நொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நொதிகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:GLO1 Homo sapiens small fast.gif|thumb|250px|right|மனித கிளையாக்சலேசு நொதி]]
[[படிமம்:TPI1 structure.png|thumb|250px|டிரையோஸ்-பாஸ்பேட்-ஐசொமெரேசு (Triosephosphate isomerase) என்னும் நொதியம். இது உடலில் உள்ள சர்க்கரைப் பொருளை ஆற்றலாய் மாற்றுவதில் திறம் மிக்கது]]
'''நொதி''' அல்லது '''நொதியம்''' (enzyme) என்னும் [[புரதம்|புரதப் பொருளானது]] உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு [[வினையூக்கி]] ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா [[கலம்|கலங்களின்]] இயக்கத்திற்குத் தேவையான எல்லாவற்றுக்கும் இந் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ் வினையூக்கியாகிய நொதி இல்லாவிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் ஓர் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மாந்தமனித உடலில் 75,000 நொதிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கின்றார்கள்<ref>[http://www.wisegeek.com/what-are-enzymes.htm 75,000 நொதிகள்]</ref>
 
உயிரினத்தின் உடலில் உள்ள எல்லாக் [[கலம்|கலங்களும்]] தேவையான நொதிகளை ஆக்குகின்றன என்றாலும் நொதி ஓர் உயிர்ப்பொருள் அல்ல. நொதி, பிற [[சேர்மம்|சேர்மங்களுடன்]] சேர்ந்து நுட்பச் செறிவு மிகுந்த வேதிப்பொருள் அமைப்புகளை உருவாக்கி அதன் வழியே வேதிவினைகள் நிகழ வழி வகுக்கின்றது. ஆனால் நொதி தன் இயல்பு மாறாமல் இருந்து இறுதியில் விடுபடுகின்றது. ஒரு நொதி ஒரு மணித்துளியில் (நிமிடத்தில்) தன் வினையை [[மில்லியன்]]கணக்கான தடவை செய்ய வல்லது. மாந்த உடலில் 1000 க்கும் மேலான வெவ்வேறு வகை நொதிகள் உருவாகிச் செயல்படுகின்றன. வினைகளை விரைவுபடுத்துவது மட்டுமின்றி, குறிப்பிட்ட வினைகளை மட்டுமே மிக மிகத் துல்லியமாய், தக்க சூழலில் மட்டுமே, பூட்டும் அதற்கான திறவுகோலும் போல் மிகுதேர்ச்சியுடன் இயக்குகின்றது. இத் துல்லியத் தேர்ச்சியானது நொதிகளின் சிறப்பியல்புகளில் ஒன்று. இன்று அறிந்துள்ளதில் நொதிகள் சுமார் 4000 உயிர்-வேதியியல் வினைகளுக்கு அடிப்படையாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது