அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றைப்படுத்தல் (edited with ProveIt)
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''அறுபது ஆண்டுகள்''' பெரும்பாலான [[இந்து நாட்காட்டி|இந்திய நாட்காட்டி]]களில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
<references />இந்துகளின் ஆண்டுமுறை என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் உள்ள இந்து மக்களும், சில நேரங்களில் பிற மக்களும் பின்பற்றும் நாட்காட்டி முறையாகும். இதில் பல்வேறு மொழியினரும் உள்ளடங்குவர்.
 
== வரலாறு ==
தமிழர்களில் பெரும்பாலான மக்கள் இந்த ஆண்டுமுறைகளையே பின்பற்றினாலும், அவை தமிழ்ப் பெயர்களில் இல்லாத நிலையில் அவை எந்த வகையிலும் பயனுள்ளதாக இருந்ததில்லை. {{cn}}
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)<ref>{{cite web | url=https://books.google.lk/books?id=PFTGKi8fjvoC&pg=FA25Press&redir_esc=y#v=onepage&q&f=false | title=Subbarayappa, B.V. (1989), Indian astronomy: a historical perspective. In: Biswas, Mallik, Vishveshwara (eds.), "Cosmic Perspectives", Cambridge University, ISBN 978-0-521-34354-1 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், [[வராகமிகிரர்|வராகமிகிரரின்]] பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite web | url=http://satva.blogspot.com/2011/12/effects-of-samvatsaras.html | title=THE EFFECTS OF SAMVATSARAS | date=19 டிசம்பர் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017 | author=Jorge Angelino}}</ref>
 
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது '''சம்வத்சரங்கள்''' என்று அழைக்கப்படுகின்றன. [[இராசிச் சக்கரம்|இராசிச்சக்கரமூடு]] சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், [[வியாழன்]] கோள் இயங்கும் ஒரு காலவட்டம் [[சோதிடம்|சோதிட]] ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.<ref name = time/> ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.<ref name="jyoti">{{cite book | url=https://books.google.lk/books?id=hdI7AQAAMAAJ | title=The Obscure Text of the Jyotisha Vedânga Explained | publisher=Indian Press | year=1907}}</ref><ref name="time">{{cite book | url=https://books.google.lk/books?id=wwEVAAAAIAAJ | title=Time Measurement and Calendar Construction | publisher=Brill Archive | pages=84}}</ref>
பெரும்பாலான சோதிடர்கள் சாதகங்கள் குறிப்பதற்கும் நாள் குறிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். 60 ஆண்டுகள் ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள சில இந்துகளும், பிற சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் ஆண்டுமுறையைப் பற்றி பெரிதும் கருதுவது கிடையாது; மாதங்கள், தேதிகள், கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி போன்றவற்றை கருத்தில் கொள்வர்.
 
== தமிழகமும் அறுபது ஆண்டுகளும் ==
தமிழ்ப்புத்தாண்டு போன்ற பல விழாக்கள் இந்த தமிழ் ஆண்டுகளின் அடிப்படையில் அமைவனவே. இந்துகளால் பரவலாகக் கொண்டாடப்படும் சஷ்டியப்தப் பூர்த்தி எனும் அறுபதாம் ஆண்டுக்கொண்டாட்டங்களும் இந்த ஆண்டின் அடிப்படையில் அமையும் ஒன்று.
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.<ref>{{cite book | url=https://books.google.lk/books?id=lBhuAAAAMAAJ | title=History of Tamilakam. Darkness at horizon | publisher=Shri Bhagavan Vedavyasa Itihasa Samshodhana Mandira (Bombay, India) | author=T. V. Kuppuswamy (Prof.), ‎Shripad Dattatraya Kulkarni | year=1995 | pages=50}}</ref> எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.<ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178 மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு]</ref> <ref>[http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1104 திருக்கடையூர் கோபுரக் கல்வெட்டு]</ref>
தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" [[இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காடரால்]] பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1511560835/15913-2011-08-02-09-40-20 | title=சித்தர் பாடல் பதிப்புகள் | publisher=கீற்று.காம் | date=2 ஆகஸ்டு 2011 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> [[விவேக சிந்தாமணி]]யிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.<ref>விவேக சிந்தாமணி, மூலமும் உரையும், ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், 159, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, சென்னை 1</ref>
 
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அதற்கு வடமொழிப் பெயர் ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் வைக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.unmaionline.com/new/675-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D.html | title=தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? - டான் அசோக் | publisher=உண்மை ஆன்லைன் | date=16-31, ஜனவரி 2012 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.<ref>{{cite web | url=http://www.dheivathamizh.org/The%20Hindu%20_Tamil%20calendar.pdf | title=Tamil calendar evokes interest | publisher=The Hindu | date=17 மார்ச் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref><ref>http://dheivamurasu.org/தெய்வமுரசு-நற்றமிழ்-நாட்/</ref>
பல பழைமையான தமிழ் நூல்களும், கல்வெட்டுகளும் இந்த தமிழ் ஆண்டுகளையே குறிப்பிடுகின்றன.<ref>http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178</ref><ref>http://www.tamilvu.org/library/l41C7/html/l41C7003.htm</ref><ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=259</ref>
 
[[அபிதான சிந்தாமணி]]யில் (1932) தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்ட ஆண்டுகள் பெயர்கள் வருமாறு :
 
== உத்தம ஆண்டுகள் ==
* பிரபவ
* விபவ
* சுக்கில
* பிரமோதூத
* பிரசோத்பத்தி
* ஆங்கீரச
* சிறிமுக
* பவ
* யுவ
* தாது
* ஈசுவர
* வெகுதானிய
* பிரமாதி
* விக்ரம
* விச
* சித்திரபானு
* சுபானு
* தாரண
* பார்த்திப
* விய
 
== மத்திம ஆண்டுகள் ==
* சர்வசித்த
* சர்வதாரி
* விரோதி
* விகிர்தி
* கர
* நந்தன
* விசய
* சய
* மன்மத
* துன்முகி
* [[ஏவிளம்பி ஆண்டு|ஏவிளம்பி]]
* விளம்பி
* விகாரி
* சார்வரி
* பிலவ
* சுபகிருது
* சோபகிருது
* குரோதி
* விசுவாவசு
* பராபவ
 
== அதம ஆண்டுகள் ==
* பிலவங்க
* கீலக
* சவுமிய
* சாதாரண
* விரோதி கிருது
* பரிதாபி
* பிரமாதீச
* ஆனந்த, இராகூச
* நள
* பீங்கள
* காளயுக்தி
* சித்தார்த்தி
* ரவுத்ரி
* துன்மதி
* துந்துபி
* உருத்ரோத்காரி
* இரத்தாகூசி
* குரோதன்
* அகூய
 
== 60 ஆண்டுகளின் பெயர் பட்டியல் ==
 
தமிழ் ஆண்டுகள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் ஆண்டுகளுக்கு இடப்படுகின்றன. இவற்றில் தமிழ்ப் பெயர்கள் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளவை முன்பு குறிப்பிடப்பட்ட ஆண்டுப்பெயர்கள் தமிழில் இல்லாத காரணத்தினால் தமிழ் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டதாகும். அறுபது தமிழ் ஆண்டுப்பெயர்களை முதல் முதலில் வெளியிட்டவர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ஆவார். தெய்வமுரசு என்னும் ஆன்மிக மாத இதழின் ஆசிரியராக 2009 ஆம் ஆண்டில் அவர் இப்பணியைச் செய்தார்.<ref>http://dheivamurasu.org/தெய்வமுரசு-நற்றமிழ்-நாட்/</ref><ref>"Tamil calendar evokes interest" - "தி இந்து" (ஆங்கிலம்) இணைய பதிப்பு - மார்ச் 17, 2009</ref> எனினும் இவை எந்த அளவிற்கு மக்களால் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை. இது பற்றி அறிஞர்களிடம் பல்வேறு விவாதங்கள் நடத்தேறியும், தமிழர்கள் இவ்வாண்டுமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவார்களா என்பதும், இல்லை திருவள்ளுவர் ஆண்டுமுறையை பின்பற்றுவார்களா என்பதும் தெரியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாறும் பொழுது ஆண்டுமுறைகளும் மாற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
== பட்டியல் ==
{| class="wikitable"
| style="width:20px" | எண்.
வரி 107 ⟶ 40:
| 1987–1988
|
| '''31.'''
| '''ஹேவிளம்பி'''
| '''பொற்றடை'''
| '''Hevilambi'''
| '''2017–2018'''
|-
| 02.
வரி 343 ⟶ 276:
| 21.
| சர்வசித்து
| முற்றறிவு முழுவெற்றி யாவுந்திறல் <ref>(சர்வசித்து முற்றறிவு Sarvajit) வடமொழியில் சித்து என்பதற்கும் ஜித் என்பதற்கும் பொருள் வேறு!</ref>
| ''Sarvajith''
| 2007–2008
வரி 462 ⟶ 395:
|}
 
=== ஆண்டின் தமிழ்ப் பெயர் ஆட்சி ===
மேலே 60 ஆண்டுகளின் பெயருக்கு இணையான தமிழ்ச்சொற்கள் தரப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பாடப்பட்ட பாடல் ஒன்று [[விவேக சிந்தாமணி]] நூலில் உள்ளது. <ref>விவேக சிந்தாமணி, மூலமும் உரையும், ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், 159, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, சென்னை 1,</ref>
 
:ஒருநான்கும் ஈரரையும் என்றே கேளாய் உண்மையாய் ஐயரையும் அரையுங் கேட்டேன்
:இருநான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
:பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டாம் இன்றே
:சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினியென் சகியே மானே. (18)
 
*ஒருநான்கும் ஈரரையும் – நான்கும் இரண்டும் ஆறு – ஆறாவது ஓரை கன்னி – கன்னியே நான் அரையும் சொல்லை நீ கேளாய்
*உண்மையாய் ஐயரையும் சொல்வனவற்றையும் கேட்டேன்.
*இருநான்கு மூன்று – 2 * 4 * 3 = 24 – 24 ஆவது தமிழாண்டு விக்ருதி – இதன் தமிழ்ப்பெயர் வளமாற்றம். - நீ எனக்கு வளமான மாற்றம் (விடை) தரவில்லை.
*என் மொழியைக் கேட்டபடி உன்னை எனக்குக் கொடுத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பெருநான்கு பேறும் பெறுவாய். உன்னிடம் அறுந்து கிடக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கும் பெறுவாய்.
*பெண்ணே!
*பின்னை மேலும் ஒரு மொழி புகலவேண்டாம்.
*இன்றே உன்னைத் தருக.
*சரியாக நான்கு – நான்காவது தமிழாண்டு பிரமோதூத – இதன் தமிழ்ப்பெயர் பேருவகை
*பத்து – பத்தாவது தமிழாண்டு தாது – இதன் தமிழ்ப்பெயர் மாழை – மாழை = தங்கம்
*பதினைந்து – பதினைந்தாவது தமிழாண்டு விசு – இதன் தமிழ்ப்பெயர் விளைபயன்.
*தங்கமே பேருவகையோடு விளையும் பயனைக் காண்.
*சகியே (காதல் கனியே) என் ஆசையை இனிமேல் சகித்துக்கொள்ள முடியாது.
*காதலன் காதலியிடம் இவ்வாறு உரையாடுகிறான்.
 
==குறிப்புகள்==
<references />
{{reflist}}
 
== இவற்றையும் பார்க்க ==
 
* [[தமிழ் மாதங்கள்]]
* [[தமிழ் புத்தாண்டு]]
"https://ta.wikipedia.org/wiki/அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது