"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
மாதத்தின் தமிழ்ப்பெயருக்கு மாற்றுதல்
(மாதத்தின் தமிழ்ப்பெயருக்கு மாற்றுதல்)
|speakers = 75 மில்லியன்
|date = 2007
|speakers2 = 220 மில்லியன் முதலாம் மொழி மற்றும் இரண்டாம் மொழியாகப் பேசுவோர் (2010)<ref>[http://www.francophonie.org/IMG/pdf/Synthese-Langue-Francaise-2010.pdf La langue française dans le monde 2010]. ''[[La Francophonie]]''. Retrieved 14 Aprilஏப்ரல் 2010.</ref>
|familycolor = இந்தோ ஐரோப்பியன்
|fam2 = இத்தாலிக்
[[படிமம்:Map-Francophone World.png|thumb|250px|பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகள்]]
 
'''பிரெஞ்சு மொழி''' ({{lang|fr|''le français''}} {{IPA-fr|lœ fʁ̥ɒ̃sɛ||Fr-le_français-fr-ouest.ogg}} அல்லது {{lang|fr|''la langue française''}} {{IPA-fr|la lɑ̃ɡ fʁɑ̃sɛz|}}) ஒரு ரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் ரோமண்டிப் பகுதி, பெல்ஜியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரென்சுவிக் (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், லூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர்.<ref name=CEFAN>{{cite web | title =L’aménagement linguistique dans le monde | work =CEFAN (Chaire pour le développement de la recherché sur la culture d’expression française en Amérique du Nord, Université Laval |language=French | publisher =Jacques Leclerc | url =http://www.axl.cefan.ulaval.ca/ | accessdate = May 19, 2013}}</ref> இவர்களில் பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர்.<ref name=2007_report>{{fr icon}} [http://www.amazon.fr/dp/2098821778 ''La Francophonie dans le monde 2006–2007''] published by the [[Organisation internationale de la Francophonie]]. [http://www.nathan.fr Nathan], [[Paris]], 2007.</ref> ஆபிரிக்காவில், காபொன் (80%),<ref name=2007_report /> மொரீசியசு (78%), அல்ஜீரியா (75%), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் (70%) ஆகிய நாடுகளில் பிரெஞ்சு மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும்,<ref name=CEFAN/> இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="andaman.org">[http://www.andaman.org/BOOK/reprints/weber/rep-weber.htm The World's 10 Most Influential Languages] ''Top Languages''. Retrieved 11 Aprilஏப்ரல் 2011.</ref>
 
இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரெஞ்சு மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரெஞ்சு மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரெஞ்சு மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரெஞ்சு மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரெஞ்சு அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.
 
பிரெஞ்சு மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து ''லா பிரான்கோபோனீ'' எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்.), பெல்ஜியம்(மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து(மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன.<ref>{{cite web|title=The status of French in the world|url=http://www.diplomatie.gouv.fr/en/french-foreign-policy-1/promoting-francophony/the-status-of-french-in-the-world/|work=France Diplomatie|publisher=Ministère des Affaires étrangères|accessdate=13 May 2013|year=2013}}</ref> ஐரோப்பாவில் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரெஞ்சு மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர்.{{Clarify|date=Aprilஏப்ரல் 2013}} இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும்.<ref>{{cite web|url=http://cpfont.on.ca/nav/faq/Why%20learn%20French/default.htm |title=Why learn French |publisher=Canadian Parents For French (Ontario) |date= |accessdate=21 Aprilஏப்ரல் 2010}}</ref> 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரெஞ்சு மொழி பேசுவோரால் ஆளப்பட்டது.) ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி அறிமுகமானது.
 
லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.ledevoir.com/non-classe/69236/agora-la-francophonie-de-demain|title=Agora: La francophonie de demain|accessdate=13 June 2011}}</ref><ref>{{cite web|url=http://www.demographie.auf.org/IMG/pdf/BULLETIN_No_22.pdf |title=Bulletin de liaison du réseau démographie|accessdate=14 June 2011|archiveurl=http://web.archive.org/web/20120426011333/http://www.demographie.auf.org/IMG/pdf/BULLETIN_No_22.pdf|archivedate=26 Aprilஏப்ரல் 2012}}</ref>
 
==புவியியல் பரம்பல்==
பிரான்சிய அரசியலமைப்பின்படி, 1992இலிருந்து பிரெஞ்சு மொழி உத்தியோகபூர்வ மொழியாகும்<ref>{{fr icon}} [http://www.languefrancaise.net/dossiers/dossiers.php?id_dossier=50 Loi constitutionnelle 1992]&nbsp;– {{lang|fr|C'est à la loi constitutionnelle du 25 juin 1992, rédigée dans le cadre de l'intégration européenne, que l'on doit la première déclaration de principe sur le français, langue de la République.}}</ref> (எவ்வாறாயினும் இதற்கு முன்னரான சட்ட வரைவுகளில் இது உத்தியோகபூர்வ மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(1539இலிருந்து)). பிரான்சின் உத்தியோகபூர்வ அரசாங்க வெளியீடுகள் மற்றும் பொதுக் கல்வியில் பிரெஞ்சு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தங்கள் போன்ற சில இடங்களில் இவ்விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. விளம்பரங்கள் வெளிநாட்டு மொழிபெயர்ப்பொன்றைக் கொண்டிருக்கவேண்டும்.
 
பிரெஞ்சு மொழியை விட பல்வேறு பிராந்திய மொழிகளும் மொழி வழக்குகளும் காணப்படுகின்றன. பிராந்திய மொழிகளுக்கான ஐரோப்பியப் பட்டயத்தில் பிரான்சு கையெழுத்திட்டுள்ளது. எனினும், 1958ம் ஆண்டின் அரசியலமைப்புக்கு இது விரோதமாக உள்ளதால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.<ref>[http://www.mercator-research.eu/minority-languages/facts-figures/the-european-charter-for-regional-or-minority-languages-and-education The European Charter for Regional or Minority Languages and Education] ''Mercator'' Retrieved 11 Aprilஏப்ரல் 2011</ref>
 
====சுவிட்சர்லாந்து====
| title=Belgium's new linguistic challenge
| author=[[Philippe Van Parijs|Van Parijs, Philippe]], Professor of economic and social ethics at the [[Université Catholique de Louvain|UCLouvain]], Visiting Professor at [[Harvard University]] and the [[Katholieke Universiteit Leuven|KULeuven]]
| journal=KVS Express (supplement to newspaper [[De Morgen]]) March–AprilMarch–ஏப்ரல் 2006
| pages=Article from [http://www.kvs.be/kvs_express/KVS_EXPRESS_13_WEB.pdf original source (pdf 4.9&nbsp;MB)] pages 34–36 republished by the Belgian Federal Government Service (ministry) of Economy&nbsp;– Directorate–general Statistics Belgium
| url=http://www.statbel.fgov.be/studies/ac699_en.pdf
====இத்தாலி====
 
இத்தாலியின் சிறு பிரதேசமான ஓசுடாப் பள்ளத்தாக்கின் உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு ஆகும்.<ref>{{cite web|url=http://www.regione.vda.it/turismo/la_tradizione/lingue_f.asp |title=Vda.it |publisher=Regione.vda.it |date= |accessdate=21 Aprilஏப்ரல் 2010}} {{Dead link|date=September 2010|bot=H3llBot}}</ref> இப்பகுதியிலுள்ள இத்தாலிய மொழி பேசா மக்களில் பலர் பிரெஞ்சு மொழியின் ஒரு வழக்கினைப் பேசுகின்றனர்.<ref>http://www.fondchanoux.org/risultatisondage_1_0_555.aspx</ref> எனினும் இம்மொழிப் பிரிவுக்கான சர்வதேச முக்கியத்துவம் குறைவாக உள்ளதால் இவர்கள் பிரெஞ்சு மொழியையே எழுத்துத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
 
====ஐக்கிய இராச்சியம் மற்றும் கால்வாய்த் தீவுகள்====
 
ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய சிறுபான்மை மொழியாகவும் குடிப்பெயர்வு மொழியாகவும் பிரெஞ்சு மொழி உள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பிரெஞ்சு மக்கள் 300,000 பேர் உள்ளனர். மேலும், ஆபிரிக்காவிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தோர் பலராலும் இம்மொழி பேசப்படுகிறது. மேலும், பிரெஞ்சு மொழி ஒரு பிரபலமான வெளிநாட்டு மொழியாகவும் கருதப்படுகிறது. 2006ம் ஆண்டின் ஐரோப்பிய ஆணையக அறிக்கையின்படி, ஐக்கிய இராச்சியத்தின் சனன்த்தொகையில் 23%மானோர், பிரெஞ்சு மொழியில் உரையாட வல்லவராய் உள்ளனர்.<ref>{{cite web|url=http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf |title=EUROPA |format=PDF |accessdate=21 Aprilஏப்ரல் 2010}}</ref>
 
1066ல் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து, நவீன மற்றும் நடு ஆங்கிலத்தில் பண்டைய ஆங்கிலம் மற்றும் ஒயில் மொழிகளின் பிரதிபலிப்பைக் காணமுடியும். நோர்மன் மொழி பேசிய இவர்களது தாய்மொழி ஜெர்மானிக் ஆகும். ஐரோப்பாக் கண்டத்துடனான இங்கிலாந்தின் தொடர்புகள் காரணமாக நவீன ஆங்கிலத்திலுள்ள பல சொற்கள் பிரெஞ்சு மூலத்தைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2232197" இருந்து மீள்விக்கப்பட்டது