"மல்லிகார்ஜுன ராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category 1446 பிறப்புகள்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (தானியங்கிஇணைப்பு category 1446 பிறப்புகள்)
'''மல்லிகார்ஜுன ராயன்''' விஜயநகரப் பேரரசின் பேரரசனாக இருந்தவன். சங்கம மரபைச் சேர்ந்தவன். இவன் தனது தந்தையான இரண்டாம் தேவராயனின் மறைவுக்குப் பின் ஆட்சிபீடம் ஏறினான். இரண்டாம் தேவராயன் ஒரு திறமையான பேரரசனாக விளங்கினான். இவனது காலம் சங்கம மரபினரின் பொற்காலம் எனலாம். எனினும், மல்லிகார்ஜுன ராயன் தனது தந்தையைப் போலன்றி திறமையற்றவனாகவும், ஊழல் நிறைந்தவனாகவும் இருந்தான். தொடக்கத்தில் [[பஹமானி சுல்தான்]], [[ஒரிசா]]வின் அரசன் ஆகியோரின் தாக்குதல்களைச் சமாளித்துப் பேரரசைக் காத்துக்கொண்டான் எனினும், பின்னர் அவனுக்குத் தொடர்ச்சியான பல தோல்விகள் ஏற்பட்டன. கஜபதிகள், [[ராஜமகேந்திரி]]யை 1454 ஆம் ஆண்டிலும், [[உதயகிரி]]யையும், [சந்திரகிரி]]யையும் 1463 இலும் கைப்பற்றிக் கொண்டனர். 1450 இல் பஹமானி அரசுகள், பேரரசின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு தலைநகரத்தையும் அண்மித்தனர். இது ஒருபுறமிருக்கப் [[போத்துக்கீசர்]] [[தென்னிந்தியா]]வுக்குள் நுழைந்தனர். மேற்குக் கரையில் விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல [[துறைமுகம்|துறைமுகங்கள்]] அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந் நிகழ்வுகள் சங்கம மரபின் வீழ்ச்சிக்கு வித்திட்டன.
 
1465 ஆம் ஆண்டில் மல்லிகார்ஜுன ராயனின் ஒன்றுவிட்ட சகோதரனான [[இரண்டாம் விருபக்ஷ ராயன்]] ஆட்சியைக் கைப்பற்றினான். எனினும், இவனும் முன்னவனை விடத் திறமையானவனாக இருக்கவில்லை.
 
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
[[பகுப்பு:1446 பிறப்புகள்]]
1,05,053

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2240322" இருந்து மீள்விக்கப்பட்டது