பாரதிய ஜனதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 34:
[[சியாமா பிரசாத் முகர்ஜி]]யால் ''இந்து தேசியவாத'' கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு [[பாரதீய ஜனசங்கம்|பாரதிய ஜன சங்]] நிறுவப்பட்டது. காங்கிரசை கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்துடையதாக விளங்கியது. இக்கட்சி, [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின்]] அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது.<ref name="noorani216">{{cite journal |first=A. G. |last=Noorani |title=Foreign Policy of the Janata Party Government |journal=Asian Affairs |volume=5 |date=March–April 1978 |pages=216–228 |jstor=30171643 |issue=4 |doi=10.1080/00927678.1978.10554044}}</ref><ref name=Guha136>Guha, p. 136</ref>
 
[[சம்மு காசுமீர்|ஜம்மு கஷ்மீரை]] இந்தியாவுடன் இணைக்க நடந்த கலவரத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1953 ஆம் ஆன்டுஆண்டு மறைந்ததை அடுத்து, கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் [[தீனதயாள் உபாத்தியாயா|தீனதயாள் உபாத்யாயாவிடம்]] வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்ற அரசியல்வாதிகளுக்கு இவரே வழிகாட்டியாக விளங்கினார். கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் (உபாத்யாயாவையும் சேர்த்து) ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்து வந்தவர்களாதலால், இயற்கையாகவே தேசப் பற்றும், ஒழுக்கமும் கொண்டவர்களாக விளங்கினர்.
 
இக்கட்சி 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. இருப்பினும் தொடர்ந்து வளர்ந்த இக்கட்சி, 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம், பசுவதைத் தடை, ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது, இந்தி மொழியை வளர்ப்பது போன்ற கொள்கைகள் கொண்ட இக்கட்சி,<ref name=Guha??>Guha, p. ??</ref> பல வட மாநிலங்களில் காங்கிரசின் அதிகாரத்திற்கு பெறும் சவாலாகத் திகழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது