பேராசிரியர் (தொல்காப்பிய உரை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
" தமிழிலக்கிய உலகில் பேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
தமிழிலக்கிய உலகில் பேராசிரியர் என்ற பெயருடன் பலர் உள்ளனர்.ஆயினும் தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு உரை வகுத்த பேராசிரியர் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். வாழ்வும் காலமும்: பேராசிரியர் என்பது கல்வி,ஒழுக்கம் ஆகியவற்றால் சிறந்து விளங்கியவரைக் குறிக்க எழுந்த பெயர்.இவரது இயற் பெயர் இன்னதென தெரியவில்லை. இவர் கடல் போல் பரந்த புலமையுடையவர்.தொல்காப்பியம் பொருளதிகாரம் முழுமைக்கும் உரைகண்டவர் பேராசிரியர். சைவ சமயத்தைச் சார்ந்தவர்.தம் உரைகளில் நன்னூல்,தண்டி,யாப்பருங்கலம் ஆகிய நூலாசிரியர்களின் கருத்துக்களை எடுத்துக் கூறி மறுக்கின்றார்.எனவே இவர் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனலாம்.(1) கிடைக்காத உரைப்பகுதிகள்: இவர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை எழுதினார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.தற்போது மெய்ப்பாட்டியல்,உவம இயல்,செய்யுள் இயல்,மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே இவரது உரை கிடைக்கின்றது.மற்ற பகுதிகளுக்கான உரைகள் கிடைக்கவில்லை. உரைச் சிறப்புகள்: ' என்றான் ஆசிரியன்' என்று நூலாசிரியரை ஒருமையில் கூறும் ஒரே உரையாசிரியர் இவரே.இவர் உரையால் மெய்ப்பாட்டியலும் உவம இயலும் பெரிதும் விளக்கமடைகின்றன.இளம்பூரணர் மிகச்சுருக்கமாக எழுதியச் சென்றுள்ள இயல்களை எல்லாம் இவர் நன்கு விளக்கியுள்ளார். தமக்கு முன் இருந்த உரையாசிரியர்களின் பெயரையோ நூலாசிரியர்களின் பெயரையோ இவர் கூறுவதில்லை.கருத்துக்களை மட்டுமே கூறி மறுக்கிறார். இவரது உரை விளக்கம்,சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது.இவர் உவம உருபுகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்.தொல்காப்பியர் கூறிய 36 உருபுகளேயன்றி வேறு சில உவம உருபுகள் வரும் என்று குறிப்பிடுகின்றார். மேற்கோள். 1) மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள் பக்கம்-217. உசாத்துணை. 1) முனைவர் தேவிரா தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் ஸ்ரீநந்தினி பதிப்பகம். 2) மு.வை.அரவிந்தன் உரையாசிரியர்கள் மணிவாசகர் பதிப்பகம்.
இந்தப் '''பேராசிரியர்''' [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] உரையாசிரியர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவரது உரைச் சிறப்பும் அறிவுத்திறனும் நோக்கி இவரைப் பிற்காலத்தவர் பேராசிரியர் என்றே அழைத்தனர். இவர் காலத்தால் இளம்பூரணருக்குப் பிற்பட்டவர். இந்தப் பேராசிரியரின் உரை தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களுள் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் எனும் இறுதி நான்கு இயல்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது.
 
இலக்கணத்திற்கு மட்டுமன்றி மாணிக்கவாசகரின் திருக்கோவையார், சங்க இலக்கியமான குறுந்தொகை போன்ற இலக்கியங்களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். இவற்றுள் இவரது குறுந்தொகை உரை கிடைக்கப்பெறவில்லை.
 
இவரது உரையில் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களிலிருந்து]] மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் இவர் அறிந்தனவும், அமைத்தனவுமாக உள்ளன. தொல்காப்பியத்தைத் தழுவி மேலும் இவர் தொகுத்துத்தரும் எடுத்துக்காட்டுகள் இவரது மொழிப்புலமையைக் காட்டுகின்றன. [[அகத்தியம்]] பற்றிய குறிப்புகள் இவரது உரையில் உள்ளன. சிறந்த திறனாய்வு நோக்கில் எதற்கும் நுட்பமான வகையில் சொற்பொருள் தந்து உரை விளக்கம் தருதல் இவரது சிறப்பாகும்.
 
இவரது காலம் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. <ref>இவரது காலம் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்பர். தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997</ref>
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
*தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
==ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியவை==
*[[தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம்]]
*[[இளம்பூரணர்]]
*[[நச்சினார்க்கினியர்]]
*[[தெய்வச்சிலையார்]]
 
[[பகுப்பு:நூலாசிரியர்கள்]]
[[பகுப்பு:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:தொல்காப்பிய உரையாசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேராசிரியர்_(தொல்காப்பிய_உரை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது