கிடைத்ததாம்.
 
நாராயணீயம் ஒரு பக்தி நூல் மட்டுமல்ல. உயர்ந்த வேதாந்தக் கருத்துகள் அந்நூலெங்கும் இழையோடுகின்றன. இக்கருத்துக்கள் அநேகமாக [[அத்வைதம்|அத்வைத]]த்தைச் சார்ந்ததாக இருப்பதால் பட்டத்திரி சுயமாக ஒரு [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைதி]]யா அல்லது அத்வைதியா என்பதில் உரையாசிரியர்களிடையே பட்டிமன்றங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.
வரிசை 36:
* [ http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_16.html நாராயணீயம் முதல் தசகம் தமிழில்]
 
[[பகுப்பு:இந்துசமய நூல்கள்]]
 
[[பகுப்பு:வடமொழி இந்துசமய நூல்கள்இலக்கியம்]]
[[பகுப்பு: வடமொழி இலக்கியம்]]
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மேல்பத்தூர்_நாராயண_பட்டத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது