"விக்கிரகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,471 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''விக்கிரகம்''' எனப்படுவது [[கல்]]லிலோ [[செப்பு]] முதலிய [[உலோகம்|உலோகங்களிலோ]] (மாழைகளிலோ) செய்யப்பட்ட [[கடவுள்]] மற்றும் அருளாளர்களின் உருவச் [[சிலை]] ஆகும். முதலில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் கல்லிலேயே செய்யப்பட்டன. இன்றும் கோயில்களுக்குள் கருவறைக்குள் இருக்கும் மூல மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் பெரும்பாலும் கற்சிலைகளாகவே இருப்பதைக் காணமுடியும். உலோகங்களில் விக்கிரகங்களை உருவாக்கும் கலை பிற்காலத்திலேயே உருவானது. தமிழ்நாட்டில் பிற்காலச் [[சோழர்]] காலத்தில் உலோகத்தில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் பெருமளவில் பயன்பாட்டில் இருந்தன. இன்றைய கோயில்களில் [[திருவிழா]]க் காலங்களில் உலாக் கொண்டுசெல்வதற்காக உள்ள உற்சவ மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் உலோகத்தாலேயே செய்யப்படுவது வழக்கம்.
 
 
[[பகுப்பு:சமயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/223598" இருந்து மீள்விக்கப்பட்டது