கான்வளர் குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Under construction}}
[[File:Mowgli-1895-illustration.png|thumb|[[இரட்யார்ட் கிப்ளிங்]] எனும் எழுத்தாளரின் [[தி ஜங்கிள் புக்]] எனும் புனைகதையில் வரும் பிரதான கதாபாத்திரமான மௌக்லி ஒரு கான்வளர் குழந்தை.]]
'''கான்வளர் குழந்தை''' அல்லது '''காட்டான் குழந்தை''' (''feral child'') என்பது மனிதருக்குரிய நடத்தை, குணம், மொழி மற்றும் மனிதப்பராமரிப்பு ஆகியன பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அற்று மிக இளம் வயதிலேயே மாந்தரின் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வசித்து வந்த குழந்தையைக் குறிப்பதாகும். சில கான்வளர் குழந்தைகள் மக்களாலேயே (பொதுவாக அவர்களது சொந்த பெற்றோர்களால்) வெளியுலகத் தொடர்பு ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். சிலவேளைகளில் குழந்தைகள் கைவிடப்படும் இந்நிகழ்வு அக்குழந்தைகளின் அறிவுசார் அல்லது உடல்சார் குறைபாடுகளைப் பெற்றோர் நிராகரிப்பதன் விளைவாக ஏற்படுகின்றது. கான்வளர் குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்படும் முன்னர் அல்லது வீட்டைவிட்டு ஓடிப்போக முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டு அல்லது முறைகேடான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். கான்வளர் குழந்தைகள் சில நேரங்களில் கிராமியப் புனை கதைகளின் அல்லது மரபுக் கதைகளின் பாத்திரமாக இருக்கிறார்கள். இக்கதைகளில் இவர்கள் பொதுவாக விலங்குகளால் வளர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. [[இரட்யார்ட் கிப்ளிங்]] எனும் புகழ்மிக்க எழுத்தாளரின் [[தி ஜங்கிள் புக்]] எனும் புனைகதையில் வரும் பிரதான கதாபாத்திரமான மௌக்லி ஒரு கான்வளர் குழந்தை.
"https://ta.wikipedia.org/wiki/கான்வளர்_குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது